Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Thursday, April 5, 2012

பதிவுலக பெண் சூப்பர் ஸ்டாரின் பல்சுவைப் பதிவுகள் ஓர் அலசல்!

பதிவுலகில் ஹிட்ஸ் பத்தியும், ரேங் பத்தியும், திரட்டிகள் பத்தியும் கவலைப் படாது மனத் திருப்திக்காகவும், தன்னை நாடி வரும் பதிவர் உள்ளங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கிலும் பல பெண் பதிவர்கள் எழுதி வருகின்றார்கள். பெண் பதிவர்களுள் சகலகலா வல்லவர்களாக விளங்கும் பதிவர்களுள் புன்னகை வலையின் சொந்தக்காரியும் வந்து கொள்வார். உங்கள் நாற்று வலைப் பதிவில், அம்பலத்தார் பக்கம் வலைப் பதிவின் சொந்தக்காரர் அம்பலத்தார் அவர்கள் எழுதி வரும் பதிவர்களின் படைப்புக்கள் விமர்சனப் பகுதி இன்று எந்த வலைப் பூவினை உங்களிடம் கொண்டு வருகின்றது என்று படித்துப் பார்ப்போமா? வாருங்கள் பதிவர்களே! அம்பலத்தாரின் விமர்சனத்திற்குச் செல்வோம்!

Monday, January 23, 2012

அத்தி பூத்தாற் போல அமைதியாக எழுதும் அபூர்வ பதிவர்!

இயந்திரமயமான உலகில் இன்று எம்முடன் கூட வந்து கொண்டிருப்பவை இலத்திரனியல் ஊடகங்கள் என்றால் மிகையாகாது. எமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காகிதாதிகள் மூலம் உருவாகும் படைப்புக்களை விட, அப் படைப்புக்களின் இலத்திரனியல் வடிவங்களைப் படிப்பதற்கு தான் நேரம் கிடைக்கின்றது. இதனால் புகழ் பூத்த பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாம் இணையத்த்தின் இணையில்லா வளர்ச்சிக்கு ஏற்றாற் போல மின் நூல்களாகத் தம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. வாரந் தோறும் "அம்பலத்தார் பக்கங்கள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களை விமர்சனங்களால் அலங்கரித்து பகிர்ந்து வருகின்றார். அவரது இந்த வார விமர்சனம் யாருடைய படைப்புக்களைத் தாங்கி வருகின்றது என்று பார்ப்போமா?வாருங்கள், பதிவிற்குள் நுழைவோம். 

Tuesday, January 17, 2012

மயிலிறகால் வருடி இன்ப வைத்தியம் செய்யும் பதிவர்!

சங்க காலந் தொட்டு தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலக்கணங்களையும், தமிழ் தொடர்பான படைப்புக்களையும் எழுதலாம் எனும் நிலமை எம் தமிழ் இலக்கிய உலகில் இருந்து வந்தது. இம் மரபினைப் பின் வந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் இலக்கியம் தெரியா விட்டாலும் இலகு தமிழ் இலக்கியம் படைக்கலாம் என மாற்றினார்கள்.இன்று தமிழ்த் துறையோடு நெருங்கிய தொடர்பில்லாது தமிழ் மீதான காதல் இருந்தாலே தமிழில் பல படைப்புக்களையும் எழுதலாம் எனும் நிலைக்கு தமிழும், தமிழ் இலக்கிய உலகும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. வாரந் தோறும் நாற்று வலைப் பதிவில் "அம்பலத்தார் பக்கம்" வலைப் பூவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார்.இப் பதிவினை அம்பலத்தாரின் விமர்சனத்தினூடாக அலங்கரிக்கப் போகும் பதிவர் யார் எனப் பார்ப்போமா?

Monday, January 9, 2012

ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்!

நாற்று வலைப் பதிவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,
இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நாம் இலகுவில் அறிய முடியாதவர்களாக இருப்போம். தனிபட்ட மனித விருப்பு வெறுப்புக்களும், பாதுகாப்பு காரணங்களும், தனி நபர் உரிமைகளும் தான் ஒருவரைப் பற்றிய விபரங்களை மறைத்து, அவரது படைப்புக்களினூடாக அந்த எழுத்தாளர் எப்படி இருப்பார் எனும் எண்ணத்திற்கான விடையினை வழங்கி நிற்கின்றது. இந்த வகையில் வலைப் பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட "ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்" என்பது எப்படியிருக்கும் என நாம் அனைவரும் அறிவதற்கு ஆவல் கொண்டிருப்போம் அல்லவா? எமக்கு பிலாசபி பிரபாகரன் என்கின்ற தனி மனிதர் பற்றிய விபரங்கள் இப்போது வேண்டாம். 

Wednesday, January 4, 2012

ஒரு குட்டிப் பதிவரின் எழுத்துலக சுட்டித் தனம் பற்றிய அலசல்!

அன்பிற்குரிய சொந்தங்களே, இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான படைப்பாளிகளுக்கு காலச் சக்கரச் சுழற்சியின் பயனாக விரிவான விமர்சனங்கள் கிடைப்பதில்லை.இணையத்தில் கருத்துரைப் பெட்டியினூடாக பின்னூட்டங்களைப் பகிர்ந்து கொள்வோரில் அதிகளவானோர் எல்லோரின் பதிவுகளையும் படிக்க வேண்டும் எனும் காரணத்தினாலும், ஓடி ஓடிப் பின்னூட்டங்களை எழுதி விட்டுச் செல்ல வேண்டும் என நினைப்பதாலும் பல படைப்பாளிகளின் படைப்புக்களைப் பற்றிய எண்ணக் கருத்துக்களை யாராலுமே வெளிப்படுத்த முடிவதில்லை. அந்தக் குறைகளையெல்லாம் எண்ணிய "அம்பலத்தார் பக்கங்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு.பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் வித்தியாசமான முயற்சியாக வாரம் ஒரு படைப்பாளியின் படைப்புக்களை அலசுகின்ற பணியினைக் கையிலெடுத்திருக்கிறார்.அவரது இம் முயற்சியினை வரவேற்று உங்கள் நாற்று வலையில் அம்பலத்தார் ஐயாவின் பதிவினை இங்கே தவழ விடுகின்றேன்.

Tuesday, May 17, 2011

பதிவர்களே உஷார்! பாட்டி பதிவெழுத வருகிறா!

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்:  ஓட்ட வடை நாராயணன்)
__________________________________________________________________________________


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க