Thursday, September 12, 2013

அடப் பாவிங்களா! பேஸ்புக்கில இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களே!

வணக்கம் அன்பு நட்புக்களே, வாங்க வாங்க! பேஸ்புக்கில என்னெல்லாம் பண்றாங்க என்று அறியலாம் வாங்க.

நினைவுகளை மீட்டிக்குறாங்க. அதுல ஒண்ணு தான் நான் எழுதிய பட்டம் பற்றிய ஸ்டேட்டஸ். பட்டம் ஏற்றுவதில் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதுவும் வீட்டில வெய்யிலுக்க போனால் “தம்பி உன்னோட நிறம் குறைஞ்சிடும்” என்று அம்மா சொல்லச் சொல்ல கேட்காமல் பட்டம் விடப் போவதும், வீட்டில பட்டம் ஏற்ற பசை வாங்க, நூல் வாங்க, ருசுப் பேப்பர் வாங்க காசு தர மாட்டேன் என்று சொன்னால் அப்பா, அம்மா இல்லாத சமயம் பார்த்து அப்பாவின் மடிலேஞ்சிக்குள் இருக்கும் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப் போய் பட்டம் விட்றது இன்னோர் தனிக் கலை!
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க

போட்டிக்குப் பட்டம் ஏற்றுவதில் இருக்கும் சுகமே அலாதி. மச்சான் என் பட்டத்தின் விண் கூவுதா? உன் பட்டத்தின் விண் கூவுதா என போட்டி போட்டு சண்டையிடுவது இன்னோர் வகை மேனியா என்றே கூற வேண்டும்.
பட்டத்திற்கு லைட் பூட்டி ஏத்தி பிலிம் காட்டுவதில் இருக்கும் சுகம் இன்னும் இன்னும் நினைக்க இனிக்கும்.
அதுவும் ஊரில் உள்ள வயல் வரம்பெல்லாம் ஓடிப் பட்டம் ஏற்றி, நெல்லு வயல் சேற்றுக்குள் கால் வைத்து பட்டம் ஏற்றி விட்டு சந்தோசமா ‘மச்சான் இங்க பார்டா என்னோட பட்டம் மேல நிற்குது என்று” சொல்ல, பின் பக்கத்தால ஒரு உருவம் வந்து பிடரியில படாரென்று அறையும். திரும்பிப் பார்த்தால் வயற்காரன். ஹி..ஹி..அப்புறம் அண்ணை இனிமேல் வயலுக்குள் வரமாட்டன் என்று சொன்னாலும் கேட்க மாட்டான் பாவி! பட்டத்தை அறுத்து விட்டுருவான். பின்னர் அந்தப் பட்டத்தைத் துரத்திக் கொண்டு போய், அடுத்தவர் வீட்டு ஓட்டில ஏறி எடுத்து வந்து மீண்டும் ஏற்றி எல்லாம் ஒரு காலம் பாருங்கள்! நினைத்தாலும் இனி நடக்குமா?இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க

அப்புறம் கவிதைங்கிற பேர்ல நம்மளை மாதிரி ஆளுங்க ஏதேதோ கிறுக்கிக் கொ(ல்)ள்றோம்!
“டைம் பாஸ் கேஸ்”
இதோ...
முதல் சந்திப்பில்
நானும் அவளும் பேசினோம்
இடையில் ஒரு
நிம்மதிப் பெரு மூச்சு விட்டாள்
எனைக் கடந்து போகையில்
அவள் கையில் இன்னோர் தொலைபேசி
அப்போது தான் தெரிந்தது
இது டைம் பாஸ் கேஸ் என்று!

மிஸ்ட் கோல் பார்ட்டி கதை!
செல் போனில் மிஸ்ட்
கோல் தந்தாள்
சொல்லாலே கவிதை பல சொன்னாள்
வில்போன்ற புருவம் கொண்ட விநோதினி - என்னை
வீச்சரிவாள் பார்வையாலே கொன்றாள்
கல்லாகிப் போனதடி என் இதயம் -இப்போ
கவிதை தினம் சொல்லுறேனே தினமும்!!
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்க

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails