Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, September 22, 2013

தமிழக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்

இவ் வருடம் தாய்த் தமிழகம் வாழ் உறவுகளால் அறப் போராட்டம் ஈழ மக்களின் வாழ்வாதாரம் வேண்டி முன்னெடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஏதும் செய்ய இயலாதவர்களாக ஈழ மக்கள் தமிழக மக்கள் முன் மண்டியிட்டார்கள். 

Saturday, September 21, 2013

!மத வெறியன் மோடியை கேடியாக்கும் ஷோசியல் மேனியாக்கள்!


முசாஃபர் நகர மதக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரி மோடியை யார் கேடியாக்குவது என்று தானே யோசிக்கிறீங்க. வாங்க மக்கள்ஸ். 

மோடியின் பண பலத்தை நம்பித் தான் ஆந்திராவே இருக்கிறது என்றவர்களின் வாயைப் பிளக்கும் வண்ணம் மோடி தூண்டி விடும் மதக் கலவரங்கள் சான்று பகர்வதாக இன்னோர் பக்கமாகச் செய்திகள் வருகின்றன. 

Friday, September 20, 2013

அவமானப்பட்ட கருணாநிதியும் திமுகவை ஓரங்கட்டும் ஜெயலலிதாவும்!!


தமிழ் சினிமா வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு என்றுமே தனித்துவமான மரியாதை உண்டு என்பது நிஜம். ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா” எனும் பாடல் வரிக்கு அமைவாக, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதால் ஈழமக்களும், தமிழக மக்களும் கலைஞர் மீது அளவற்ற வெறுப்பினைக் கொண்டிருந்தாலும் அவரின் சினிமா வசனங்கள் மீது தனிப் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்கள். 

Thursday, September 19, 2013

அசிங்கப்பட்ட ஹிந்து பேப்பரும் ஆனந்தக் கூத்தாடும் டமிலர்களும்


அசிங்கப்பட்ட ஹிந்து பேப்பர்

ஒரு பத்திரிகையால் மக்கள் மனங்களை மாற்றலாம் என்ற பழைய சிந்தனையில் இன்றும் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது ஹிந்து பேப்பர். சமூக வலைத் தளங்களின் வளர்ச்சிக்கு முன்பதாக பத்திரிகைகள் வழங்கும் விமர்சனங்களை நம்பித் தான் மக்கள் ஒரு படத்திற்குப் போவதா? வேணாமா? எனத் தீர்மானித்தார்கள். 

Monday, September 16, 2013

என்னது அம்மா குடிநீரா? ஜெயலலிதாவின் கேவலங் கெட்ட செயல்!


தமிழக அரசியலில் அம்மா ஜெயலலிதாவின் அதிரடிப் புரட்சி! அம்மா குடிநீர்! 

சின்ராசு: ஏலேய் செல்ராசு ஒனக்கு ஒரு லேட்டஸ் நியூஸ் தெரியுமா?
செல்ராசு: என்ன மாம்ப்ளே? சொன்னாத் தானே புரிஞ்சுக்கலாம். 
சின்ராசு: மார்க்கட்டில இப்போ அம்மா குடிநீருன்னு புதுசா வந்திருக்காமில்லே
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

செல்ராசு: என்ன இலவசமா கொடுக்கிறாங்களா? கூறு கெட்ட பயலே! நீ காசு கொடுத்து தான் வாங்கனும்! 

Saturday, September 14, 2013

சிந்திக்க மறுக்கும் கருணாநிதி - சந்தத்தில் கவி படிக்கும் ஜெயலலிதா

போயஸ்காடன் - கோபாலபுரத்து லேட்டஸ் நையாண்டி!

அக்டிவ்வா இருங்கள் என
அனைவரும் சொல்கின்றனர் - நானோ
இந்த வயசிலும் குடும்ப
அரசியலில் அக்டிவ்வா இருக்கிறேன் - அடுத்தவர்
சொத்தை ஆட்டயப் போட்டு
ஏழைகள் வாழ்வில் இலவசம் கொடுத்து
ஆசியாவின் பணக்காரர் லிஸ்ட்டில்
ரேட்டிங்கில் கலக்கிறேன் - பாராட்டு
மீட்டிங் என்றால் நமீதா டான்ஸ் இல்லையா என
பாவமாய் கேட்கிறேன்!

Wednesday, September 4, 2013

சோக்கான சோனியா ஆண்டி & மம்மோகன் அங்கிள் கலக்கல் போட்டோஸ்

இன்றளவில் அரசியலில் மிகவும் பரபரப்பான ஜோடிகளாக விளங்குபவர்கள் நம்ம சோனியா ஆண்டியும் மம்மோகன் அங்கிளும் தான். ஸோ.. அவங்களை நம்மாளுங்க எல்லோரும் பேஸ்புக்கில் எப்படி கழுவி கழுவி ஊத்துறாங்க என்பதற்குச் சான்றாக சில படங்கள்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, September 1, 2013

பேஸ்புக் & டுவிட்டரில் பட்டயக் கெளப்பும் க(கொ)லைஞர்!

தமிழினத் தலைவர் - இலவசங்களால் தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கும் வள்ள, டில்லிக்கு தந்தி அடிக்கும் செம்மல் ஐயா கலைஞர் பேஸ்புக்கில் வருகை தந்த மகிழ்வான தருணத்தில் நம்ம பதிவர்களின் மன நிலை எப்படி இருந்தது தெரியுமா?
தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

Tuesday, August 27, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலையுறும் தொண்டர்கள்?


85 ப்ளஸ் வயதில் ஒரு மனிதனால் ஓர் சமூகத்தின், ஒரு மாநிலத்தின் தலை விதியைத் தீர்மானிக்க முடியும் என்றால் அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு கலைஞர் ஜி! மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதமான ஆசை இருக்கும். ஆனால் பொன் ஆசை ஒரு மனிதனுக்கு இருந்தால் பொன் பொருளை அள்ளிக் கொடுத்து அந்த ஆசையை விரட்டிடலாம். பெண் ஆசை இருந்தால், அதுவும் அவனுக்குப் பெண்கள் பற்றிய தெளிவு வருகின்ற போது இல்லாது போய் விடும். ஆனால் ஒரு மனுஷனுக்கு மண்ணாசை இருந்தால் என்னா பண்ண முடியும்? எப்படியுங்க விரட்ட முடியும்? 

Friday, April 5, 2013

பொண்ணுங்கள பார்த்து இப்படி பேசலாமா?


வணக்கம் உறவுகளே, இன்று எல்லோரும் சைக்கிள் ஓடுவோமா?
 இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)

சைக்கிள்களில் நம்ம ஊரில் பேமஸ் றல்லி (Ralli), லுமாலா (Lumala), இந்த இரண்டும் தான், இதற்கு அடுத்த படியாக ஹீரோ(Hero) சைக்கிள் இருந்திச்சு. றல்லி சைக்கிளை வயசான ஆளுங்க தான் அதிகமாக விரும்பி ஓடுவாங்க,(90'S_)
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.

Friday, August 17, 2012

பேஸ்புக், டுவிட்டரில் கலைஞர் - பொழுதுபோக்கிற்கு ஏது குறைச்சல்!

தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

Saturday, August 4, 2012

ஜெயலலிதா பிரதமரா? கேப்டன் காட்டம்- மகிழ்ச்சியில் கோபாலபுரம்!

கேளிக்கையில் கோபாலபுரம் - கோபத்தில் ஜெயா - வழக்கம் போல ஓவர் மப்பில் கேப்டன் - வெட்டியாய் மொக்க போடுறேன் நான்!! 

எமலோகத்தில் எம தர்மனும், குழுவினரும் பேசிக் கொள்கிறார்கள்.

*எமனின் சீடன்: மன்னா!! கேட்டீர்களா சேதி? பூலோகத்தில் ஜெயலலிதா எனும் முன்னாள் நடிகையை பிரதமராக தகுதி உள்ளவரா அப்படீன்னு கேப்டன் கேட்டுப்புட்டாராம்.
எம தர்மன்: அப்படியா சங்கதி? அதைக் கேட்பவருக்கு கேள்வி கேட்கிற தகுதி இருக்கான்னு அம்மா கேட்கமால் விட்டுப்புட்டாங்களே!!

Thursday, August 2, 2012

கலைஞரும் - ஜெயாவும் தில்லாலங்கடி ஆடினா எப்படியிருக்கும்?

வணக்கம் அன்பு உறவுகளே, சேமம் எப்படி?
அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டாலே பூமி தாங்காதுன்னு பேசிக்குவாங்க. அந்த லட்சணத்தில கலைஞரும், ஜெயாவும் தில்லாலங்கடி ஆடினால் நம்ம நெலமை என்னாவது அப்படீன்னு ஒரு சிலரும், இப்போ ஐயாவும் - அம்மாவும் இதைத் தானே ஆட்சி கட்டிலில் பண்ணிட்டு இருக்காங்க அப்படீன்னு இன்னும் சிலரும் யோசிக்கிறீங்க தானே. சரி வாருங்க! இன்றைய பதிவினுள் நுழைவோம். 

Monday, July 30, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப்.எம்

புதுப் பொலிவுடன் உங்கள் புரட்சி எப்.எம்
அன்பிற்கினிய உறவுகளே,
பதிவுலகத்தில் உள்ள நாற்று முக நூல் குழும உறவுகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாக உங்களை இப்பொழுது புதுப் பொலிவுடன் நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம் - புரட்சி எப்.எம்.
இணைய வானொலிகள் வரிசையில் புதுப் புரட்சி படைக்கும் வண்ணம் எமது வானொலி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Saturday, April 28, 2012

திமுக அல்லக்கைஸை முட்டாளாக்கும் கருநாய்நிதி!

கழக கண் மணிகளே! குவாட்டர் கட்டிங் செய்வோம்! ஓடியாங்க! 
இன்று உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் பொருளாதார நிலமைகளை உன்னிப்பாக அவாதானித்தால் ஒவ்வோர் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அந் நாடுகளில் ஆட்சியில் உள்ளோரின் சிறப்பான திட்டமிடலும், வழி நடத்தலும் தான் காரணமாக இருக்கும். ஆனால் நம்ம இலங்கை, இந்திய நாடுகளில் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளோட புள்ளைங்க நிலமை தான் சிறப்பாக இருக்கும். இதற்கான காரணம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மந்திரிகளின் சீரிய பணியும், குடும்ப அரசியலுமே ஆகும். என்றைக்கு எம் தலைவர்கள் மக்கள் மேல் தீவிர அக்கறை கொண்டு நாட்டின் முன்னேற்றம் பத்தி சிந்திக்கிறாங்களோ, அன்றைக்கு தான் நம்ம நாடுகளின் வீதிகள் பள பளக்கும், ஏழைகள் இல்லாது நம்ம நாடுகள் பொருளாதாரத்தில் வலுவாக வளர்சியடையும்.

Thursday, March 29, 2012

வட்டியும் முதலுமாக இலங்கையிடம் இந்தியா வாங்கி கட்டுமா?

இந்தியாவைப் போர்க் குற்ற வழக்கில் நிறுத்தப் போகும் இலங்கை! காஷ்மீர் படுகொலைகள் மீண்டும் கிளறப்படுமா? 
எல்லோருக்கும் வணக்கமுங்கோ, இனிய சந்தோசமான வியாழக்கிழமை வாழ்த்துக்களுங்கோ!

Friday, March 23, 2012

போலீஸ் வெறியாட்டத்தால் பொசுங்கிப் போகுமா கூடங்குளம் போராட்டம்?

நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதா! நம்பி கெட்ட அப்பாவி மக்கள்!

கூடங்குளம் அணு உலையினை மூடக் கோரி கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 20km தூரத்தினுள் வசிக்கும் மக்களால் கடந்த வருடம் புரட்டாதி மாதம் முதல் பல்வேறுபட்ட போராட்டங்கள் அஹிம்சை முறையில் இடம் பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இப் போராட்டங்களினை நன்கு திட்டமிட்டு நசுக்கும் நோக்கில் சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் "அணு உலை சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது. மக்கள் குடியிருப்புக்களின் மத்தியில் அணு உலையினை நிறுவி இருப்பது தவறு. தானும் கூடங்குளம் மக்களுள் ஒருவராக போராட்டக் களத்தில் வெகு விரைவில் இருப்பேன்” என அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையானது சங்கரன் கோவில் இடைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை என அப்பொழுது யாருமே நினைத்திருக்கவில்லை.

Tuesday, March 13, 2012

இத்தாலி நாய்க்கு இலங்கை என்ன நக்கும் எலும்புத் துண்டா?

இத்தாலி நாய் நீஎன
இன்று எல்லோரும்
உனை அழைக்கிறார்கள்
இதற்கான காரணம்
என்னவாய் இருக்கும் என
இரவு பகலாய் தேடினேன்
இலகுவில் பல விடைகள்
கிடைத்ததால் இங்கு நான் பகிர்கிறேன்!

Monday, March 12, 2012

சங்கரன் கோவிலில் அரங்கேறப் போகும் சிங்கிடி நடனம்!

எம் உறவுகளின்
ஊரில் இப்போது
தேர்தல் காலம்!

தம் தேவைகளை உணர்ந்தோராய்
வேட்பாளர்கள் அனைவரும்
 வீடு தேடி வரும் காலம்
கையெடுத்து கும்பிட்டு
தம் சுயத்தை வெளிப்படுத்த
கவலையின்றி பிச்சை கேட்கும் காலம்!

பொய்களையெல்லாம் வர்ணமடித்து
பேச்சோசை எனும் பூ(ச்) சூடி
அலங்கரித்து, அழகாக்கி
அனைவரின் கதவுகளையும் தட்டி
வாக்குக் கேட்கும் இழிவான காலம்!
வங்குரோத்து அரசியல்வாதிகளின்
வயித்து பிழைப்புக்கான வசந்த காலம்!!

Friday, March 9, 2012

சங்கரன் கோவில் தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!

நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க