Showing posts with label ஊர்க் காற்று. Show all posts
Showing posts with label ஊர்க் காற்று. Show all posts

Sunday, July 17, 2011

அவர்கள் உன்னைக் கற்பழித்தார்களா- ஈழப் போரின் மறு வடிவம்!

’’மன்மதன் வந்து மனசிற்குள் நுழையும் வரையும்,
மனதினுள் உண்ர்ச்சிகள் உறங்கியே இருக்கும் 
உன் பொன் முகமது பதிலொன்றைத் தந்தால், 
என் தேகமும் உன் நினைப்பினில் 
தினம் தினம் சிலிர்க்கும்; 
எனத் தனக்குள் யோசித்தபடி நிவேதிகாவின் வருகைக்காக காத்திருந்தான் கானகன்.  

Tuesday, July 12, 2011

ஆபாச பட ஆசையால் அவமானப்பட்ட பதிவர்!

அபாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. முகம் சுளிக்கும் விடயங்கள் நிரம்பியுள்ள இப் பதிவினைப் பிடிக்காதோர் முன்னெச்சரிக்கையாகத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வோர் மனிதனது மனங்களுக்குள்ளும் வித்தியாசமான ஆசா பாசங்கள் வெவ்வேறு உருவில் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். சமூகத்தின் முன்னால் என்னை நல்லவன் என்று எடை போட்டுக் காட்டும் வகையில் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. பல பேர் தாம் நல்லவர்கள் என்று சொல்லித் திரை மறைவில் தில்லு முல்லு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில்; வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. ஹி.....ஹி.....

Sunday, June 5, 2011

கண்டறியப்பட முடியாத காம நோய்!

முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன், அது அவள் தான், அவளே தான்,
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா எனும் நினைப்பு!

Tuesday, May 31, 2011

மாமனாரை நம்பி! மாரடித்த சொங்கி!

அன்பிற்கினிய உறவுகளே!
ஆரத் தழுவும் தென்றல், அருகருகே சத்தமிட்டுப் பறக்கும் பறவைகள், ஓடை நிறைந்தோடும் நீர், ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் சுற்றம் என வளங் கொழித்த கிராமத்து வாழ்வும், ஒவ்வோர் ஊர்களுக்கேரிய தனித்துவமான வட்டார மொழிகளும், எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் வந்து உலகமானது புதுமையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இலகுவில் எம் இதயப் பரப்பை விட்டு நீங்கி விடாது என்பதில் ஐயமில்லை.

Thursday, May 26, 2011

அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை!

உலகின் பழமையான மொழிகளுக்குள்ளே தமிழ் மொழியும் ஒன்றாக இருப்பது அனைவரும் அறிந்த விடயம். எம் தாய் மொழியில் எழுதுகின்ற அளவிற்கு,பேசுகின்ற அளவிற்கு அதேயளவு புலமைச் செழிப்போடு பிற மொழிகளில் எழுத முடியாது என்பது யதார்த்தம். இதற்கான காரணம் தமிழ் எமக்குத் தாய் மொழியாக இருப்பதாகும்.  இத் தமிழானது பேச்சு வழக்கு, உச்சரிப்பு அடிப்படையில் பல்வேறு பிரதேசங்களுக்கேற்றாற் போல வெவ்வேறு உச்சரிப்பு அல்லது ஒலிக் குறிப்புக்களைப் பெற்றுக் கொள்ளும்.

Wednesday, May 25, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

அன்பிற்கினிய உறவுகளே! இந்தத் தொடரின் நான்காவது பாகத்தினூடாக உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நாள் தோறும் நீங்கள் வழங்கி வரும் பேராதரவு தான் ஈழத்து மண் வாசனை கலந்த இத் தொடரினை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குத் தூண்டு கோலாக இருக்கிறது! அந்த வகையில் மீண்டும், மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 4
இத் தொடரின் கடந்த பதிவுகளைப் படிக்க..........



மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக......


Wednesday, May 18, 2011

கவிழ்ந்தது க(கொ)லைஞர் அரசு!

ஆலமரத்தடி அரட்டை


இன்றும் வழமை போல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!

’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’

குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?

Sunday, May 15, 2011

கல்லூரிப் பொண்ணுக்கு ஹா(கா)ர்ட் கொடுக்கலாமா?

வணக்கம் அன்பு உறவுகளே!
பள்ளிக் கால நினைவுகள் எப்போதுமே இனிமையானவை. அதுவும் பொடியங்களும், பொட்டையளும் சேர்ந்து படிக்கிற பள்ளிக் கூடத்தில் படித்த நண்பர்களின் நினைவுகள் அற்புதமானவையாக இருக்கும். ஆண்கள் பாடசாலையில் படித்த மாணவர்களின் நினைவுகளோ- அந்தோ பரிதாபம். காரணம் அவை மாலையில் இடம் பெறும் தனியார் ரியூசன் கொட்டகைகளில் இருந்து பெறப்பட்டவையாகத் தான் இருக்கும். ஆனாலும் கொட்டில் கால நினைவுகளில் தான் அதிக சுகமும், சுவாரசியமும் இருக்குமாம்!


Saturday, May 14, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 3

இத் தொடரின் முதற் பாகத்தைப் படிக்க

இத் தொடரின் இரண்டாவது பாகத்தைப் படிக்க.

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக.....
எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார்.......................................................



அர்த்தங்கள் பல கற்பிக்கும் அந்த மாதிரி வார்த்தைகள்!

உறவுகள் அனைவரையும் மற்றுமோர் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!

Saturday, May 7, 2011

சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி!

ஒவ்வோர் ஊருக்கும், தனித் தனியான வட்டார மொழி வழக்கிருக்கும். அம் மொழி வழக்குகள் அவ் ஊர் மக்களின் அன்றாடச் செயற்பாடுகளோடு ஒன்றிப் போயிருக்கும். இதனடிப்படையில் நம்ம ஊர் பொண்ணுங்களை, நாம எல்லோரும் எப்படிக் கலாய்த்தோம், சைட் அடித்தோம் என்று, இப் பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

நம்ம ஊர் பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும், மனசுக்குள் ஒரு பையன் மீது விருப்பம் இருந்தாலும் இலகுவில் ஓக்கே சொல்லிட மாட்டாங்க. பையனை அலை...அலையென்று தங்கள் பின்னால் அலைய வைத்து, தாங்கள் ஏதோ- ஒரு பெரிய சினிமா ஹீரோயின் மாதிரிப் பிலிம் காட்டித் தான் நம்ம பொடியங்களோடை மனசைப் புரிஞ்சு கொண்டு, இறுதியில் ஓக்கே சொல்லுவது போல பதில் சொல்லுவார்கள்.

Thursday, May 5, 2011

மணமகள் தேவை- முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!

வணக்கம் உறவுகளே, இன்றைய கால கட்டத்தில், புறோக்கர்மாரின் பிழைப்பில் நிறையப் பேர் மண் அளிப் போடுறாங்களாம். இதை நான் சொல்லவில்லை, நம்ம ஊர் விசுவலிங்க புறோக்கர் தான் சொல்லுறார்.  இன்டநெட், செல்போன், ஐபோன் என்று அடுக்கடுக்காக நவீன தொழில் நுட்ப சாதனங்கள் வந்த காரணத்தினால், வருமானம் தங்களுக்கு வரவில்லை என்று, ரேசன் கடை நிவாரணத்தில் பிழைப்பை ஓட்டும் பணக்கார வீட்டார் மாதிரி, நம்ம ஊர் புரோக்கர்களும், பஞ்சம் கொட்டத் தொடங்கிட்டாங்கள். யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?

Tuesday, May 3, 2011

வாங்கய்யா, வக்கிள் எடுப்போம்!

வணக்கம் உறவுகளே, இன்று எல்லோரும் சைக்கிள் ஓடுவோமா?
 இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)

சைக்கிள்களில் நம்ம ஊரில் பேமஸ் றல்லி (Ralli), லுமாலா (Lumala), இந்த இரண்டும் தான், இதற்கு அடுத்த படியாக ஹீரோ(Hero) சைக்கிள் இருந்திச்சு. றல்லி சைக்கிளை வயசான ஆளுங்க தான் அதிகமாக விரும்பி ஓடுவாங்க,(90'S_)
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.


Monday, April 25, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 2

முதற் பாகம்...மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................எனும் வகையில் நிறை வடைந்திருந்தது. தவற விட்டவர்கள், இங்கே கிளிக் பண்ணிப் படிக்கலாம். 

மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.

Friday, April 22, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

மீண்டும் அதே கணங்கள், அதே வலி சுமந்த நினைவுகள், உணவின்றி உயிர் மட்டும் ஊசலாடிய ரணங்கள் நிறைந்த மரத்தடி வாழ்க்கை இனிமேல் வரவே வரக் கூடாது எனும் எண்ணம் இப்போது எல்லார் மனங்களிலும் உட் புகுந்து விட்டது. ஆனாலும் என் ஞாபகச் சிதறல்களில் வெடி வைத்து, ஆங்காங்கே காயங்களை உண்டாக்கிய சீழ் கலந்த பருக்களை இலகுவில் அழித்து விட முடியாது எனும் எண்ணத்தோடு; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.

Thursday, April 21, 2011

பெண்களுக்கான சூடான மேட்டர்கள்!

வணக்கம் உறவுகளே! இன்று முதல் வலைப் பதிவில் ஒரு வித்தியாசமான முயற்சியினைக் கொண்டு வரலாம் எனும் நோக்கத்தோடு களம் இறங்குகிறேன். நேற்று இரவு தான் ’டன்சல் வோஷிங்கன்’(Danzel washington)  என் கனவில் வந்தார். ’’அடப் பாவிப் பொடியா; உன் பதிவுகளுக்கெல்லாம் ஏடா கூடாமாகத் தலைப்பு வைச்சு மகளிர் அணியினரின் சாபத்திற்கு ஆளாகி விட்டாய். ’’அவங்க எல்லோரும் உன் பக்கம் வாறதைக் குறைச்சிட்டாங்க என்று; ஒரு பெரிய Unstoppable குண்டை என் தலை மீது போட்டு விட்டுப் போய் விட்டார்.

Wednesday, April 20, 2011

குழந்தை தாய்ப் பாலில் அடங்குமா அல்லது தகரப் பாலில் அடங்குமா?

கலவன் பள்ளிக் கூடமும், காதல் செய்யும் ஆசிரியர்களும்- பாகம் 02

டீச்சர் டிங்குசாவும் மாணவர்களும்!

வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. இன்றைக்கு நாங்கள் கூட்டல் கழித்தல் பற்றிப் படிப்போம் சரியா என்று கேட்டு விட்டு, பிள்ளைகளே
5+3=8(வலக் கையிலை ஐந்து விரலையும், இடக் கையிலை மூன்று விரலையும் எடுத்துக் கூட்டிப் பாருங்கோ.. விடை சரியாக வரும்..)

Tuesday, April 19, 2011

பொய் கலந்த புன்னகைகள்!

’’டோய் மச்சான் சுதன், இன்றைக்கு எப்படியும் ரியூசன் முடிய அவளிட்டை முடிவைக் கேட்டிட வேணும், மறக்காமல் என்னோடை வந்திடு சரியோ எனச் சொல்லியபடி வகுப்பறையில் அமர்ந்திருந்து மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருந்தான் அருண்.

ரீயூசன் முடியும் நேரமும் வந்தது, பெண்கள் எல்லோரும் வகுப்பறையினை விட்டுக் கிளம்பிய பின்னர் தான் ஆண்கள் வெளியே போக முடியும் எனும் எங்களூர் ரியூசன் வழக்கப்படி, தன் பொறுமையினை, இந்தப் பாழாய்ப் போன ரியூசன் மாஸ்டர் செக் பண்ணுகிறார் என நொந்து கொண்டான் அருண்.

Thursday, April 14, 2011

கலவன் பள்ளிக் கூடமும், காதல் செய்யும் ஆசிரியர்களும்!

ஆசிரியர்களை, மாதா, பிதா, குரு தெய்வம் எனும் அடிப்படையில் முதன்மைப் படுத்துவார்கள். ஆனாலும் புனிதமான இந்த ஆசிரியர் தொழில் அலுத்து விட்டால், அரட்டை அடித்தே பாட நேரத்தை ஓட்டும் ஆசிரியர்களும் நம் ஊர்களில் இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில் இலகுவான ஒரு தொழிலல்ல. தாங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் பாடம் தொடர்பாக ஏற்கனவே முன் ஆயத்தம் செய்து கொண்டு(Prepare) பாடசாலைக்குச் சென்றால் தான் மாணவர்கள் கேட்கும் கேள்விகளிற்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்கள் ஏதாவது சந்தேகங்களைக் கேட்டால், சில நேரம் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி விட்டு, பின்னர் மாணவனிடமே சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டு விட்டு, மாணவனின் வாயை அடக்கிய பின்னர் பாடத்தைத் தொடருவார்கள்.


Tuesday, April 12, 2011

தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி!

தமிழகத் தேர்தலும், தமிழர்களின் பழக்க தோசங்களும்- 

ஆலமரத்தடி அரட்டை!

’’நேரம் ஆறு மணியாகப் போகிறது, எங்கே நம்மடை அரட்டைக் குறூப் மெம்பர்களை இன்னமும் காணோமே, எனத் தனக்குள் யோசித்தபடி, பாக்கெட்டினுள் இருந்த பக்கோடாவை மெல்லத் தொடங்கினார் மணியண்ணை. 


முதலில் இளையபிள்ளை ஆச்சி, 'நாதஸ்வரம் பிப்பீபி......பிப்பீபி..........
மேளச் சத்தம் டும்டும்.....டும்டும்........எனப் பாடியவாறு, ஆல மரத்தடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறா, ஆல மரத்தடியில் காத்திருந்த மணியத்தாரைக் கண்டதும், பாட்டை நைசாக லோ(Law) பிச்சிலில் குறைத்து முணு முணுத்துக் கொண்டு 
’’என்ன மணியண்ணை, இண்டைக்கு கொஞ்சம் ஏழியா(Early) வந்திட்டீங்க..... ஆல மரத்தடிக்கு, ஏதும் ஸ்பெசல் இருக்கோ? எனக் கேட்கத் தொடங்கிறா......


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க