Thursday, September 26, 2013

வயசுப் பையனின் வாலிப லீலா விநோதங்கள்!

கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!

பேஸ்புக்கில் லவ் செஞ்சேன் -வாயேண்டி
பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம் என்றேன்
போங்க மச்சான் - எனக்கு சொல்லவே
வெட்கமா இருக்கு என்றால்
என்னாடி விஷயம் என்றேன்?
பேஸ்புக்கில் லவ் செஞ்சால்
புள்ளையெல்லாம் இப்படித் தான்
பிறக்கும் என்றால் - எப்படிடா செல்லம் என்றேன்
அனுப்பினாள் பாவி ஓர் போட்டே - அட நானும்
அதிர்ச்சியில் உறைந்தேன் - சாய்ந்தேன்!!



அடியே சிறுக்கி! பேலன்ஸை உருவுறியே நியாயமா?

வற்றாத நிலாவரை நீரூற்றாய்
உன் நினைவுகள் தொடர்ந்து கொண்டிருக்க
ராணி சோப்பின் சுகந்தமின்றி
சன்லைட் சவர்க்காரத்தின் வெண்மையின்றி
பேபி குளோன் அடித்தும்
உனக்கு பிடிக்காத வாசனை கொண்டவனாக,
லுமாலா சைக்கிளில் சுற்றி வருகிறேன்,

நமக்குள் அடிக்கடி
பொருத்தங்கள் நிகழாதது கண்டு
மலையாண் கடை போண்டா போல
மனம் ஊதிச் சிறுக்கிறது!
டயலாக் மொபைலில் நீ மிஸ்ட் கோல் கொடுத்தபடி
சேவிஸ் தராது பேலன்ஸை உருவும்
BSNL ரெலிபோன் கனெக்சன் போல்
என் பர்சை காலியாக்கிறாய்!!

காதல் பசிக்காக வருவாய்! காத்திருக்கிறேன்!

எப்போதும் போல
இப்போதும் காத்திருக்கிறேன்
வாங்கி உண்ட சுண்டலுக்காகவும்
பாதி பாதியாய் குடித்த
ஐஸ்கிரீமுக்காகவும்
ஓர் நாள் என்னை நீ
தேடி வருவாய் - காதலுடன் அல்ல,
பசியோடு பாவி மகளே!




0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails