Sunday, September 22, 2013

தமிழக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்

இவ் வருடம் தாய்த் தமிழகம் வாழ் உறவுகளால் அறப் போராட்டம் ஈழ மக்களின் வாழ்வாதாரம் வேண்டி முன்னெடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஏதும் செய்ய இயலாதவர்களாக ஈழ மக்கள் தமிழக மக்கள் முன் மண்டியிட்டார்கள். 

நன்றி என்ற ஒற்றை வார்த்தை மூலம் தமிழச் சொந்தங்களைப் பிரித்துப் பார்க்க இயலாதவர்களாக மௌனித்தார்கள். இன்று என்றும் எம் நேசத்திற்குரிய தமிழகச் சொந்தங்கள் அனைவரினதும் தார்மீகப் போராட்டத்திற்கு. அவர்களின் அரசியல் ரீதியிலான ஆசைகளிற்கு ஈழ மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். 
ஆம். எந்த ஓர் கொள்கையினை முன் வைத்து தமிழகத்தில் சொந்தங்கள் அறப்போர் செய்தார்களோ, அந்தக் கொள்கையினை நேற்றைய தினம் ஈழத்தில் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். வடமாகாணத்தில் அமோக வெற்றியீட்டிருக்கிறது தமிழர் தரப்பு. 80வீதமான வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் தமிழர் தரப்பு தூரத்தே தெரியும் தனி நாட்டிற்கான ஒளிக் கீற்றுக்கு மணி மகுடம் சூடியிருக்கிறது.

எத்தனை இடர்கள் வரினும், எத்தனை அவலங்கள் வரினும் எமது நோக்கம், எமது கொள்கை எல்லாம் தமிழருக்கான தனித் தேசம் பற்றியதே என அறை கூவல் விடுத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள் நிகழ்ந்த இந்த தேர்தல் மூலம்! 

தமிழகச் சொந்தங்களின் முன் செய்வதறியாது மண்டியிட்டு நின்றோம். நன்றி கூடச் சொல்ல இயலாதவர்களாக கை கட்டி மனதுள் அழுதோம். இன்று மாபெரும் தேர்தல் வெற்றி மூலம், தமிழக உறவுகள் காலாதி காலமாக குரல் கொடுக்கும் ஈழத்து அபிலாஷைகளுக்கு ஓர் பதில் சொல்லியிருக்கிறோம். 

உறவுகளே, உங்கள் போராட்டம் வீண் போகாது! ஈழ வாழ் தமிழ் மக்களை வாழ்த்துக்கள்!
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

சர்ச்சைகளின் நாயகி அஞ்சலி கிளிக்ஸ் 

நடிகை சங்கீதா வீட்டில் நிகழும் விபரீதம் - காதோடு சொல்கிறோம்

வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றி 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails