Saturday, April 30, 2011

ஈழத்திற்காய் தீக்குளிக்கப் போகும் புதுமைப் பெண்!

ணக்கம் உறவுகளே, பல தசாப்த காலமாக எம்மையெல்லாம் கொன்றொழித்து, அகதியாக்கி, அவல வாழ்வைத் தந்த யுத்தம் இன்று எம்மை விட்டு நீங்கி விட்டது, ஆனாலும் பலரது வாழ்வு இன்றும் யுத்தம் நிறைந்த சிறைச்சாலைகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ன்னியில் இறுதி வரை இருந்து வாழ்வைத் தொலைத்து; செத்துப் பிழைத்த எவருமே, இன்னொரு போரை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால், இனியும் ஒரு போர் வேண்டும் என ஒரு தொகுதிப் புலம் பெயர் மக்கள் விரும்புகிறார்களே! அதன் பின்னணி என்ன?  சமீபத்தில் எங்கள் வலைகளுக்கு வந்த ஒரு புலம் பெயர் நபர், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஒருவர்,
வன்னியில் நடந்த விளைவுகளைச் சொன்னால், தமிழ் நாட்டில் தமிழன் தீக்குளிப்பானா? என்று கேட்டிருகிறார். இவரின் மன நிலையில், தாங்கள் மட்டும் வாழ வேண்டும், ஏனையவர் சாக வேண்டும் எனும் எண்ணம் தானே இருக்கிறது.

Friday, April 29, 2011

கிளு கிளு கவிதைகள்!

விளையாட்டு விபரீதமானதே!

எதிர் வீட்டு(ச்) சாந்தி- என்னை
ஏறெடுத்துப் பார்த்தாள்
’மதில் தாண்டி
ஏதேதோ செய்த பின்னர்
எடுத்து விட்டாள் வாந்தி- இதற்கு
காரணமாய் நான் இல்லை
எனபதற்கு அம் மதிலே சாட்சி!

Thursday, April 28, 2011

நான் பட்ட அவஸ்தை, இனி யாருக்கும் வேண்டாம்! உண்மைச் சம்பவம்!

வணக்கம் உறவுகளே, இது ரொம்பவும் சுவாரசியமான மேட்டர், அதுவும் பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த மேட்டராக இருந்தாலும், இப்போதும் சூடாகத் தான் இருக்கும், பட்டையைக் கிளப்பும் எனும் நம்பிக்கையில் வெட்கத்தை விட்டுப் பல உண்மைகளை வெளியே சொல்லப் போறேன்.
மத்தவனோடை துன்பம் என்றால், எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!

Wednesday, April 27, 2011

பதிவர்களே! உங்களால் முடியுமா?

வலையுலக வல்லவர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஒரு சவாலான விடயத்தினம் இருக்கிறது, அது என்னவென்று தெரியுமா?
’எடுங்கடா அந்த அருவாளை, இவனை ஒரே போடாப் போட்டிடுவம் என்று நீங்க கிளம்ப முன்னாடி, நேரா மேட்டருக்கு வந்துடுறேன் உறவுகளே!

நாம சின்ன வயசிலை பள்ளிக் கூடத்திலை படிக்கும் போது குறளி வித்தைகள் செய்திருப்போம் தானே? குறளி வித்தைகள் என்பது; பள்ளிக் காலத்தில் நாம் செய்த குறும்புகள். அந்தப் பள்ளிக் காலக் குறும்புகள் வரிசையில், ஒரு சில சவாலான விடயங்களை, விவகாரமான மேட்டர்களை யாருமே இலகுவில் மறக்க மாட்டோம்.

Monday, April 25, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 2

முதற் பாகம்...மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................எனும் வகையில் நிறை வடைந்திருந்தது. தவற விட்டவர்கள், இங்கே கிளிக் பண்ணிப் படிக்கலாம். 

மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.

Saturday, April 23, 2011

பதிவர்களே, உங்களுக்கோர் சவால்- காமெடி ஜிம்மி!

சும்மா இருக்கிற சிங்களையெல்லாம் சீண்டிப் பார்க்கிறதுக்கு நான் ரெடி ஆகிட்டேன். ஹா..ஹா...
 இப்போ மேட்டர் என்னன்னா, இன்னைக்கு ஒரு கல, கல கலக்கல் காமெடி போட்டியை என் வலையில் உங்கள் அனைவரின் ஆதரவோடும் நடாத்தலாம் என்றிருக்கிறேன்.

Friday, April 22, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

மீண்டும் அதே கணங்கள், அதே வலி சுமந்த நினைவுகள், உணவின்றி உயிர் மட்டும் ஊசலாடிய ரணங்கள் நிறைந்த மரத்தடி வாழ்க்கை இனிமேல் வரவே வரக் கூடாது எனும் எண்ணம் இப்போது எல்லார் மனங்களிலும் உட் புகுந்து விட்டது. ஆனாலும் என் ஞாபகச் சிதறல்களில் வெடி வைத்து, ஆங்காங்கே காயங்களை உண்டாக்கிய சீழ் கலந்த பருக்களை இலகுவில் அழித்து விட முடியாது எனும் எண்ணத்தோடு; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.

கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்!

இலங்கை, இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன.

Thursday, April 21, 2011

பெண்களுக்கான சூடான மேட்டர்கள்!

வணக்கம் உறவுகளே! இன்று முதல் வலைப் பதிவில் ஒரு வித்தியாசமான முயற்சியினைக் கொண்டு வரலாம் எனும் நோக்கத்தோடு களம் இறங்குகிறேன். நேற்று இரவு தான் ’டன்சல் வோஷிங்கன்’(Danzel washington)  என் கனவில் வந்தார். ’’அடப் பாவிப் பொடியா; உன் பதிவுகளுக்கெல்லாம் ஏடா கூடாமாகத் தலைப்பு வைச்சு மகளிர் அணியினரின் சாபத்திற்கு ஆளாகி விட்டாய். ’’அவங்க எல்லோரும் உன் பக்கம் வாறதைக் குறைச்சிட்டாங்க என்று; ஒரு பெரிய Unstoppable குண்டை என் தலை மீது போட்டு விட்டுப் போய் விட்டார்.

Wednesday, April 20, 2011

குழந்தை தாய்ப் பாலில் அடங்குமா அல்லது தகரப் பாலில் அடங்குமா?

கலவன் பள்ளிக் கூடமும், காதல் செய்யும் ஆசிரியர்களும்- பாகம் 02

டீச்சர் டிங்குசாவும் மாணவர்களும்!

வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. இன்றைக்கு நாங்கள் கூட்டல் கழித்தல் பற்றிப் படிப்போம் சரியா என்று கேட்டு விட்டு, பிள்ளைகளே
5+3=8(வலக் கையிலை ஐந்து விரலையும், இடக் கையிலை மூன்று விரலையும் எடுத்துக் கூட்டிப் பாருங்கோ.. விடை சரியாக வரும்..)

Tuesday, April 19, 2011

பொய் கலந்த புன்னகைகள்!

’’டோய் மச்சான் சுதன், இன்றைக்கு எப்படியும் ரியூசன் முடிய அவளிட்டை முடிவைக் கேட்டிட வேணும், மறக்காமல் என்னோடை வந்திடு சரியோ எனச் சொல்லியபடி வகுப்பறையில் அமர்ந்திருந்து மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருந்தான் அருண்.

ரீயூசன் முடியும் நேரமும் வந்தது, பெண்கள் எல்லோரும் வகுப்பறையினை விட்டுக் கிளம்பிய பின்னர் தான் ஆண்கள் வெளியே போக முடியும் எனும் எங்களூர் ரியூசன் வழக்கப்படி, தன் பொறுமையினை, இந்தப் பாழாய்ப் போன ரியூசன் மாஸ்டர் செக் பண்ணுகிறார் என நொந்து கொண்டான் அருண்.

Sunday, April 17, 2011

நிர்வாணத் தியேட்டரில் ஓடி முடிந்த நீலப் படங்கள்!

ஆனையிறவின் உப்பளக் காற்றில்
கரைந்து போன 
உதிரங்களின் சுவாசத்தில் 
பிறந்திருந்தது, எங்களுக்கான 
ஒரு வசந்த காலப் பொழுது

ஒரு கும்மிருட்டை(க்)
குதூகலத்துடன் தரிசித்த
பெருமையில் 
பேருவகை கொண்டிருந்தோம், 
மிக நீண்ட நாட்களின் பின்னர்
கந்தகத்துகள்களினால் நிறைந்திருந்த
எங்கள் காற்று மண்டலத்தில்
நறுமணம் பரவத் தொடங்கியது,

Thursday, April 14, 2011

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

கலவன் பள்ளிக் கூடமும், காதல் செய்யும் ஆசிரியர்களும்!

ஆசிரியர்களை, மாதா, பிதா, குரு தெய்வம் எனும் அடிப்படையில் முதன்மைப் படுத்துவார்கள். ஆனாலும் புனிதமான இந்த ஆசிரியர் தொழில் அலுத்து விட்டால், அரட்டை அடித்தே பாட நேரத்தை ஓட்டும் ஆசிரியர்களும் நம் ஊர்களில் இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில் இலகுவான ஒரு தொழிலல்ல. தாங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் பாடம் தொடர்பாக ஏற்கனவே முன் ஆயத்தம் செய்து கொண்டு(Prepare) பாடசாலைக்குச் சென்றால் தான் மாணவர்கள் கேட்கும் கேள்விகளிற்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்கள் ஏதாவது சந்தேகங்களைக் கேட்டால், சில நேரம் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி விட்டு, பின்னர் மாணவனிடமே சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டு விட்டு, மாணவனின் வாயை அடக்கிய பின்னர் பாடத்தைத் தொடருவார்கள்.

Tuesday, April 12, 2011

தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி!

தமிழகத் தேர்தலும், தமிழர்களின் பழக்க தோசங்களும்- 

ஆலமரத்தடி அரட்டை!

’’நேரம் ஆறு மணியாகப் போகிறது, எங்கே நம்மடை அரட்டைக் குறூப் மெம்பர்களை இன்னமும் காணோமே, எனத் தனக்குள் யோசித்தபடி, பாக்கெட்டினுள் இருந்த பக்கோடாவை மெல்லத் தொடங்கினார் மணியண்ணை. 


முதலில் இளையபிள்ளை ஆச்சி, 'நாதஸ்வரம் பிப்பீபி......பிப்பீபி..........
மேளச் சத்தம் டும்டும்.....டும்டும்........எனப் பாடியவாறு, ஆல மரத்தடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறா, ஆல மரத்தடியில் காத்திருந்த மணியத்தாரைக் கண்டதும், பாட்டை நைசாக லோ(Law) பிச்சிலில் குறைத்து முணு முணுத்துக் கொண்டு 
’’என்ன மணியண்ணை, இண்டைக்கு கொஞ்சம் ஏழியா(Early) வந்திட்டீங்க..... ஆல மரத்தடிக்கு, ஏதும் ஸ்பெசல் இருக்கோ? எனக் கேட்கத் தொடங்கிறா......

Saturday, April 9, 2011

வேஷம் போடும் சாதியம்- உண்மைச் சம்பவம்

வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளாது பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, வீதியினை வெறித்துப் பார்த்த படி குலைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் சத்தத்தைச் சகிக்க முடியாதவளாய், ’எடேய் தம்பி......சுதன்... , உனக்குப் பள்ளிக் கூட லீவெண்டால் காணும், பட்டம் கட்டி ஏத்தத் தொடங்கீடுவாய், இஞ்சை வா, ராசா, றோட்டிலை நாய் குலைச்சுக் கொண்டிருக்குது,  ஓடிப் போய் என்னவென்று பார்த்திட்டு வாவன் பிள்ளை’’ எனத் தனது மண் குடிசைக்குள் இருந்து குரலெழுப்பினாள் பாக்கியம்.

கருமமே கண் எனும் வாக்கிற்கமைவாக, இன்றைக்கு எப்படியாவது பட்டம் கட்டி, ஒட்டி, ஏத்தித் தான் தீருவேன் எனும் சபதத் தோடிருந்த சுதன், தாயின் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தவனாய், றோட்டினை நோக்கி விரைகிறான்.

Friday, April 8, 2011

உல் உங்களுக்கு சொல் சொல்லத் தெல் தெரியுமோ!

