Monday, September 23, 2013

வேட்டியை தலையில் போடும் கலைஞரும் வேடிக்கையாய் சிரிக்கும் தமிழகமும்!!

தான் வாழத் தமிழினம்
ஊண் இன்றி உயிரை கையில் பிடித்தபடி
ஊரெல்லாம் அகதியாகி அலைந்த வேளை
மானாட மயிலாட பார்த்து
மகிழ்ந்திருந்தார் கலைஞர்


பாசத் தலைவனுக்கு
பாராட்டு விழா நிகழையிலோ
அதிமுக ஆதரவாளர்களை
எட்ட நின்று வேடிக்கை பார்க்க வைத்து
ஏளனமாய் சிரித்தார்

சினிமா நூற்றாண்டு விழாவது
வந்த நேரம்
தனக்கோ அழைப்பில்லை என்று
அநியாயத்திற்கு புலம்புகிறார்
அறிக்கை விட ஏதும் சிக்காதா என
நாள் தோறும் ஏங்குகிறார்

ஒரு நாள் உண்ணா நோன்பு
ஒவ்வோர் தேர்தலிலும்
வெவ்வேறு விதமான
இனித்திடும் இலவசங்கள்
மக்கள் கண் அயரும் வேளை - தன்
மக்கள் வாழ்வு செழிக்க ஊழல் செய்து
பணம் சுருட்டல்
இவை எல்லாம் செவ்வனே செய்தார்
இன்று சினிமா விழாவில்
தன் முன் வினைப் பயனாலோ என்னவோ
தலை கூட காட்ட முடியாதவராக
தடுமாறி நிற்கின்றார்
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆத்தா கூட இப்போதும்
ஐம்பது + வயதில் அரசியலில்
மங்காத்தா ஆடும் வேளையில் - நம்ம தமிழ்
தாத்தா மட்டும் 90+ வயதிலும் - எத்தனை
தோல்விகள் வந்தாலும்
போக மாட்டேன் என
அடம்பிடித்து அரசியல் செய்கிறார்
அவரைத் தொடரும் மக்களையோ
அநியாய அறிக்கை விட்டு
சிரிப்பால் கொல்கிறார்!!

நூற்றாண்டு விழா அழைப்பில்லையே என
மனதுள் புலம்பியபடி
வேட்டியைத் தலையில் போடுகிறார் ஐயா - இச் செயலைப் பார்த்து
வேடிக்கையாய் சிரிக்கிறது தமிழகம்
இனி என்ன சொல்வதற்கு?
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
இன்னும் சில காலத்தில் ஆட்சி மாறும்
ஐயா சினிமாவிற்கு விழா எடுப்பார்
ஆத்தாவை மட்டும் அழைக்காது - மீண்டும்
அதே பழிவாங்கலைச் செய்து மகிழ்வார்
அரசியலில் இதெல்லாம் சகஜமென எண்ணி
அடிக்கடி நாமும் சிரித்து மகிழ்வோம்!!
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

உங்கள் பார்வைக்காக:

கணவன் இறந்ததால் கதறிய 3 மனைவிகள் - உயிருடன் எழுந்த கணவன்

1 Comments:

indrayavanam.blogspot.com said...
Best Blogger Tips

அருமையான கவிதை...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails