Showing posts with label பாடசாலை. Show all posts
Showing posts with label பாடசாலை. Show all posts

Wednesday, February 1, 2012

என்னை கெடுத்த குட்டிப் பிசாசுகள் - சூடான & சுவையான தொகுப்பு

பாகம் 03:
ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க. அப்புறம் நான் அவங்களைக் காணவே இல்லைங்க. இறுதியாக யாரோ ஒரு நண்பன் சொன்னான். அவங்க இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பக்கமா இருக்கிற கண்டிக்குப் போயிட்டாங்க அப்படீன்னு. என் பதின்ம வயது வரை நான் மீண்டும் காண மாட்டேனா என ஏங்கிய பொண்ணு இந்த ஷிரோமி தான். ஷிரோமியின் பிரிவினால் ரொம்பவுமே வாடிப் போயிட்டேனுங்க. அந்தச் சின்னவயசில் சேலை கட்டும் பொண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடலைப் படிக்கும் போது மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பினை எனக்கு கொடுத்தவங்க இந்தச் ஷிரோமி.

Sunday, May 15, 2011

கல்லூரிப் பொண்ணுக்கு ஹா(கா)ர்ட் கொடுக்கலாமா?

வணக்கம் அன்பு உறவுகளே!
பள்ளிக் கால நினைவுகள் எப்போதுமே இனிமையானவை. அதுவும் பொடியங்களும், பொட்டையளும் சேர்ந்து படிக்கிற பள்ளிக் கூடத்தில் படித்த நண்பர்களின் நினைவுகள் அற்புதமானவையாக இருக்கும். ஆண்கள் பாடசாலையில் படித்த மாணவர்களின் நினைவுகளோ- அந்தோ பரிதாபம். காரணம் அவை மாலையில் இடம் பெறும் தனியார் ரியூசன் கொட்டகைகளில் இருந்து பெறப்பட்டவையாகத் தான் இருக்கும். ஆனாலும் கொட்டில் கால நினைவுகளில் தான் அதிக சுகமும், சுவாரசியமும் இருக்குமாம்!


Tuesday, March 22, 2011

நினைவில் தத்தளிக்கும் பருவங்கள்! (பாகம் 01)

நெஞ்சை விட்டகலாத நினைவுகள்!

முற் குறிப்பு: எல்லோருடைய வாழ்க்கையிலும் பால்ய காலம், பாடசாலைக் காலம், பல்கலைக் கழகக் காலம் என்பன மறக்க முடியாத, நினைவேடுகளிலிருந்து அழிக்க முடியாத காலப் பகுதிகளாகும். இதனை விட நண்பர்களோடு கூடிக் கூத்தடித்துக் கும்மாளமடித்து மகிழ்ந்த காலங்களும் மறக்க முடியாத காலப் பகுதிகளாகும். அக் காலப் பகுதிகளில் இடம் பெற்ற சம்பவங்களை மீண்டும் மனக் கண் முன்னே கொண்டு வந்து உங்களோடும் உங்கள் உணர்வுகளோடும் கலப்புறச் செய்யும் முயற்சியாகவே இந்தப் பதிவினைத் தொடங்குகிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க