Monday, September 16, 2013

காமம் எனும் கண்ணூடு கற்பழிக்கும் நயவஞ்சகர்கள்!

கரை புரண்டோடும்
ஆற்று நீரினை
மடை போட்டு- மறித்து,
அதன் திசை மாற்றும்
நோக்கில் காமுகர்களின் பார்வைகள்!
பீறிட்டுக் கிளம்பும்
பிரவாக நகி(க்) கிளைகளினை
முறித்தெறிந்து, கழிவு நீராக்கி விட
திமிர் பிடித்து அலைகின்றன
கொம்பேறி மூர்(க்)கன்கள்!


உண்மைகளின் உயிர்ப்புக்களின்
பின்னே,
பாத்தி கட்டி
அதன் பொருள் வலிமை சிதைக்க
இங்கே தணிக்கை எனும்
விதி தனித் தேரேறி
உலாவருகிறது,
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
எச்சரிக்கை எனும் உணர்வுகளின்
ஏக்கங்களை அவிழ்த்தெறிய
முடியாதனவாய், என் இராத்திரிகள்
முதலிரவெனும் சுப நாழிகைக்காய்
காத்திருக்கின்றன,

வரம்புடைத்து(ப்) பாயும்
வெள்ள நீராய் கள்ள(க்) காதல்கள்
தோற்றமுறுகின்றன,
அரங்கமெங்கும் அணிவகுப்பு ஏதுமின்றி
அட்ட திக்குகளின் குரல் வளையை நசுக்க
நட்சத்திர மாளிகைகளில்
நடந்தேறுகின்றன மாநாடுகள்!
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
வேண்டத்தகாத உறவொன்றின்
உருமாற்றம் வேண்டிய
கோரிக்கைகள் மட்டும்
இறுமாப்போடு, இப்படி
விரிந்து கொள்கின்றன;

தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!


0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails