பாப்பா பாப்பா என்றதும் பார்க்காமல் நீ போகிறாய் தாழ்ப்பாளைத் தான் போட்டுமே தவிப்பை நீயும் தூண்டுறாய் அண்ணாந்து மேல் பார்க்கையில் அழகாய் காட்சி தருகிறாய், அன்பிற்குமே சாட்சியாய், ஆடை நீக்கி வருகிறாய் ஆசைக்கும் ஓர் தூண்டலாய் நீதான் இங்கு இருக்கிறாய்!
யூரியூப்பில் கடந்த வாரம் உலா வந்து கொண்டிருந்த போது ஒரு நம்மவர் பாடல் கண்ணில் பட்டது. மிகவும் இயல்பான, அனைவருக்கும் விளங்கும் மொழி நடையில், மென்மையான கவி வரிகளோடு அழுத்தமான குரலில் ஒரு உறுதியான பாடல். பெண்களின் பெருமைகளைப் பற்றிச் சொல்லும் ஒரு றப் பாடல். தமிழில் இதனைச் சொல்லிசை என்று சொல்லுவார்கள்.