Friday, September 20, 2013

அவமானப்பட்ட கருணாநிதியும் திமுகவை ஓரங்கட்டும் ஜெயலலிதாவும்!!


தமிழ் சினிமா வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு என்றுமே தனித்துவமான மரியாதை உண்டு என்பது நிஜம். ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா” எனும் பாடல் வரிக்கு அமைவாக, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதால் ஈழமக்களும், தமிழக மக்களும் கலைஞர் மீது அளவற்ற வெறுப்பினைக் கொண்டிருந்தாலும் அவரின் சினிமா வசனங்கள் மீது தனிப் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்கள். 

இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
அரசியல் வரலாற்றில் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா எனும் நாமத்திற்கமைவாக, திரையுலகத்தினரால் மிகப் பிரமாண்டமான பாராட்டு விழா கண்ட பெருமைக்குரியவர் கலைஞர். இன்று அவர் நிலை வேறாகியுள்ளது. அம்மா ஜெயாவின் ஆட்சியில் திரையுலகத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் திரைப்பட விழாவில் அழையா விருந்தாளியாக கூட போக முடியாத நிலமை கலைஞருக்கு. 

இதனைத் தான் காலம் என்பதோ? திரையுலகத்தினரால் மிகுந்த மரியாதையுடன் நோக்கப்படுபவரும், அதிகளவான திரையுலக கலைஞர்களின் அன்பிற்குப் பாத்திரமானவருமான கலைஞர் இன்றளவில் ஒரு கௌரவ விருந்தாளியாக கூட போக முடியாதவராக உள்ளார். இதே நிலமை தான் முன்பு சினிமாக் கலை விழாக்களில் கலைஞர் கலந்து கொள்ளும் போது ஜெயலலிதாவிற்கு நிகழ்ந்தது. 

ஆக தமிழகத்தில் இடம் பெறும் இந்த திரைப்பட விழா சொல்லி நிற்கும் செய்தி, இது வெறுமனே திரைப்பட விழா அல்ல. அதிமுக அரசியல் சாயம் பூசப்பட்ட அரசியல் விழா என்பதேயாகும்! 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails