Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Thursday, October 3, 2013

கலைஞரின் மானம் காற்றிலே பறந்தது - படம் இணைப்பு!

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்
கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்
சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்
செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!

Sunday, September 29, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலைக் கிடமாகுமா திமுக?

ஆலமரத்தடி அரட்டை
இன்றுவழமைபோல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!

’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’

குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?

Tuesday, September 24, 2013

அம்மா டாஸ்மாக் இலவசம்- அருந்தி மகிழலாம் அனைவரும் வருக!

அம்மா குடி நீர் வரிசையில் இனி அம்மா டாஸ்மாக்!  இலவசங்கள் வரிசையில் இனி இதுவும் வரும்! 

நடு இரவில் தெறித்து
நரம்பறுக்கும் வேகத்துடன்
உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!

Monday, September 23, 2013

வேட்டியை தலையில் போடும் கலைஞரும் வேடிக்கையாய் சிரிக்கும் தமிழகமும்!!

தான் வாழத் தமிழினம்
ஊண் இன்றி உயிரை கையில் பிடித்தபடி
ஊரெல்லாம் அகதியாகி அலைந்த வேளை
மானாட மயிலாட பார்த்து
மகிழ்ந்திருந்தார் கலைஞர்

Saturday, September 21, 2013

!மத வெறியன் மோடியை கேடியாக்கும் ஷோசியல் மேனியாக்கள்!


முசாஃபர் நகர மதக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரி மோடியை யார் கேடியாக்குவது என்று தானே யோசிக்கிறீங்க. வாங்க மக்கள்ஸ். 

மோடியின் பண பலத்தை நம்பித் தான் ஆந்திராவே இருக்கிறது என்றவர்களின் வாயைப் பிளக்கும் வண்ணம் மோடி தூண்டி விடும் மதக் கலவரங்கள் சான்று பகர்வதாக இன்னோர் பக்கமாகச் செய்திகள் வருகின்றன. 

Friday, September 20, 2013

அவமானப்பட்ட கருணாநிதியும் திமுகவை ஓரங்கட்டும் ஜெயலலிதாவும்!!


தமிழ் சினிமா வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு என்றுமே தனித்துவமான மரியாதை உண்டு என்பது நிஜம். ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா” எனும் பாடல் வரிக்கு அமைவாக, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதால் ஈழமக்களும், தமிழக மக்களும் கலைஞர் மீது அளவற்ற வெறுப்பினைக் கொண்டிருந்தாலும் அவரின் சினிமா வசனங்கள் மீது தனிப் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்கள். 

Wednesday, September 18, 2013

அம்மா வாட்டரால் அவதியுறும் ஜே - கருணையின்றி கலங்கும் கனி மொழி!

கருணையின்றி கலங்கும் கனிமொழி!
நிரூபனின் நாற்று வலை
ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்
முற்பணக் கேள்வியின்றி
அலைக் கற்றையினை 
அரை விலையில் கொடுத்தேன் - அப்பன் 
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது
ஏல அடிப்படையில்
எல்லோருக்கும் பங்குகளை கொடுத்தேன்!

இன்று அரசியலில் ஜொலிக்க முடியாது
அனுதினமும் அழுகின்றேன்!
தப்புச் செய்தவன் தண்ணி குடிக்கனுமாம்
யாரோ ஒரு ஆன்றோன் தமிழில்
எழுதி வைத்து விட்டு போய் விட்டான்,
அப்பன் சொற் கேட்டு ஆட்டையை போட நினைத்து
வெப்பம் மிகுந்த திஹாரில் வெம்பி வாடினேன்
ஜாமீன் கேட்டு ஏமாந்து நொந்தேன்!

இப்போ திமுக அரசியலில்
கருணை கிடைக்காதா என ஏங்குகிறேன் ஏன்?

Monday, September 16, 2013

பதிவுலகை அடியோடு மாற்றப் போகும் திமுக கட்சியின் பிரச்சாரப் போர்

சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக! 

ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 


அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.

Saturday, September 14, 2013

சிந்திக்க மறுக்கும் கருணாநிதி - சந்தத்தில் கவி படிக்கும் ஜெயலலிதா

போயஸ்காடன் - கோபாலபுரத்து லேட்டஸ் நையாண்டி!

அக்டிவ்வா இருங்கள் என
அனைவரும் சொல்கின்றனர் - நானோ
இந்த வயசிலும் குடும்ப
அரசியலில் அக்டிவ்வா இருக்கிறேன் - அடுத்தவர்
சொத்தை ஆட்டயப் போட்டு
ஏழைகள் வாழ்வில் இலவசம் கொடுத்து
ஆசியாவின் பணக்காரர் லிஸ்ட்டில்
ரேட்டிங்கில் கலக்கிறேன் - பாராட்டு
மீட்டிங் என்றால் நமீதா டான்ஸ் இல்லையா என
பாவமாய் கேட்கிறேன்!

Wednesday, September 11, 2013

திமுக கட்சியின் சகாப்தம் - டவுசர் கிழிந்த அபி அப்பா!

திமுக கட்சியின் தசாப்தம் - சகாப்தம் - பதிவர் அபி அப்பா
பதிவர் அபி அப்பா பற்றி இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை! எல்லோரும் நன்கு அறிவோம். அவருக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு ஒரு பூர்விகத் தொடர்பு என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது அவரைக் கலாய்த்து எழுதா விட்டால் எமக்கும் பொழுது போகாது. அவ்வப்போது ஈழ மக்களை வைத்து கபடி ஆடா விட்டால் அபி அப்பாவின் ப்ளாக்கும் தூசு தட்டப்படாது.

Monday, September 9, 2013

திமுக க(ப)ட்சியை அவதூறு செய்தால் களி தின்பீங்க - கொதிக்கும் டிமுக குறூப்

திமுக, கட்சியினரின்  அதிரடிப் பாய்ச்சல்: 

இன்றைய கால கட்டத்தில் இலவசங்களுக்கு மேல் இலவசங்களை வாரி இறைத்து தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியாத கலைஞரின் கட்சியினர் தற்போது சமூக வலைத் தளங்களினூடாகப் புதியதோர் பிரச்சாரப் போரினைக் கையிலெடுத்துள்ளார்கள்.இதன் பிரகாரம்,இளைய தலைமுறையினரைக் குறி வைத்து சமூக வலைத் தளங்கள் ஊடாக திமுக கட்சியின் கருத்துக்களை வலுப்படுத்துவதே கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்ட திமுக கட்சியினரின் பிரச்சாரப் பீரங்கிப் பேஸ்புக் - டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டதன் நோக்கமாகும்.

Saturday, September 7, 2013

க(கொ)ண்டாங்கி சேலை வாங்கி க(கொ)ருணாநிதிக்கு கட்ட வாரீர்!

கண்டாங்கி சேலை வாங்கி எல்லோரும்
கருணாநிதிக்கு கட்ட வாரீர் - தமிழனை 
துண்டாக ஆக்கி துக்கடா அரசியல் நடத்திய
துஷ்டரின் வேசம் கலைந்ததை மறக்காத அனைவரும்
கொண்டாடி மகிழ்வோம் - குடும்ப அரசியலின்
கொலு விளக்காம் கலைஞருக்கு எல்லோரும்
கண்டாங்கி சேலை கட்டி மகிழ்வோம் 

Friday, September 6, 2013

டிமுக கனியை நம்பி மணியை (Money) இழந்த ராசா!

பொதுச் சொத்தை கொள்ளையிட்டோர் வெது வெதும்பி மாய்வர்!

கிடைத்த பதவியினை வைத்து
இனிக்கும் ஊழல் செய்துநிரூபனின் நாற்று 
எனக்கும் சொத்துச் சேர்த்து -தமிழ்
சுரக்கும் கவி மொழியாம் கனியையும்
என் பங்கிற்கு கூட்டுச் சேர்த்தேன்!நிரூபனின் நாற்று
சுவிஸ் பேங்கில் டெப்பாஷிட் பண்ணி
சுக போக வாழ்க்கை நடாத்திட
நினைக்கையில் CBI வடிவில்நிரூபனின் நாற்று
வந்தது சிக்கல் - இப்போது
திஹாரின் வெப்பத்தில்
தினம் தினம் நிரூபனின் நாற்று
தனிமையில் தவிப்பதால் அடிக்கடி 
தொண்டைக்குள் எடுக்குது விக்கல்!

Thursday, September 5, 2013

அந்நியன் 2 இல் அதிரடித் தோற்றத்தில் கலைஞர் - ஸ்டில்ஸ் இணைப்பு


நம்ம வாழ்வில் சினிமாக்காரர் அரசியல்வாதி ஆகுறத கண்டிருக்கோம். ஆனால் முதன் முறையாக எம் தமிழ் உலகில் ஒரு அரசியல்வாதி சினிமாக்காரர் ஆகிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான அந்நியன் படம் ரீமேக் செய்யப்படும் போது அதில் சிறப்புத் தோற்றத்தில் கலைஞர் நடித்தால் எப்படி இருக்கும்? 


Sunday, September 1, 2013

பேஸ்புக் & டுவிட்டரில் பட்டயக் கெளப்பும் க(கொ)லைஞர்!

தமிழினத் தலைவர் - இலவசங்களால் தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கும் வள்ள, டில்லிக்கு தந்தி அடிக்கும் செம்மல் ஐயா கலைஞர் பேஸ்புக்கில் வருகை தந்த மகிழ்வான தருணத்தில் நம்ம பதிவர்களின் மன நிலை எப்படி இருந்தது தெரியுமா?
தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

Wednesday, August 28, 2013

ஆடலரசி ஜெயலலிதா - பாடலரசன் கருணாநிதி - லிவ்விங் டாக்கீஸ்

ஆடலரசி ஜெயலலிதா! 

நடனத்தில் ஓர் காலத்தில் தாரகை
நம் எம்ஜி ஆர் கூட வந்திடுவார் மேனகை - இன்றோ
தமிழரை வைத்து அரசியல் நடனமாடுவதில்
அம்மா ஓர் அரசியல் ஆடலரசி
அவர் செய்கையால் நாமோ
செய்வதறியாத பாவ ஜீவன்களாய்!

Tuesday, August 27, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலையுறும் தொண்டர்கள்?


85 ப்ளஸ் வயதில் ஒரு மனிதனால் ஓர் சமூகத்தின், ஒரு மாநிலத்தின் தலை விதியைத் தீர்மானிக்க முடியும் என்றால் அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு கலைஞர் ஜி! மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதமான ஆசை இருக்கும். ஆனால் பொன் ஆசை ஒரு மனிதனுக்கு இருந்தால் பொன் பொருளை அள்ளிக் கொடுத்து அந்த ஆசையை விரட்டிடலாம். பெண் ஆசை இருந்தால், அதுவும் அவனுக்குப் பெண்கள் பற்றிய தெளிவு வருகின்ற போது இல்லாது போய் விடும். ஆனால் ஒரு மனுஷனுக்கு மண்ணாசை இருந்தால் என்னா பண்ண முடியும்? எப்படியுங்க விரட்ட முடியும்? 

Thursday, April 4, 2013

திமுகவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பதிவர் அபி அப்பா


ஒரு கற்பனை கலாட்டா காமெடி ஜிம்மி
திமுக கட்சியின் தீவிர விசுவாசிக்கு நிகழ்ந்த கொடுமை! 

மண்ணாங்கட்டி: ஏம்பா பதிவர் பன்னாடை, அந்த அப்பா பதிவரை கொஞ்ச நாளா திமுக அல்லக்கைங்க லிஸ்ட்டில காண முடியலையே! என்னாகியிருக்கும்?
பன்னாடை: ஏலேய் மண்ணாங்கட்டி! இது கூட தெரியாமலா? அவர் திமுகவிற்காக காட்டிய ஓவர் விசுவாசத்திற்காக மூஞ்சில காரி துப்பாத குறையா விரட்டிட்டாங்க.

Sunday, August 19, 2012

கலைஞரை, திமுக கட்சியை அவமானப்படுத்தினால் அவதூறு வழக்கு!!

திமுக, கட்சியினரின்  அதிரடிப் பாய்ச்சல்: 

இன்றைய கால கட்டத்தில் இலவசங்களுக்கு மேல் இலவசங்களை வாரி இறைத்து தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியாத கலைஞரின் கட்சியினர் தற்போது சமூக வலைத் தளங்களினூடாகப் புதியதோர் பிரச்சாரப் போரினைக் கையிலெடுத்துள்ளார்கள்.இதன் பிரகாரம்,இளைய தலைமுறையினரைக் குறி வைத்து சமூக வலைத் தளங்கள் ஊடாக திமுக கட்சியின் கருத்துக்களை வலுப்படுத்துவதே கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்ட திமுக கட்சியினரின் பிரச்சாரப் பீரங்கிப் பேஸ்புக் - டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டதன் நோக்கமாகும்.

Friday, August 17, 2012

பேஸ்புக், டுவிட்டரில் கலைஞர் - பொழுதுபோக்கிற்கு ஏது குறைச்சல்!

தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க