Showing posts with label கும்மி. Show all posts
Showing posts with label கும்மி. Show all posts

Friday, August 30, 2013

பதிவுலகில் சர்ச்சையை கிளப்பப் போகும் பதிவர் சந்திப்பு

வணக்கம் பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய உறவுகளே, 
உலகின் ஓர் மூலையில் இருந்து, நானும் இச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே எனும் கவலையோடு மிகவும் பிரமாண்டமாக எழுத்துலகால் எதையும் சாதிக்கலாம் எனும் உத்வேகத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது பதிவர் சந்திப்பு சிறக்க சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதிவர் சந்திப்பை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பதிவர்கள் போட்டி போட்டு இக் கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த முண்டியடித்த போதும், குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் தான் இக் கவியரங்கில் இணைத்துக் கொள்ள முடிந்தது. நேரம் போதாமையே இதற்கான காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். வாருங்கள்! கவியரங்கினுள் நுழைவோம்.

Sunday, March 18, 2012

பல்லு வெளக்காத பதிவுலக சங்கிலி திருடனின் கள்ள குறும்புகள்!

சங்கிலி திருடன்! சம்போ ஜம்போ! இட்லி கள்ளன் டப்போ டிப்போ! 
எல்லோருக்கும் வணக்கமுங்கோ!இனிய ஞாயிற்றுக் கிழமை வாழ்த்துக்கள்! ஐடியா மணி வழியில கும்பிடுறேனுங்கோ!!
தமிழ்ப் பதிவர்களிடம்; பல்லு வெளக்காத பன்னாடை யாருன்னு கேட்டா, எல்லோர் விரலும் அந்த ஒருவரைப் பார்த்துத் தான் நீளுமுங்க. ரொம்ப குள்ளமா, கறுப்பு கேலர் கண்ணாடி போட்டுக்கிட்டு மிக நீண்ட பெயருடன் ஒருத்தர் பதிவுலகில் வலம் வருவாரே! அவர் தான் பதிவுலகின் பல்லு வெளக்காத சங்கிலி திருடன். அவர் பெயர் ஐடியா மணி என்று நான் சொல்லி தான் ஒங்களுக்கு தெரியனும் என்கிற அவசியமெல்லாம் கிடையாது என்று நெனைக்கிறேன். இட்லி திருடன், சங்கிலி திருடன், Watermelon thief, பூனைக்குட்டி அபகரிப்பாளன் எனப் பல்வேறுபட்ட திருட்டுப் பட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பவர் தான் இந்த ஐடியா மணி. 

Saturday, December 24, 2011

குற்றவாளி கூண்டில் கொங்காபுரி பதிவர்கள் - அதிர்ச்சியில் பதிவுலகம்!

கொங்காபுரி பம்பு செட்டு குழுவின் தலமையகத்தில் அவர்களின் அல்லக்கைகள், நொள்ளக் கைகள், அரியணையில் மன்னர் இருக்கிறார் எனும் நினைப்பில் தம் கூட இருக்கும் ஆலவாயன் அழுகைச் செல்வன் ஊதல் மன்னனை உயர்த்தித் துதி பாடுவோர் என அனைவரும் ஐயத்தில் இருக்கிறார்கள். காரணம் நீண்ட நாட்களாக குப்பை குவிந்திருந்த முற்றத்தை கணக்கில் எடுக்காது வயல் ஒன்றை உழுது,  நெல் விதைக்கும் நோக்கில் புதிதாக ஒரு படை கிளம்பியிருப்பதாகவும் இதனால் தம் போன்றோரின் தனி மனித துதி பாடல்கள் யாவும் வெளியுலகிற்கு தெரிய வந்திடும் எனும் அச்ச நிலையிலும் ஆலவாயன் உறைந்து விட்டாராம்.எங்கே! வாருங்கள்! அரங்கிற்குள் நுழைவோம்! அரங்கிலே மன்மதக் குஞ்சு, ஆலவாயன், மாதுமை, பாலகன் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.

Sunday, October 2, 2011

பதிவுலகில் பரபரப்பை ஏற்படுத்தப் போகும், பதிவர்களுக்கு பரவசத்தை கொடுக்கப் போகும் கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின்!

புத்தம் புதிய கண்டு பிடிப்பு!

அகில உலகப் பதிவுலக வரலாற்றில் விற்பனைச் சந்தையில், வசூலில் சாதனை படைத்த- பதிவினைப் படிக்காது கமெண்ட் போடும் நபர்களைக் கண்டறியும் நோக்கில் "மூலக் கருத்தை முகர்ந்து அறி" எனும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நாற்று வலைப் பதிவின் சொந்தக்காரர் செல்வராஜா நிரூபன் அவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட "ஸ்மார்ட் கமெண்ட் பவுண்டர் (SMART COMMENT FOUNDER) சிஸ்டத்தின்" வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது கண்டு பிடிப்பாக நிரூபன் அவர்களின் முயற்சியிலும், நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வடிவமைப்பிலும் பதிவுலகச் சந்தைக்கு வந்துள்ள புத்தம் புதிய மெசின் தான் கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின்! (SMART COMMENT FOUNDER SYSTEM பற்றி அறியாதோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்)

Wednesday, August 10, 2011

பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டி மன்றம்- காமெடி ஜிம்மி

முற் சேர்க்கை: பத்து வருடங்களின் பின்னர் இன்று பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் தமிழகத்தில் ஒன்று கூடுகிறார்கள். முன்னாள் பதிவர்களின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வண்ணம் பதிவர் சந்திப்பு ஒன்றினை வைத்த பின்னர், பட்டிமன்றம் ஒன்று வைத்துத் தமது இளமைக் காலத்தினை 2011ம் ஆண்டில் தாம் பதிவுலகில் என்னவெல்லாம் செய்தோம் என்பதனை மீட்டிப் பார்க்கிறார்கள். இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 


Sunday, June 5, 2011

பதிவர்கள் பரபரப்புடன் மோதும் காமெடி ஜிம்மி! 

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, காமெடியில் ஜிம்மியில் கலந்து கலக்குவதற்காய் ஆவலுடன் வருகை தரும் உங்களை வர வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இன்றும் வழமை போல அக்மார்க் முத்திரை மற்றும் ISO 9001 தரச் சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் அருவாள்களை மத்திய கிழக்கில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாஞ்சில் மனோ கம்பனியின் பிரதான அனுசரணையிலும், 

பிரெஞ்சுப் பிகருங்கள் தும்மும் போது கர்சிப் எடுத்து நீட்டும் வகையில் பறக்கும் கர்ச்சிப்களைத் தயாரித்தும் உலகமெங்கும் விற்பனை செய்யும் 
ஓட்ட வடை நாராயணனின் இணை அனுசரணையிலும் இணைய வலை ஊடாக உங்களை நாடி வரவிருக்கிறது ‘நாற்றின் பாடுக்குப் பாட்டு’ காமெடி ஜிம்மி! 

Sunday, May 1, 2011

பதிவர்கள் மோதிக் கொள்ளும் பாட்டு(க்) கும்மி!

வாரம் தோறும், வானொலிப் பெட்டியருகே காத்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், (அடோய் எடுங்கடா அந்தக் கல்லை....இவனை விரட்டுவோம் என்று ஏசுவது கேட்டு சுய நினைவிற்கு வந்தவனாய்,)
நாற்று வலையேறி உங்கள் மொனிட்டர் திரை வந்து மகிழ்விக்க இருக்கும் பாட்டுக்குப் பாட்டு(ப்) போட்டியுடன் கலந்து கொள்ள ஆவலாக உள்ள அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்!


Saturday, April 23, 2011

பதிவர்களே, உங்களுக்கோர் சவால்- காமெடி ஜிம்மி!

சும்மா இருக்கிற சிங்களையெல்லாம் சீண்டிப் பார்க்கிறதுக்கு நான் ரெடி ஆகிட்டேன். ஹா..ஹா...
 இப்போ மேட்டர் என்னன்னா, இன்னைக்கு ஒரு கல, கல கலக்கல் காமெடி போட்டியை என் வலையில் உங்கள் அனைவரின் ஆதரவோடும் நடாத்தலாம் என்றிருக்கிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க