Tuesday, September 17, 2013

பிச்சைக்காரி மீது இச்சை கொள்ளும் வக்கிர குணங் கொண்ட தமிழர்கள்!

வக்கிர மனதின் அக்கிரமக் காதல்!

சிதறிய சில்லறைகளை 
பொறுக்கி எடுக்க குனிகிறாள் அவள்
சல்லாப மனதோடு
இச்சை கொண்டு அலைகிறது
ஆடவனின் மனம்! 
வாசற் கதவுகளை
திறந்து வைத்திருக்கிறாய் என
உன் இரு விழிகள் 
கதை பேசுகின்றன - ஆனால்
அனுமதி பெற்று உள்ளே
வர முடியாமல் என் விழிகளோ
உதட்டசைவிற்காக காத்திருக்கின்றன!


சந்திப்புக்களில் ஒடிந்து விழும் சிந்தனை துளிகள்! 

பார்வையால் தீ பற்ற வைத்தாய்
வியர்வையால் உடல் நனைய வைத்தாய்
விலாசமின்றி என்னை தவிக்க வைத்தாய்
மீண்டும் பஸ் ராண்டில் விழியாலே கோலமிட்டாய்!

பதின்ம வயதின் பகற் கனவுகள்

பாவாடை கட்டிய
பைங்கிளிகளின் நினைப்பினால்
பல காற்சட்டைப் பையன்களின் பொழுதுகள்
காவியங்களாக உருப் பெற்றிருக்கிறது!

வேகமான காதல் - தாகமான பார்வை

உன்னை கவிதையாக வடிக்க
காகிதங்களுக்கும் பொறுமையில்லை
இனிமை கொண்டு வார்த்தைகளால்
உன்னழகை அர்ச்சிக்க எனக்கோ நேரமில்லை!
கவிஞனாக நான் ரெடி! கவிதையாக நீ ரெடியா?
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
கவலைப் படாதே!
கண் முன்னே தொலைந்து போன
பருவங்களை மீட்டத் தான்
காதலியாக நீ அருகினில் இருக்கிறாயே!
இனி கார் காலம் கூட
உன் மேனி உரசலால்
காவிய காலமாகலாம்!
எழுதிடத் தான் அருகே புலவனில்லை
எதற்கும் நீ இடங் கொடுக்க மாட்டாய் என்பதனால்
நானோ கவிஞனாகலாம் என
கனவு காண்கிறேன்! 


1 Comments:

டிபிஆர்.ஜோசப் said...
Best Blogger Tips

எல்லா கவிதைகளுமே அழகாக உள்ளன நிரூபன். வாழ்த்துக்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails