Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Friday, July 4, 2014

தூசு தட்டப்படும் ஒரு பதிவரின் அந்தரங்கம் - விபரம் அறிய விரைந்து வாருங்கள்

வணக்கம் மக்கள்ஸ், எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? ரொம்ப நீண்ட நாளைக்கு அப்புறமா உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..என்ன அப்படிப் பார்க்கிறீங்க..நான் ஒண்ணும் காணாமற் போகவில்லைங்க. வேலை பிஸி..டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படிக் கிடைத்தாலும் அந்த நேரம் புரட்சி எப்.எம் இல் நிகழ்ச்சி தொகுத்து வழங்க செலவாகிடுது. இந்த லட்சணத்தில எப்படி நான் ப்ளாக் எழுத முடியும். 

Wednesday, September 18, 2013

சல்லாப நாயகன் சாருநிவேசிதா - அவதூறுப் பேட்டி!

ஆபாச நாயகனின் அதிரடிப் பேட்டி!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? ரொம்ப பிசியாக, குட்டீஸ் சகிதம், தன் அல்லக்கை குஞ்சுகள் சகிதம் கொலு வீற்றிருந்த சாருநிவேசிதா அவர்களைப் பேட்டி எடுப்பதற்காக, அடியேன் சென்றேன்.

வாசலில் நின்ற அராத்துவும், அகிலாண்டேஸ்வரியும், கேட்கப்படாத பல கேள்விகளைக் கேட்டு என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்கள். ஸப்பா...கேள்வி கேட்கப் போனவன் யான். என் மேல் கேள்விகளா என்று, விலை மதிப்பற்ற டப்பா பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன். இருவருமே கம்மென்று விலகி வழி விட்டார்கள்.

Wednesday, September 11, 2013

திமுக கட்சியின் சகாப்தம் - டவுசர் கிழிந்த அபி அப்பா!

திமுக கட்சியின் தசாப்தம் - சகாப்தம் - பதிவர் அபி அப்பா
பதிவர் அபி அப்பா பற்றி இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை! எல்லோரும் நன்கு அறிவோம். அவருக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு ஒரு பூர்விகத் தொடர்பு என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது அவரைக் கலாய்த்து எழுதா விட்டால் எமக்கும் பொழுது போகாது. அவ்வப்போது ஈழ மக்களை வைத்து கபடி ஆடா விட்டால் அபி அப்பாவின் ப்ளாக்கும் தூசு தட்டப்படாது.

Thursday, September 5, 2013

பரபரப்பூட்டும் பதிவர்களுக்கான ராசி பலன்கள் + கிசு கிசுக்கள்

வணக்கம் நண்பர்களே,  பதிவுலகில் அன்றாடம் தீயா வேலை செய்யும் நாம் ஒவ்வொருவரும் பதிவர்களுக்கான ராசி பலன்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்வாமி பதிவானந்தா அவர்கள் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் ஸ்வாமிஜி அவர்களின் கணிப்பின் பேரில் பதிவர் ராசி பலன்கள் இதோ உங்களுக்காக. 


Tuesday, September 3, 2013

மகா ஜனங்களே நான் அவதூறு சாமியாக போறேன் - வீடியோ எடுக்கலாம் வாங்க!!

இது ஒரு வெவகாரமான பதிவு! 
எங்கள் அன்பிற்கும், பண்பிற்கும் பாத்திரமான சுவாமிஜி ஆரூர் செந்திலானந்தாவின் நேற்றைய பதிவைப் படித்ததன் விளைவு, நானும் ஓர் சாமியாராகலாம் எனும் ஐடியாவை தந்திருக்கிறது. சுவாமிஜி செந்திலானந்தாவின் பணிப்பின் பேரில் ஆஸ்திரேலியாவில் அவருடைய ஓர் ஆச்சிரமக் கிளையினைத் திறக்க முடிவு செய்துள்ளேன். பாவாடை சாமி, பத்மாசன சாமி, கதர் வேட்டி சாமி, அரோகரா சாமி, அப்புசாமி சாமி இந்த சாமியர் வரிசையில் நானும் அவதூறு சாமியாகலாம் என முடிவு செய்துள்ளேன். 

Friday, August 30, 2013

பதிவுலகில் சர்ச்சையை கிளப்பப் போகும் பதிவர் சந்திப்பு

வணக்கம் பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய உறவுகளே, 
உலகின் ஓர் மூலையில் இருந்து, நானும் இச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே எனும் கவலையோடு மிகவும் பிரமாண்டமாக எழுத்துலகால் எதையும் சாதிக்கலாம் எனும் உத்வேகத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது பதிவர் சந்திப்பு சிறக்க சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதிவர் சந்திப்பை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பதிவர்கள் போட்டி போட்டு இக் கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த முண்டியடித்த போதும், குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் தான் இக் கவியரங்கில் இணைத்துக் கொள்ள முடிந்தது. நேரம் போதாமையே இதற்கான காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். வாருங்கள்! கவியரங்கினுள் நுழைவோம்.

Thursday, August 29, 2013

ஆ(மூ)பாசப் பதிவர் நிரூபனை அடியோடு விரட்டுவோம்!!

வாருங்க வலையுலக மக்களே,  பதிவுலகில் யாரோ நிரூபன் என்று ஒரு பய புள்ளை இருக்காராம். அவருக்கு எதிராக தான் இந்த பதிவு அப்படீன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன்! அட என்ன மேல பார்க்கிறீங்க. ஆமாங்க நீங்கள் இங்கே வந்திருப்பது நிரூபனின் நாற்று தளம் தான்! ஆனால் ஒரு விசயம் என்னவென்றால், அடிக்கடி நிரூபன் தன் பேரை மாற்றிக்கிறார். ஆமாங்க நானே தான் நிரூபன் பேசுறேனுங்க! ஒரு பதிவு ஹிட் ஆகனும் என்றால், இப்படி ஏதாச்சும் ஒரு பதிவர் பேரை வைச்சு தீயை பத்த வைச்சாலே போதும். பதிவு பத்திக்கும்! இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Wednesday, August 28, 2013

பட்டய கெளப்ப போகும் பதிவர் மதிசுதாவின் படம்!

போருக்குள் வாழ்ந்த ஒரு சமூகத்திலிருந்து தன் வாழ்க்கையோடு போராடி ஓர் சமூகத்தில் சாதித்துக் காட்டியோர் பலர் உள்ளார்கள் என்றால், அந்தப் பலரினுள் ஒருவராக நம்ம பதிவர் மதிசுதாவும் வந்து கொள்வார். தென் இந்தியா சினிமா வரைக்கும் சுடு சோறு என்ற வன்னி வார்த்தையை கொண்டு சென்று சேர்த்தவர் நம்ம சுதா என்றால் மிகையாகாது. அத்தி பூத்தாற் போல இலங்கையைப் பொறுத்தவரை குறும்படங்களும், முழு நீளத் திரைப் படங்களும் அவ்வப்போது தலை காட்டுவது உண்டு! 

Friday, April 5, 2013

சூடான இடுகையில் சுகமாக குந்துவது எப்பூடி?

எச்சரிக்கை - இது பதிவர்களுக்கு உகந்த பதிவல்ல
தமிழ்மணத்தில் சூடான இடுகை என்றோர் பகுதி இருப்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமாகும். வாசகர் பரிந்துரை, தமிழ்மண மகுடம், வரிசையில் சூடான இடுகையும் ரொம்ப ரொம்ப சிறப்பிற்குரிய பகுதியாகும். 

Thursday, April 4, 2013

திமுகவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பதிவர் அபி அப்பா


ஒரு கற்பனை கலாட்டா காமெடி ஜிம்மி
திமுக கட்சியின் தீவிர விசுவாசிக்கு நிகழ்ந்த கொடுமை! 

மண்ணாங்கட்டி: ஏம்பா பதிவர் பன்னாடை, அந்த அப்பா பதிவரை கொஞ்ச நாளா திமுக அல்லக்கைங்க லிஸ்ட்டில காண முடியலையே! என்னாகியிருக்கும்?
பன்னாடை: ஏலேய் மண்ணாங்கட்டி! இது கூட தெரியாமலா? அவர் திமுகவிற்காக காட்டிய ஓவர் விசுவாசத்திற்காக மூஞ்சில காரி துப்பாத குறையா விரட்டிட்டாங்க.

Wednesday, April 3, 2013

மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய எழுத்தாளர்!


பதிவிற்குள் நுழைய முன்: இப் பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. ஆனாலும் இப் பதிவின் மையக் கருவானது, பதிவுலகில் உள்ள யாரோ ஒருவரின் வாழ்க்கையோடு பொருந்திப் போனால்...அதற்குக் கம்பனி பொறுப்பேற்காது.
சாய்மனைக் கட்டிலில் காலுக்கு மேல் கால் போட்டு, நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு, ஜஸ்போ கிஸ்போ பீடியினைச் சுவைபட இழுத்துப் புகை விட்டுக் கொண்டிருந்தார் ஜெம்புலிங்கம். 
‘’என்னங்க? நான் கூப்புடுறது காதிலை கேட்கலையோ? இப்பூடி எம்புட்டு நாளைக்குத் தான், ஒரு வேலையும் இல்லாமல், சோம்பேறி மாதிரி வூட்டிற்குள் உட்கார்ந்திருந்து, எழுத்தாளாரகப் போறேன்...........எழுத்தாளராகப் போறேன்; ப்ளாக்கராகப் போறேன், ப்ளாக்கராகப் போறேன் என்று ஒன்னுக்கு எண்ணூற்றி எட்டுத் தரம் வாய் ஓயாமல் சொல்லுவீங்க? எனக் கணவன் மீதுள்ள கோபத்தினை பொறி கக்கும் வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தினாள் ஜலசலட்சுமி.

Tuesday, December 11, 2012

பதிவர் நிரூபனின் மிக கேவலமான பக்கம்!

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!
பதிவர் நிரூபனா இப்படி? பதிவுலகம் அதிர்ச்சி!
வணக்கம் தமிழ் பதிவுலகச் சொந்தங்களே, உங்கள் பேராதரவால் உருவாக்கப்பட்ட நாற்று வலைப் பதிவு தற்போது பல மாதங்களாக தூசு தட்டப்படாது இருக்கின்றது. அந்த நாற்று வலைப் பதிவினை எழுதி வந்தவர் தான் இந்த நிரூபனுங்க. அது வேறு யாருமில்லைங்கோ. நான் தானுங்கோ! 
நண்பர்களே...நாற்று வலைப் பதிவில் எழுதுவதை நிறுத்தி , இப்போது http://www.puradsifm.com/ இந்த முகவரியில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே இதுவரை காலமும் நாற்று வலைப் பதிவிற்கு ஆதரவு நல்கும் அன்பு உறவுகள், ஆதரவு நல்கி வந்த சொந்தங்கள் அனைவரும், இப் புதிய வலைப் பதிவிற்கு உங்கள் பங்களிப்பை நல்குமாறு மிக மிகப் பணிவன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
அப்புறம் என்னங்க முறைக்கிறீங்க..வாங்க இங்கே வாங்க. http://www.puradsifm.com/ வந்து ஒரு ரவுண்டு கட்டுங்க! 
அப்புறம் எதுக்குங்க இப்படி ஓர் தலைப்பு என்று யோசிக்கிறீங்களா? அடப் போங்க மக்கள்ஸ்! நல்ல தலைப்பில எழுதும் பதிவுகளை எல்லாம் எவனுங்க படிக்கிறான் இந்த காலத்தில! 

நன்றி உறவுகளே! அங்கே சந்திப்போம்! அங்கேயும் நீங்கள் என்னை பாலோ பண்ணலாம்! மின்னஞ்சல் ஊடாக பதிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்! 

Sunday, August 26, 2012

சென்னைப் பதிவர் சந்திப்பும், சொக்கவைக்கும் டாஸ்க்மாக்கும்

போதையேறிய டாஸ்மாக் பதிவனின் மிட் நைட் அதிரடிப் பதிவு!

வருக தமிழ் உறவுகளே - இங்கே நான் தெளித்திருக்கும்
தெள்ளு தமிழ் கள்ளை அள்ளிப் பருகுக - உங்களால் முயன்றால் கொஞ்சம்
தருக- சியர்ஸ் சொல்லி என்னோடு இணைந்து தமிழ் வாழ்த்து 
தருக! எம் உறவுகளை வாழ்த்த வருக!

Sunday, August 12, 2012

மக்களே உஷார்! உள்குத்து பதிவெழுத ஊர்மிளா கெளம்பிட்டாங்கோ!

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்:  மாத்தியோசி மணி)
_________________________________________________________________________________

Tuesday, August 7, 2012

திமுகவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பதிவர்!

திமுக கட்சியின் தீவிர விசுவாசிக்கு நிகழ்ந்த கொடுமை! 

மண்ணாங்கட்டி: ஏம்பா பதிவர் பன்னாடை, அந்த அப்பா பதிவரை கொஞ்ச நாளா திமுக அல்லக்கைங்க லிஸ்ட்டில காண முடியலையே! என்னாகியிருக்கும்?
பன்னாடை: ஏலேய் மண்ணாங்கட்டி! இது கூட தெரியாமலா? அவர் திமுகவிற்காக காட்டிய ஓவர் விசுவாசத்திற்காக மூஞ்சில காரி துப்பாத குறையா விரட்டிட்டாங்க.

Tuesday, July 31, 2012

ப்ரீயா வுடுறான் கூகுள்காரன்! புகுந்து வெளாடு மாப்புள நீயி!

வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியம் தானேங்க? எல்லோரும் நல்லா வயிறு நெரம்ப சாப்பிட்டு விட்டு, கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருப்பீங்க என்று நெனைச்சிட்டு எழுதுறேன். ஏன்னா நீங்க சாப்பிடும் போது புரையேறி, வாந்தி எடுக்க கூடாது பாருங்க. என்னா மேட்டருன்னா, நான் மறுபடியும் எக்ஸ்பிரஸ் வேகத்தில எழுதலாம் என்று கெளம்பியிருக்கேனுங்க.அட..பலருக்கு இருக்கிற சந்தோசமும் இப்போ இல்லாம போயிருக்குமே என்று நினைக்கையில் ரொம்ப வருத்தமா இருக்குங்க. "ப்ரீயா தானே கூகுள்காரன் வுடுறான்”அதான் நானும் புகுந்து வெளையாடலாம் என்று இறங்கியிருக்கேனுங்க.

Sunday, March 18, 2012

பல்லு வெளக்காத பதிவுலக சங்கிலி திருடனின் கள்ள குறும்புகள்!

சங்கிலி திருடன்! சம்போ ஜம்போ! இட்லி கள்ளன் டப்போ டிப்போ! 
எல்லோருக்கும் வணக்கமுங்கோ!இனிய ஞாயிற்றுக் கிழமை வாழ்த்துக்கள்! ஐடியா மணி வழியில கும்பிடுறேனுங்கோ!!
தமிழ்ப் பதிவர்களிடம்; பல்லு வெளக்காத பன்னாடை யாருன்னு கேட்டா, எல்லோர் விரலும் அந்த ஒருவரைப் பார்த்துத் தான் நீளுமுங்க. ரொம்ப குள்ளமா, கறுப்பு கேலர் கண்ணாடி போட்டுக்கிட்டு மிக நீண்ட பெயருடன் ஒருத்தர் பதிவுலகில் வலம் வருவாரே! அவர் தான் பதிவுலகின் பல்லு வெளக்காத சங்கிலி திருடன். அவர் பெயர் ஐடியா மணி என்று நான் சொல்லி தான் ஒங்களுக்கு தெரியனும் என்கிற அவசியமெல்லாம் கிடையாது என்று நெனைக்கிறேன். இட்லி திருடன், சங்கிலி திருடன், Watermelon thief, பூனைக்குட்டி அபகரிப்பாளன் எனப் பல்வேறுபட்ட திருட்டுப் பட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பவர் தான் இந்த ஐடியா மணி. 

Wednesday, February 8, 2012

ரேவரியின் படைப்புக்கள் பற்றிய விமர்சனம் + ரகசியம்

இயந்திர வேக உலகில் இணையத்தில் படைப்புக்களைப் பகிர்ந்து வரும் பதிவர்களிற்கு இதயங்களை வருடுகின்ற விமர்சனங்கள் இலகுவில் கிடைப்பதில்லை என்றே கூறலாம்.ஒவ்வோர் படைப்பாளியும் தன் படைப்புக்களை மெருகேற்ற எப்போதாவது ஓர் நாள் நல்ல விமர்சனங்கள் கிடைக்காதா எனும் ஏக்கத்தில் காத்திருப்பான்.அத்தி பூத்தாற் போல என்றேனும் ஓர் நாள் ஒரு நிறைவான விமர்சனம் தரமான படைப்பினை நோக்கி முன் வைக்கின்ற போது, படைப்பாளியின் மகிழ்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். வாரந் தோறும் நாற்று வலைப் பதிவின் ஊடாக பதிவர்களின் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை அம்பலத்தார் பக்கம் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு பொன்னர் அம்பலத்தார் அவர்கள் எழுதி வருகின்றார். அவர் இந்த வாரம் தருகின்ற விமர்சனத்தைக் கொஞ்சம் படிப்போமா?

Monday, January 23, 2012

அத்தி பூத்தாற் போல அமைதியாக எழுதும் அபூர்வ பதிவர்!

இயந்திரமயமான உலகில் இன்று எம்முடன் கூட வந்து கொண்டிருப்பவை இலத்திரனியல் ஊடகங்கள் என்றால் மிகையாகாது. எமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காகிதாதிகள் மூலம் உருவாகும் படைப்புக்களை விட, அப் படைப்புக்களின் இலத்திரனியல் வடிவங்களைப் படிப்பதற்கு தான் நேரம் கிடைக்கின்றது. இதனால் புகழ் பூத்த பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாம் இணையத்த்தின் இணையில்லா வளர்ச்சிக்கு ஏற்றாற் போல மின் நூல்களாகத் தம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. வாரந் தோறும் "அம்பலத்தார் பக்கங்கள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களை விமர்சனங்களால் அலங்கரித்து பகிர்ந்து வருகின்றார். அவரது இந்த வார விமர்சனம் யாருடைய படைப்புக்களைத் தாங்கி வருகின்றது என்று பார்ப்போமா?வாருங்கள், பதிவிற்குள் நுழைவோம். 

Friday, January 20, 2012

பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்!

அடுத்தவன் குழந்தைக்கு அப்பனாக நினைக்கும் பதிவர்கள் - ஓர் அலசல்!
"ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடர் பதிவின் ஆறாவது பாகத்தினைப் படிக்க வந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்;
நான்காவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>>
ஐந்தாவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? எல்லோரும் பதிவினைப் படிக்க ரெடியா? ஸ்னாக்ஸ், சிப்ஸ், அப்புறம், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாமே கொண்டு வந்திருக்கிறீங்களா?  வாங்க, வாங்க.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க