எல்லோருக்கும் வணக்கமுங்கோவ்!
பேஸ்புக் எக்கவுண்ட் இல்லாதவர்களே இன்று இவ் உலகில் இல்லை என்று சொல்லலாம்! பேஸ்புக் போரடிக்குதே, இனிமே இந்த பேஸ்புக் வேணாம் என்று டீ அக்டிவேட் செய்திட்டு எஸ்கேப் ஆக நினைக்கும் பெரியவர்களே, இதோ சூப்பர் - டூப்பர் டிப்ஸ்,
* எப்போதும் ஒரே சிந்தனையுடைய நண்பர்களை பாலோ செய்யாதீர்கள்.
* மொய்க்கு மொய் என்பதே பேஸ்புக்கின் நியதி ஆகையால், மொய் வைக்காதவர்களை அன் ப்ரண்ட் பண்ணிக்கலாம்!
* ஒரே குழுமத்தில் கும்மி அடித்து போரடித்தால், புதிய குழுமங்களினுள் நுழையலாம்.
* அடிக்கடி காமெடி - கலாட்டா - சிரிப்பை வரவைக்கும் போட்டோக்களை ஷேர் பண்ணிக்கனும்.
இனி பேஸ்புக்கில் நான் பகிர்ந்தவை சில உங்கள் பார்வைக்காக!
மார்டன் கல்ச்சர்
கைகளிலே டச்சிங் ஐபோன்
காதுகளில் ஆப்பிள் ஹெட்போன்
தலையினிலே சிலுப்பா தொப்பி
காதினிலே இரண்டு கடுக்கன்
காரணம் கேட்டால் - இது தான்
மார்டன் கல்ச்சர்
மார்டன் கல்ச்சர்
ஆஸ்திரேலிய தேர்தல் சொல்வது என்ன?
ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்கும் இடையிலான வேறுபாடு!
முதன் முறையாக வாக்களிக்கப் போகிறேன். Driving Licence (இங்கே இது தான் அடையாள அட்டை) பார்த்து விட்டு பெயரைச் செக் பண்ணி விட்டு வாக்களிப்பது எப்படி என்று விளக்கம் கொடுத்தார் ஓர் வெள்ளையினப் பெண்மணி! சத்தம் சந்தடியின்றி வாக்களித்து விட்டு வெளியே வந்தேன். தேர்தல் திணைக்களம் மறுபக்கத்தில் வாக்களித்தோருக்கு Sausages and பாண் கொடுத்தார்கள். அதையும் வாங்கி சாப்பிட்டு விட்டு வீடு வந்தேன்.
இதுவே நம்ம இலங்கையிலும் இந்தியாவிலும் வாக்களிப்பு என்றால் சொல்லவா வேண்டும்? கொல வெறியோடு அரசியல் கலவரங்கள், வாக்களிக்க வரும் நபர் கள்ள ஓட்டுப் போடவா. நல்ல ஓட்டுப் போடவா வருகிறார் என கேள்விகள்,
அது தவிர உனக்கு இலவச கலர் டீவி தாரேன், இலவச சைக்கிள் தாரேன், இலவச சோத்துப் பார்சல் கொடுக்கிறேன், இலவச சாராயம் கொடுக்கிறேன் எனக்கு ஓட்டுப் போடு இப்படி வழியல்கள்!
இது தான் நம்ம நாட்டில் அன்று முதல் இன்று வரை நடக்கும் செயல்!
வெளிநாட்டு அரசு தன் மக்களை நம்புகிறது. ஆனால் நம்மவர்கள் மக்களை ஏமாற்றி பிழைகிறார்கள்!
இன்னும் இரு நூறு வருசம் எடுத்தாலும் இலங்கையிலும், இந்தியாவிலும் இந்த நிலை வருமா என்பது கேள்விக் குறியே?
இனி உங்கள் பார்வைக்காக:
லிங்குசாமி இயக்கத்தில் அசத்தப் போகும் சூர்யா
நழுவியது நடிகையின் ஆடை - அதிர்ச்சியில் நடிகை
இனி உங்கள் பார்வைக்காக:
லிங்குசாமி இயக்கத்தில் அசத்தப் போகும் சூர்யா
நழுவியது நடிகையின் ஆடை - அதிர்ச்சியில் நடிகை
|
3 Comments:
டிப்ஸ் எல்லாம் சரி தான்.
பொழுதுபோக்காய் ஆரம்பித்து இப்ப அதுவே பொழப்பாய்டுச்சு.. அதுனால தான் சலிப்படைகின்றனர் நிறையபேர்.
எதுவுமே எல்லைக்குள் இருந்தால் பிரச்சனையில்ல.
@<a இந்திரா</a
வாங்க மேடம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்.
* மொய்க்கு மொய் என்பதே பேஸ்புக்கின் நியதி //
இங்க பதிவுலகிலும் அதே நிலைதானே. எத்தனை அருமையான பதிவுகளை எழுதினாலும் தங்களுடைய மொக்கை பதிவுக்கும் கருத்துரை இடுபவர்களுக்குத்தான் கருத்துரை இடுவார்கள். இல்லாவிட்டால் படித்துவிட்டு போய்விடுவார்கள். You scratch my back I will scratch yours. இதுதான் இன்றைய நிலை. இந்த அவல நிலை எப்போது மாறுமோ அப்போதுதான் நல்ல தரமுள்ள பதிவுகள் தமிழில் வெளிவரும்.
Post a Comment