Showing posts with label வானொலி. Show all posts
Showing posts with label வானொலி. Show all posts

Saturday, August 4, 2012

வலைப் பதிவு வரலாற்றில் முதன் முறையாக ஓர் புரட்சி!

நீங்களும் நேரடியாக ப்ளாக்கர் எப்.எம் வானொலியில் இணைந்து கொள்ளலாம்! 

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய உறவுகளே, என்னடா இவன் ரொம்ப தொல்லை பண்றானே அப்படீன்னு யோசிக்கிறீங்களா?
கவலையை விடுங்க. உங்கள் புரட்சி இணைய வானொலியில் இப்பொழுது ஒலிபரப்பாகும் "காதலா காதலா” நிகழ்ச்சியில் நீங்களும் நேரடியாக இந்தப் பதிவின் பின்னூட்டப் பெட்டி வாயிலாக இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழ முடியும். அன்பு உறவுகளே, நீங்கள் விரும்பி கேட்கும் பாடலை, யார் யாருக்காக கேட்கிறீங்க என்ற விபரத்தோடு உடனுக்குடன் பின்னூட்டம் ஊடாகப் பகிருங்கள். உங்களுக்காக பாடல் ஒலிபரப்ப காத்திருக்கிறார் "காதலா காதலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இராமலிங்கம் இராகவன் அவர்கள்.

Monday, July 30, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப்.எம்

புதுப் பொலிவுடன் உங்கள் புரட்சி எப்.எம்
அன்பிற்கினிய உறவுகளே,
பதிவுலகத்தில் உள்ள நாற்று முக நூல் குழும உறவுகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாக உங்களை இப்பொழுது புதுப் பொலிவுடன் நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம் - புரட்சி எப்.எம்.
இணைய வானொலிகள் வரிசையில் புதுப் புரட்சி படைக்கும் வண்ணம் எமது வானொலி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tuesday, July 3, 2012

தமிழ் வலைப் பதிவு வரலாற்றில் ஓர் புதுப் புரட்சி!

தமிழ் இணைய உலகில் முதன் முறையாக ஒரு நேரடி ஒலிபரப்பு:
அன்பிற்குரிய சொந்தங்களே..
இன்றைய தினம் உங்கள் நாற்று வலைப் பதிவு குழுமத்தின் இன்னோர் படைப்பாக இணையத் தளத்தினூடாக ஓர் நேரடி விவாத மேடை இடம் பெறவிருக்கிறது.
நீங்கள் நேரடியாக எமது புரட்சி இணைய வானொலியினைக் கேட்டவாறு விவாத மேடையில் இணைந்து கொள்ளலாம்.
வானொலியைக் கேட்க: http://www.puradsifm.com/
தொலைபேசியூடாக இணைந்து கொள்ள: 
ஐரோப்பிய தொலைபேசி இலக்கம்: 0044 -1622 370644
Skype ஊடாக நீங்கள் இணைந்து கொள்ள: puradsifm
விவாத மேடையின் தலைப்பு:
உலக நாடுகளோடு ஒப்பிடும் போது.. தமிழர்களின் கல்வி முறை வளர்ச்சியடைகின்றதா?
அல்லது பின்னோக்கிச் செல்கின்றதா?
நேரலையில் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து மகிழுங்கள்..
முக நூலில் எம்மோடு இணைந்து கொண்டு உங்கள் விருப்ப பாடல்களை, இந்த விவாத மேடை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் உறவுகளே..

உங்கள் பேராதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

புரட்சி இணைய வானொலி குழுவினர்.




தமிழரின் கல்வி முறை கற்பழிக்கப்படுகின்றதா? - விவாத மேடை

அன்பிற்குரிய சொந்தங்களே.. வணக்கம் 
நலமா?
நீண்ட நாட்களின் பின்னர் வித்தியாசமான ஓர் விவாத மேடையுடன் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலகில் ஓர் புதிய புரட்சியாக நாற்று பேஸ்புக் குழும நண்பர்கள் இணைந்து உருவாக்கிய புரட்சி எப். எம் எனப்படும் ப்ளாக்கர் எப்.எம் இல் நாளைய தினம் இடம் பெறும் நேரடி ஒலிபரப்பில் ஓர் விவாத மேடை உங்களிற்காய் காத்திருக்கிறது. 

Sunday, July 1, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப் எம்

நேரடி ஒலிபரப்பு:
அன்பிற்குரிய வலையுலக உறவுகளே,
வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க)

Sunday, May 27, 2012

உறவுப் பாலமும், உணர்வுச் சிதறல்களும்!

ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக கள முனைச் செய்திகளை நேரடியாகத் தொகுத்து வழங்கும் நோக்கில் தமீழ விடுதலைப் புலிகள் நேரடி ஒலிபரப்பினை, முழு நேர போர்க் காலச் சிறப்பு வானொலி ஒலிபரப்பினைச் செய்த காலப் பகுதி அது. ஆம் 1999ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, கள முனைச் செய்திகள் புலிகளின் குரல் வானொலியின் போர்க் காலச் சிறப்பு ஒலிபரப்பினூடாக உடனுக்குடன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. என்ன தான் சிறப்பு ஒலிபரப்பினூடாகச் செய்திகளைக் கேட்டாலும், மனம் அடங்குமா? இரவாகி விடிந்து எழும்பும் போது நள்ளிரவில் என்ன நடந்திருக்கும் என்பதனை அறிய மனம் ஆவல் கொண்டது. 

Wednesday, November 23, 2011

ஈழத்தில் சோதனைகளின் மத்தியில் சாதனை படைத்த புலிக் குரல்!

ஒரு போராட்டத்தின் வெற்றிக்கும், அப் போராட்டமானது மக்கள் மனங்களை வெல்வதற்கும் ஊடகங்களின் பணி அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கும், போராட்ட கள நிலமைகளை மக்கள் முன் கொண்டு செல்வதற்கும் ஊடகங்களின் பணி இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இதனை நன்கு உணர்ந்த புலிகள் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைச் சேவைகளை ஆரம்பித்தார்கள்.ஈழத்தில் பல்வேறு இடர்களையும், இடப் பெயர்வுகளையும் சந்தித்தாலும் மக்களுக்காக ஓயாது ஓங்கி ஒலித்த வானொலி எனும் பெருமையினைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது தான் புலிகளின் குரல் வானொலியாகும்.

Sunday, November 20, 2011

ஈழப் போராட்டத்தை வேகப்படுத்திய புலிக் குரல்!

ஈழத் தமிழர்களின் வாழ்வில் கார்த்திகை மாதம் பல வழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. விடுதலைக்காக தன் மூச்சை நிறுத்திய ஓர் உயிரின் இறப்பும், விடுதலை வேண்டிய தமிழர்களினை வேகப்படுத்திட ஓர் உயிரின் உயிர்ப்பும் இம் மாதத்தில் தான் அரங்கேறின. ஈழத்தில் முன்பொரு காலத்தில் இந்த இரு பெரும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் அப்பால் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ காவல் துறை முதலியவையும் இந்த கார்த்திகை மாதத்தில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாயக மக்களின் உண்மைக் குரலாய்,  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் எண்ணக் குரலாய் புலிகளின் குரல் ஈழத்தின் வட கிழக்கெங்கும் தன் ஒலி வீச்சு எல்லையை விரிவுபடுத்தியிருந்தது.

Friday, May 27, 2011

ஆபாச அறிவிப்பு- உண்மைச் சம்பவம்!

ம்….அச்சும், ம்…..இர்……ருர்ர்……….எனச் செருமியவாறு மாறன் தன் குரலைச் சரி செய்து கொண்டிருந்தான். ''நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்கள் அபிமான பேரலை எப் எம், நேரம் சரியாக......சீ இது நல்லா இல்லையே, இது இலங்கை வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் குரல் மாதிரியெல்லோ இருக்கு. அவரைப் பாலோ பண்ணி, அவரை மாதிரிப் பேசுவதை விடக் கொஞ்சம் வெரைட்டியா ட்ரை பண்ணிப் பார்ப்போம் எனத் தனக்குள் யோசித்தவனாய் மாறன் தன் குரல் பயிற்சியினைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க