Monday, September 2, 2013

காமத் தேடலுக்காய் அரங்கேறும் காதல் நாடகம்

ஒரு மிஸ்ட் கோலில் தான் இன்றைய காதலின் நீடித்து நிலைக்கும் பண்பு தங்கியிருக்கிறது. அன்பின் வெளியீடாய் அவளிடமிருந்து கிடைக்கும் மிஸ்ட் கோலும், தன் பண பலத்தின் குறியீடாய் ஆடவன் மேற்கொள்ளும் அழைப்பும் கதிரியக்கம் மூலமாக காதல் இயங்க வேண்டும் எனும் தொனிப் பொருளை விளக்கி நிற்கிறது. அவளது ஒவ்வோர் அசைவுகளும், என்னுள் வந்து போகையிலும், என் மன அலைகளைச் சிதறடித்து விட்டுச் செல்லுகையிலும், என் இருத்தல்கள் சில வேளை, இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு, எங்கோ ஓர் தொலை தூர வெளியில் நான் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற பேரின்பத்தை அடைந்து கொள்கிறேன்.
மெதுவாய் மன அறைகளில் வந்து குந்தியிருக்கும்; எளிதில் தூரத் தள்ளி விட முடியாத அவளைப் பற்றிய நினைவலைகள், எப்போதும் போல, என்னுள் என்னையறியாமல் ஆடவனுக்கான என் அடையாளத்தினை உணர்த்தி விட்டுச் செல்லுகின்றன. புன்னகைகளின் விலைகளிற்கான மதிப்பினை, உன் முத்துப் பற்கள் வெண்மை உலர்த்திப் போகையில் தான் நான் தினமும் கண்டுணர்கிறேன். புன்னகைகளால் எதனையும் வாங்க முடியும் என்பதற்குமப்பால், புன்னகைகளால், ஒரு தேசத்தின் இருப்பினை- அடையாளத்தினைக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மடிந்தவர் ஒருவர் இருக்கிறார்.
கேள்வி கேட்கையில் சொல்ல முடியாத சில பதில்களுக்காக, அவர் வெளிக்காட்டிய மழுப்பல் கலந்த புன்னகை போல உன் புன்னைகையும் இருந்து விடுமா என்று என்னுள் நானே ஐயம் கொள்வதுண்டு. ஆனாலும் நீ அவ்வாறில்லை. மனமென்னும் இதய அறையின் குருதி நாளங்களை மெது மெதுவாக உசுப்பி விட்டு, காதல் குளமென்ற ஒன்றை என்னுள் உருவாக்கி விட்டாய். ’ஏன் என்னுள் இப்படி ஒரு மாற்றம்? புரியாத கவிதைகளையா இல்லை, கவிதை கலந்த உரை நடையினையா நான் எழுதுகின்றேன். எங்கோ தொடங்கி, எங்கோ முடிவடையப் போகின்றதா இந்தக் காவியம்? சொல்! ஏதாவது சொல்! உனக்கான நினைவுகளை இப்படியாவது எழுதித் தொலைக்கலாம் என்றல்லவா எண்ணியிருந்தேன். 

 எதுவும் புரியாத நிலையில் நின்று, காதல் தந்த போதையில் உழன்று இன்று நீ இல்லையே என நான் தவிப்பதாலா இந்த மாற்றம்? நான் என்ன எழுதுகின்றேன் என்பது தெரியாத நிலையில், இருக்கும் போது, உன்னை எழுதலாம், மேலும் மேலும் எழுதி உன்னுள் என் எழுத்தை மெருகேற்றலாம் என எண்ணியிருக்கையிலோ, விழித்துப் பார்க்கிறேன். என் அருகே நீ இல்லை. அர்த்த இராத்திரிகளின் ஒவ்வோர் பொழுதுகளையும் அர்த்தமுள்ளதாக்கும் உன் கூந்தல் முடிகள் என நான் நினைத்துப் படுக்கையில் புரளுகையில், புரண்டெழுந்து நிமிர்ந்து பார்க்கையில் என் அருகே நீ இருக்க மாட்டாய். ஓ அப்படியாயின் இது கனவா? 
சே....சே இருக்காது. அவளைப் பற்றிய நினைவுகள் எப்படிக் கனவாக முடியும்?
செம் புழுதித் தெருக்களில் செருப்புத் தடங்களைப் பின்பற்றித் தேடிய என் மன விழிகளுக்குப் பொய் சொல்லி, அவ்வளவு இலகுவில் என்னை விட்டு நீ பிரிந்து விட முடியுமா?

நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். 
இல்லாத ஒரு பொருளின் நினைவலைகளை எப்படிப் பத்திரப்படுத்தி வைக்க முடியும்? ஓ.... இப்போது தான் நினைவுக்கு வருகின்றது. விமானக் குண்டு வீச்சின் அழியாத வடுவாக என் கையில் இருக்கும், தழும்பிலிருந்து உன் நினைவுகள் இன்றும் வந்து போகின்றதே. அப்படியாயின் நீ எங்கே? உன்னை தொலைத்து விட்டுத் தேடுகிறேனா?
இல்லை, நீ என்னுள் உறைந்ததனால் தவிக்கிறேனா?
ஓ.....இப்போது தான் உய்த்தறிந்து கொண்டேன்.

அன்றைய தினம் மாலை வேளை...........................
                                                                            பசியும், தேடலும் தொடரும்.......
இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails