Showing posts with label இனப் படு கொலை. Show all posts
Showing posts with label இனப் படு கொலை. Show all posts

Thursday, March 8, 2012

இலங்கைக்கு அமெரிக்கா விதித்திருக்கும் காலக் கெடு!

அச்சத்தில் சிங்கள தேசம் - ஆரவாரத்தில் தமிழர்கள் - ஆப்பினை அகற்றும் முயற்சியில் அல்லக்கை அமைச்சர்கள்!
இறுதிப் போரின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள், சர்வதேச போர் விதிகளுக்கு முரணான அரஜாகங்கள், மற்றும் கொடூரமான சம்பவங்கள் பல தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டதாக தகவல்கள் கசியத் தொடங்கின. இறுதிப் போர் முடிந்த பின்னர், இலங்கையின் அக்கிரமங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என தமிழர் தரப்பினர் இடை விடாது குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். 

Monday, February 13, 2012

தமிழரை வருத்தி கொல்லும் பிரிவினைகளும் பிரதேசவாதமும்

பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்: 
எல்லோருக்கும் வணக்கமுங்க,
இப் பதிவினூடாக நாம் படிக்கவிருப்பது; வன்னிப் பகுதியில் வாழும் தமிழர்களிடையே காணப்படும் உட் பூசல்கள் / பிரிவினைகள் பற்றிய அலசலாகும். தமிழர்கள் இன அடிப்படையில் ஒற்றுமையின்றி, வடக்கான் என்றும், கிழக்கான் என்றும், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்றும் தமக்குள் தாமே பிரிவினை பாராட்டி வரும் சூழலில், அந்தப் பிரிவினைகள் பற்றி பேச முன்பதாக தனித் தனியாக தமிழன் வாழும் சூழலில் எவ்வாறு அவன் புறக்கணிக்கப்படுகின்றான் என்பதனை உணர்த்திட ஓர் பதிவினை எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் முதலாவது பாகத்துடன் எம் அழுக்குகளை நாமே தோண்டி மணப்பது அழகல்ல எனக் கூறி அந்தப் பதிவினை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்கள். அப்படியே நிறுத்தி வைத்த பதிவினை மீண்டும் ஆரம்பித்தாச்சு.

Monday, January 30, 2012

ஈழச் சிசுவை கொன்றொழித்த ஈன பிரதேசவாதம்!

யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
அனைவருக்கும் வணக்கமுங்க; யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன, இவை பூகோள அடிப்படையில் குடாநாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில்; பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தன. இங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே! (நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது ஈழச் சிசுவைக் கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம் தொடரின் இரண்டாவது பாகமாகும். இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

Saturday, January 28, 2012

ஈழச் சிசுவை கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம்!

தயவு செய்து பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்!!
நாற்று வலைப் பதிவினை நாடி வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கம், தமிழன் என்கின்ற தனித்துவமான இனக் கட்டமைப்பினுள், காலந் தோறும் பிரதேசவாதங்களும், மதவாதங்களும் தலை விரித்தாடுவது விரும்பத்தக்க விடயமல்ல. ஒன்றுபட்ட இனமாக தம்மிடையேயான பேதங்களைக் களைந்து தமிழன் ஓரணியின் கீழ் நின்றிருந்தால் இந் நேரம் வென்று நிமிர்ந்த தலை முறையாக இந்தப் பூமியில் நாம் நிமிர்ந்திருப்போம். பிரதேசவாதம், சாதியம், போர் ஆகியவை தொடர்பான மாற்றுக் கருத்துக்களை வலையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் எழுதி வந்தேன். நண்பர்களான சிபி செந்தில்குமார், கந்தசாமி, ஓட்டவடை நாராயணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வகையறாப் பதிவுகளை கொஞ்ச காலம் தொடருவதில்லை என ஒதுக்கி வைத்திருந்தேன். 

Saturday, April 30, 2011

ஈழத்திற்காய் தீக்குளிக்கப் போகும் புதுமைப் பெண்!

வணக்கம் உறவுகளே, பல தசாப்த காலமாக எம்மையெல்லாம் கொன்றொழித்து, அகதியாக்கி, அவல வாழ்வைத் தந்த யுத்தம் இன்று எம்மை விட்டு நீங்கி விட்டது, ஆனாலும் பலரது வாழ்வு இன்றும் யுத்தம் நிறைந்த சிறைச்சாலைகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

வன்னியில் இறுதி வரை இருந்து வாழ்வைத் தொலைத்து; செத்துப் பிழைத்த எவருமே, இன்னொரு போரை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால், இனியும் ஒரு போர் வேண்டும் என ஒரு தொகுதிப் புலம் பெயர் மக்கள் விரும்புகிறார்களே! அதன் பின்னணி என்ன?  சமீபத்தில் எங்கள் வலைகளுக்கு வந்த ஒரு புலம் பெயர் நபர், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஒருவர்,
‘வன்னியில் நடந்த விளைவுகளைச் சொன்னால், தமிழ் நாட்டில் தமிழன் தீக்குளிப்பானா? என்று கேட்டிருகிறார். இவரின் மன நிலையில், தாங்கள் மட்டும் வாழ வேண்டும், ஏனையவர் சாக வேண்டும் எனும் எண்ணம் தானே இருக்கிறது.

Thursday, April 14, 2011

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க