ஆலமரத்தடி அரட்டை
இன்றுவழமைபோல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!
’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’
குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?
மணியண்ணை: இல்லையடா தம்பி, அது வந்து, எங்கடை கலைஞர் கருணாநிதி இருக்கிறார் ஏலேய்! அவர் கடந்த முறை எலக்சனிலை தோத்துப் போயிட்டார். அந்தச் செய்தியைக் கேட்டதும் வாற சந்தோசம் இருக்கே. அதனைச் சொல்லவே வார்த்தைகள் இல்லையடா தம்பி குணம்.
கலைஞர் தோத்துப் போட்டார் என்ற சந்தோசத்திலை நான் எங்கடை நல்லூர்(யாழ்ப்பாணம்) முருகனுக்கு தேங்காய் உடைச்சு, குத்து விளக்கெல்லே வேண்டிக் கொடுத்தனான். ஆனால் மனுசன் இப்ப என்ன சொல்லுது தெரியுமோ?
இன்னும் ரெண்டு எலக்சனிற்கு தான் தான் திமுக கட்சியின் முதன்மை வேட்பாளராக இருப்பாராம்.
சூடான படங்கள், சுவையான செய்திகள், இதனை விட இன்னும் சுவாரஸ்யமான விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
இன்னும் ரெண்டு எலக்சனிற்கு தான் தான் திமுக கட்சியின் முதன்மை வேட்பாளராக இருப்பாராம்.
சூடான படங்கள், சுவையான செய்திகள், இதனை விட இன்னும் சுவாரஸ்யமான விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
இளைய பிள்ளை: அடப் பாருங்கடா. விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத கதையா எல்லே ஐயா சொல்றார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயம் அந்த கோபாலபுரக் கோமகனுக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா, மொரீசியல், சுவிஸ் பாங்க்(Bank) என்று பதுக்கி வைச்சிருக்கிற நூற்றி எழுபது கோடியிலை நூறு கோடியினை ஆச்சும் அள்ளி இறைச்சு, இலவசத்தை இரு மடங்காக்கியிருப்பார் ஏலேய். கடந்த தேர்தலிலும் வெற்றி வாகை சூடியிருப்பார் இல்லே
குணத்தான்: இதைக் கேளுங்கோ. கலைஞர் எத்தினை காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியும்? இன்னும் எத்தினை நாளைக்கென்று தான் மக்களுக்கு தேர்தல் வாற டைம் பார்த்து,
‘இந்தா பிடி இலவசம் என்று; கிள்ளி எறிஞ்சு ஏமாற்ற முடியும்.
மக்கள் இப்ப நன்றாக உணர்ந்து தெளிந்து விட்டார்கள். இதிலை பெரிய மேட்டர் என்னன்னா, இலவசத்தை வாங்கிப் போட்டு, வாக்குப் போடாமல் கிளைமாக்ஸ் வைச்சாங்களே நம்ம உடன் பிறப்புக்கள் அவங்கள் ரொம்பவும் புத்திசாலிங்க. அவங்களைப் பாராட்டியே ஆகனும்.
மணியண்ணை: மெய் தான் பாருங்கோ(உண்மையாத் தான்) உந்தக் கலைஞர் நடக்க முடியாமல் தள்ளாடுற வயதிலையும் நாற்காலியில் இருந்து நதிர்தனா............திரனனா.....தகிர்தனா......என்று பாட்டுப் பார்க்கிறது ஒரு பக்கம், நடிகைகள், நடிகர்கள் பாராட்டு விழா வைக்க நடுவில் போய் இருந்து ரசிக்கிறது, மக்கள் பணத்தில் இருந்து மக்களுக்கே இலவசத்தைக் கொடுத்து ஏமாத்திறது, ஈழத்திற்காக இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறது, இப்புடி பல தில்லு முல்லுகளைச் செய்திருக்கிறார். அப்ப மக்கள் சரியான முடிவினைத் தான் எடுத்திருக்கிறார்கள். அந்த மக்களைக் கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும்,
ஆனால் மீண்டும் அடுத்த தேர்தலிலும் என்று சொல்றார் பாருங்க. அவ்வ்வ்..அதைத் தான் ஜீரணிக்க முடியாம இருக்கு!
ஆனால் மீண்டும் அடுத்த தேர்தலிலும் என்று சொல்றார் பாருங்க. அவ்வ்வ்..அதைத் தான் ஜீரணிக்க முடியாம இருக்கு!
நிரூபன்: பெரிசுகள், வயசான நீங்கள் மூன்று பேரும் கலைஞரை வீட்டுக்கு அனுப்பினது சரி, குடும்ப அரசியலை ஒழித்தது கரெக்ட்டு, என்று ஒத்தூதுறீங்க, அம்மையார் ஜெயலலிதாவும், இதே மாதிரியான வழியினை அடுத்த தேர்தலின் போது கையிலை எடுக்க மாட்டா என்பதற்கு என்ன நிச்சயம்?
இப்பவே வடக்கு முதலமைச்சவர் விக்னேஸ்வரனைச் சந்திக்கனும். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசனும் என்று அம்மா சொல்றா. அப்படீன்னா தேர்தல் வந்தால்?
இப்பவே வடக்கு முதலமைச்சவர் விக்னேஸ்வரனைச் சந்திக்கனும். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசனும் என்று அம்மா சொல்றா. அப்படீன்னா தேர்தல் வந்தால்?
அதுவும் ஈழப் பிரச்சினை நடந்த சமயத்தில் ‘போர் நடக்கும் போது மக்கள் சாவது தவறில்லை’ எனத் தானும் பத்தோடு பதினொன்றாக, ஒரு சிலரின் கூற்றினையெல்லோ நியாயப்படுத்தினவா.
எனக்கென்றால் ஈழப் பிரச்சினை பற்றி எல்லோரின் கோட்பாடுகள், கண்ணோட்டங்களும் ஒரே மாதிரித் தான் இருக்கும் என்று தோணுது.
என்ன தான் இருந்தாலும் மத்திய அரசை உலுப்புற பவரைத் தொகுதிப் பெரும்பான்மையோடை இப்ப அம்மா வைச்சிருக்கிறா. ஆனாலும் அம்மா மனமிரங்க வேணும் இல்லே.
மணியண்ணை: கலைஞரின் தோல்விக்கு நம்ம தம்பி சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரமும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. காங்கிரசோடை கூட்டுச் சேர்ந்த கையின் தமிழ்க் கையினை எல்லோ, ஒட்ட நறுக்கியிருக்கிறார். அவருக்கும் பாராட்ட வேண்டும்.
எங்கடை இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரைக்கும், கலைஞர் தோற்றதைத் தான் செம ஜோலியாக நினைக்கிறார்கள். அம்மா வந்த பின் அதிக மாற்றங்கள் நிகழ்ந்ததாக யாரும் கரிசனை கொள்ளவில்லை. ஆனாலும் எல்லோர் மனங்களிலும் நம்பிக்கை மட்டும் இருக்கு. அம்மா அரவணைப்பா என்று.
இளையபிள்ளை ஆச்சி: இந்த முறை இலங்கை எலக்சனின் மூலம் மக்கள் அரச கட்சிக்கும், இனவாதக் குழுக்களுக்கும் சரியான பாடம் படிப்பித்திருக்கிறார்கள். மக்களின் சொத்தை கொள்ளையடித்து, சுக போக- வம்ச அரசியலை நிலை நாட்டிக் கொண்டிருந்த கூட்டத்தை வேரோடு கிள்ளியெறிந்து, இனிமேல் தலை நிமிர முடியாத வாறு எல்லே தள்ளி வுட்டுச் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள்.
அத்தோடு சிங்கள தேசத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். பொது மக்கள் உணர்வுகளை இலகுவில் மழுங்கடிக்க முடியாது என்று மறைமுகமாக சங்கெடுத்து ஊதியிருக்கிறார்கள் இல்லே.
ஆகவே இன்னும் கொஞ்சக் காலம் வெயிட் பண்ணித் தான் பார்க்கனும். மக்கள் பிரச்சினைகள், தமிழக நலன் தொடர்பான பொருளாதார முன்னேற்ற விடயங்கள், மீனவர் பிரச்சினைகள் எனப் பல தரப்பட்ட விடயங்களை ஜே எப்படிக் கையாள்கிறார் என்று. ஏன் என்றால் இலங்கையின் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளுடன் பேச்சுக்கள் நிகழ்ந்தால், தமிழக மீனவர் பிரசினைக்கு முடிவு வர சந்தர்ப்பம் உண்டல்லவா?
நிரூபன்: தமிழக அரசியல் பற்றி நீங்கள் எல்லோரும் அலப்பறை வைச்சுக் கொண்டிருக்கிறீங்க. ஆனால் நான் தான் தமிழக அரசியலில் கத்துக் குட்டியாச்சே. இன்னும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களை மாதிரி பெரிய ஆட்கள் வைக்கிற அலப்பறை மாநாட்டுக்களில் இருந்து இந்த அரசியல் மேட்டருகளைப் பொறுக்கினால் தான், ப்ளாக்கிலையும் எழுதலாம். நேரம் நெருங்குது, ஆறு மணியாச்சு. எல்லோரும் கிளம்புவமோ.
மணியண்ணை: ஓம் வாங்கோ, வாங்கோ, எல்லோரும் வீட்டை போவம்.
‘ஏய் ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு,
ஜெயிலுக்கு இருக்குதடா கறுப்புக் கலரு கம்பி!
அது காத்திருக்கு கனியினைத் தான் எண்ணி!
நிரூபன்: மணியண்ணை இந்தப் பாட்டிலை ஏதும் உள் குத்து இல்லையே,
வடிவேலுவின் பாட்டினை மாற்றிப் பாடுறீங்கள். கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் தானே?
மணியண்ணை: அடிங் கொய்யாலா, நீ சின்னப் பொடியன், உனக்கு இந்தப் பாடுப் பற்றி விளக்கமெல்லாம் சொல்ல முடியாது.
.
சூடான படங்கள், சுவையான செய்திகள், இதனை விட இன்னும் சுவாரஸ்யமான விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
* ஊதா கலர் நாயகியின் இன்றைய நிலை - விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
அடடே நம்ம காஜல் அஹர்வாலா இப்படி? விபரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
|
0 Comments:
Post a Comment