Wednesday, September 11, 2013

மீண்டும் ஓர் தமிழீழ யுத்தம் - அதிர்ச்சியில் இலங்கை அரசு

இலங்கையில் ஆயுத ரீதியிலான ஈழப் போரை முடிவிற்கு கொண்டு வந்து விட்டதாக இலங்கை அரசு புளகாங்கிதம் அடைந்தாலும் ஈழ மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. அதே போல ஈழ மக்கள் உணர்வு ரீதியான வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் எனும் கோட்பாட்டினையும் இலங்கை அரசால் இலகுவில் அந்த மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முடியவில்லை. 

இந் நிலையில் அண்மையில் வெளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கை அரசிற்கும், அதனோடு இணைந்து இயங்கும் இனவாதக் கட்சிகளுக்கும் ஒரு மிகப் பெரிய அழுத்தத்தினைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் இலங்கையின் அரசியல் அவதானிகளாலும், அரசியல்வாதிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனம் மீண்டும் ஓர் அஹிம்சை ரீதியான தமிழீழ யுத்தத்திற்கான அறை கூவல் என்றே நோக்கப்படுகின்றது. 
எது எப்படியோ, தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தர்க்க ரீதியில் முன்னெடுத்தால் விடியல் என்பது வெகு தொலைவில் இல்லை! இன்னுமோர் காமெடி என்னவென்றால் இலங்கையின் பௌத்த இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய “ மீண்டும் ஓர் ஈழப் போரை” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்திருக்கிறார்கள். இதனை எதிர் கொள்ள சகல வழிகளிலும் தாம் தயார் என்றும் உளறிக் கொட்டுக்கிறார்கள். 
நவநீதம் பிள்ளையாரின் இலங்கை வருகை, அதனோடு இணைந்த இலங்கையின் அராஜக ரீதியிலான அணுகுமுறை இவை அனைத்தும் தமிழ் மக்களின் போராட்டத்தினையும், இலங்கையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன எனும் உண்மையினை இன்னும் இன்னும் வலுவாகப் பறை சாற்றிக் கொண்டே இருக்கின்றது. காத்திருப்போம்! இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்

உங்கள் பார்வைக்காக:

*பாம்பைத் துடிக்க துடிக்க உண்ணும் ஈனப் பிறவிகள் - வீடியோ இணைப்பு 
*சுடச் சூட பல்லியை உண்ணும் மனிதர்கள் - வீடியோ இணைப்பு 

* கொடுமைப்படுத்திய கணவனைக் கொன்று தின்ற மனைவி 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails