Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Friday, March 9, 2012

சங்கரன் கோவில் தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!

நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;

Sunday, May 8, 2011

பெரியவர்களுக்கான பாப்பா பாடல்கள்!

பாப்பா!

பாப்பா பாப்பா என்றதும்
பார்க்காமல் நீ போகிறாய்
தாழ்ப்பாளைத் தான் போட்டுமே
தவிப்பை நீயும் தூண்டுறாய்
அண்ணாந்து மேல் பார்க்கையில்
அழகாய் காட்சி தருகிறாய், 
அன்பிற்குமே சாட்சியாய், 
ஆடை நீக்கி வருகிறாய்
ஆசைக்கும் ஓர் தூண்டலாய்
நீதான் இங்கு இருக்கிறாய்!


Thursday, April 7, 2011

நான் ஒரு பெண் வாங்கியுள்ளேன்!

SMART COMMENT FOUNDER SAID: This is a adult only Concept, No permission For Babies.   


உறவுகளே, இப் பதிவினூடாக உங்களின் தமிழறிவிற்குச் சவால் விட வந்திருக்கிறேன்.  இங்கே நான்கு தலைப்புக்களில் உங்களுக்கான, உங்கள் சிந்தனைகளைத் தூண்டக் கூடிய, உங்கள் மூளைகளுக்கு வேலை கொடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளன.

போட்டி விதி முறைகள்: ஒருவர் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் பதில் சொல்லலாம், எத்தனை தடவை வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் பரிசில்கள் இறுதி முடிவுகளின் பின்னர் தான் வழங்கப்படும்.


Tuesday, April 5, 2011

நாங்கள் நாதியற்றவர்கள்!

கீறல் விழுந்த கண்ணாடியாய்
கிளைகளற்ற மரத்தின்
உயிர்த் துடிப்பாய்
இப்போது நாங்கள்!

விரும்பிய போது
எடுத்தாளவும்
வேண்டிய போது
வேகமெடுத்ததுமாய்
எங்களின் கடந்த காலங்கள்;

Wednesday, March 30, 2011

தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!

நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;

வீரியம் மிக்க விதைகளாக
விளைச்சல்களை அதிகரிக்கும்
பயிர்களைப் பயிரிட
அவர்கள் ஒவ்வோர் முறையும்
எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்
தாங்கள் புசித்த எலும்புத் துண்டுகளின்
எச்சில் நாற்றம் காயும் முன்னே
எங்களை விலை பேச
கைகளை உயர்த்தியபடி
தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!

Tuesday, March 29, 2011

மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!


ஆஹா இனி நம்ம பாட்டுக்குப் சிவனே என்று இருக்கலாம். கொஞ்ச நாளா, எங்கடை பதிவுகளுக்கு வந்து அறு அறு என்று எங்களையெல்லாம் அறுத்துத் தள்ளிய, நோண்டி நொங்கெடுத்த நம்ம நிரூபன் பயபுள்ளை இனிமே வலைப் பதிவிற்கு வரமாட்டான். சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க