ஒவ்வோர் இனத்தினதும் அடையாளமாக மொழி இருக்கின்றது என்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. இராணுவங்களும், போராட்ட அமைப்புக்களும் தமது இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக, சங்கேத பாசைகளை நடை முறையில் வைத்திருக்கிறார்கள். இது என்னுடைய பாடசாலைக் கால நினைவுகளை மீட்டும் பதிவாகும்.

Thursday, April 7, 2011

நான் ஒரு பெண் வாங்கியுள்ளேன்!

SMART COMMENT FOUNDER SAID: This is a adult only Concept, No permission For Babies.   


உறவுகளே, இப் பதிவினூடாக உங்களின் தமிழறிவிற்குச் சவால் விட வந்திருக்கிறேன்.  இங்கே நான்கு தலைப்புக்களில் உங்களுக்கான, உங்கள் சிந்தனைகளைத் தூண்டக் கூடிய, உங்கள் மூளைகளுக்கு வேலை கொடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளன.

போட்டி விதி முறைகள்: ஒருவர் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் பதில் சொல்லலாம், எத்தனை தடவை வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் பரிசில்கள் இறுதி முடிவுகளின் பின்னர் தான் வழங்கப்படும்.

Tuesday, April 5, 2011

பதிவரசியலில் ஒரு பரபரப்பு! பதிவுலகில் ஒரு புதிய கண்டு பிடிப்பு!

பதிவிற்குள் நுழைய முன்: இப் பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தவல்ல. இப் பதிவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு யாராவது உரிமை கோரவிருப்பின் கம்பனி பொறுப்பேற்காது.

பதிவுலகில் மிக நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. பதிவினைப் படிக்காது பின்னூட்டம் போடும் நபர்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்பது தான். பதிவுலகின் பரபரப்புப் பதிவர்களும், தொழில் நுட்ப ஆய்வாளர்களும் இதற்குரிய விடையினைத் தெரியாதவர்களாய் தங்கள் மண்டையினைச் சொறிந்து, பெல் மூடி போன்ற வழுக்கைத் தோற்றத்தினைத் தமது தலைகளுக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நல் வேளையில், ஒரு புதிய கண்டு பிடிப்பினை நான் உங்கள் அனைவருக்குமாகச் செய்துள்ளேன்! அது என்ன?

நாங்கள் நாதியற்றவர்கள்!

கீறல் விழுந்த கண்ணாடியாய்
கிளைகளற்ற மரத்தின்
உயிர்த் துடிப்பாய்
இப்போது நாங்கள்!

விரும்பிய போது
எடுத்தாளவும்
வேண்டிய போது
வேகமெடுத்ததுமாய்
எங்களின் கடந்த காலங்கள்;

Sunday, April 3, 2011

ஈழத்தில் சாதியம்- (பாகம் 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

வணக்கம் உறவுகளே, ஈழத்தில் சாதியம் எனும் இத் தொடரின் இரண்டாவது பகுதியினை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு ஆய்வுக் கட்டுரையினைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமானது என்பதனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

இத் தொடரின் ஒரு சில கருத்துக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காரணத்தாலும், இத் தொடர் பற்றிப் பல நூல்களை வாசிக்க வேண்டிய காரணத்தினாலும், இத் தொடரின் இரண்டாவது அங்கத்தை ஒரு மாதம் கழித்துப் பகிர்ந்து கொள்கிறேன்.

Saturday, April 2, 2011

எழுத்தாளர், கவிஞர் குட்டி ரேவதியிடம் சில கேள்விகள்!

எழுத்தாளர், கவிஞர்- குட்டி ரேவதி, மற்றும் கூடு தமிழ் ஸ்டூடியோ இணையத்தள நிர்வாகிகளிடம் சில கேள்விகள்!

உறவுகளே, அண்மையில் இணையத்தில் வலம், வந்து கொண்டிருந்த போது எதேச்சையாக குட்டி ரேவதி அவர்களால் கூடு. தமிழ்ஸ்டூடியோ எனும் இணையத்தளத்தில் ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள் எனும் தொடரினைப் படிக்க நேர்ந்தது. இத் தொடரின் ஏழாவது பாகத்திலே ஈழத்துப் பெண் கவிஞராகிய ஆழியாளின் கவிதைகளையும், அவர் ஈழத்துக் கவிதை மரபின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்களையும் குட்டி ரேவதி விளக்கியிருந்தார்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க