Showing posts with label அவஸ்தை. Show all posts
Showing posts with label அவஸ்தை. Show all posts

Thursday, April 4, 2013

ஐயோ நான் பட்ட அவஸ்தை, யாருக்கும் வேண்டாம்! உண்மைச் சம்பவம்!


வணக்கம் உறவுகளே, இது ரொம்பவும் சுவாரசியமான மேட்டர், அதுவும் பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த மேட்டராக இருந்தாலும், இப்போதும் சூடாகத் தான் இருக்கும், பட்டையைக் கிளப்பும் எனும் நம்பிக்கையில் வெட்கத்தை விட்டுப் பல உண்மைகளை வெளியே சொல்லப் போறேன்.
மத்தவனோடை துன்பம் என்றால், எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!


Wednesday, August 1, 2012

கண்ணடித்த கல்லூரிப் பெண்களும், கண்ணுள் நிற்கும் நினைவுகளும்!

மறுபடியும் முதல்ல இருந்தா?
வணக்கம் உறவுகளே,
நேற்றைக்கு நைட் எழுதிய பதிவில, நைட்டில ஒரு தொடர் எழுதப் போறதா சொன்னேன் இல்லையா? அந்த தொடர் வரிசைல ஏலவே எழுத ஆரம்பிச்சிட்டு எழுதி முடிக்காம இடை வழில நிற்கிற என்னை கெடுத்த பெண்கள் தொடரை மறுபடியும் ஆரம்பிக்கலாம் எனும் நோக்கில் இந்த தொடரை இப்பொழுது உங்கள்  முன் சமர்பிக்கின்றேன்!

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.

Thursday, May 24, 2012

அடடே! நம்புங்கப்பா! நானும் ஓர் ப்ளாக்கர் தான்!

மகா ஜனங்கள் அனைவருக்கும் அடியேனின் மெகா வணக்கமுங்க,
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? குளிச்சீங்களா? சாப்பிட்டீங்காளா என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். ஏன்னா நேரந் தவறாம சாப்பிடுவது தமிழனோடு ஒட்டிப் பொறந்த பழக்கம், ஆனால் குளிப்பது என்பது அதை நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்கனுமுங்க. ரொம்ப நாளா நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்க ஆசை தானுங்க. ஆனால் ப்ளாக் எழுத டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படியும் இருக்கிற நேரத்தில கம்புகுட்டர் முன்னாடி உட்கார்ந்து ப்ளாக் எழுத ஆரம்பித்தால் எழுத எதுவுமே தோணலைங்க. அப்புறம் என்னத்த நான் எழுதி கிளிப்பதுங்க. 

Monday, March 12, 2012

அவளை(லை) நினைத்து உரலை இடிப்பது இப்படித் தானோ?

மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்? 
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?

Wednesday, February 29, 2012

கல்லூரி நினைவுகளும் கண் முன்னே நிற்கும் கவிதைகளும்

என் சிந்தனையை சிறகடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்!
அவள் கையிலிருந்து லெட்டரும், தின் பண்டமும், என் கைக்கு தாவியது. கொஞ்சம் வெட்கப்பட்டு, லெட்டரை என் கையினுள் திணித்து விட்டு, ஓடி விட்டாள். நான் கொஞ்ச நேரம் என்னை மறந்தவனாய் அக் காலத்தில் பேமஸான "உயிரே...உயிரே இது தெய்வீக சம்பந்தமோ" பாடலை மீட்டியவாறு கற்பனையில் மூழ்க ஆரம்பித்தேன். அப்போது அருகே வந்த நண்பன் கனியன், என்னைச் சுய நினைவிற்கு கொண்டு வந்தான். அந் நேரம் தான் கையில் ஆர்த்திகா கொடுத்த லெட்டர் இருக்கிறதே என்று உணர்ந்து லெட்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.

Tuesday, February 14, 2012

என் சிந்தனையை சிதறடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்

இவளுக்கு பொறந்த நாள் இன்னைக்கு இல்லையே என நெனைச்சேன். ஆனால் இவள் ஏன் இன்னைக்கு சாக்கிலேட் கொடுக்கிறாள் என ஒன்னும் தெரியாத பாப்பாவாய் யோசித்தேன். அதற்கான விடை ஒரு சில மாதங்களில் கிடைத்தது. ஆர்த்திகா எட்டாம் கிளாஸ் முடிய முன்பதாக மீண்டும் பிறந்த நாளிற்கு சாக்கிலேட்டுடன் வந்தாள். மொதல் பொறந்த நாளுக்கு சாக்கிலேட் கொடுக்கும் போது கிளாஸ் எடுத்த அதே வாத்யார் தான் இப்போதும் கிளாஸ் எடுத்திட்டிருந்தாரு. அவர் கேட்டார்! "உனக்கு மட்டும் எப்படி ஒரு வருடத்தில் ரெண்டு பொறந்த நாள் வரும்?” அவள் தலை குனிந்து வெட்கப்பட்டு ஓர் பதில் சொன்னாள்! நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும்.


Wednesday, February 8, 2012

என்னை கெடுத்த சிட்டுக்கள் - சூடான & சுவையான சுய சொறிதல்

எல்லோருக்கும் வணக்கமுங்க; 
பள்ளி செல்லும் மாணவர்களை ஏற்றி, இறக்கும் சேவையில் ஆண்களுக்குத் தனியான பேருந்தும், பெண்களுக்குத் தனியான பேருந்தும் இருப்பதால், என்னால் ஆறாங் கிளாஸ் ஆரம்பத்தில் ஆர்த்திகாவை, அபிநயாவை பார்க்க முடியலை. கண்டிப்பாக இவங்க ரெண்டு பேரில் ஒருத்தியை சந்தித்தால் தான் சைந்தவியைப் பத்தி அறிய முடியும் என்ற ஆவலில் காத்திருந்தேன். ஒரு நாள் பெண்களை ஏற்றி இறக்கும் பஸ் பஞ்சராகிட்டுதுங்க. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது, என்னைக் கெடுத்த பெண்கள் தொடரின் ஐந்தாவது பாகமாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும். 

Thursday, February 2, 2012

என்னை கெடுத்த பெண்கள் - சூடான & சுவையான தொகுப்பு

பள்ளிக்கூடம் 7.45 மணிக்கு ஆரம்பிக்குது என்றால் நான் காலை 7.20 மணிக்கே பள்ளியில் ஆஜார் ஆகிடுவேன். எதுக்கென்று கேட்கிறீங்களா? நம்ம வகுப்புத் தோழிங்க, தோழர்கள் கூட விளையாடி மகிழனும் என்ற ஆசையால் தான். இப்படியாக ஒரு நாள் ஓடி விளையாடும் போது, என்னோட காற்சட்டையின் பட்டன் அறுந்திட்டுதுங்க. காற்சட்டையிலிருந்து கையை எடுத்தா கழுசான் கீழே நழுவிடும். அப்புறமா என்ன நடந்திருக்கும் என்பதனை கீழே உள்ள பந்தியில் சொல்லியிருக்கேனுங்க. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னைக் கெடுத்த பெண்கள் தொடரின் நான்காவது பாகமாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள். 

Wednesday, February 1, 2012

என்னை கெடுத்த குட்டிப் பிசாசுகள் - சூடான & சுவையான தொகுப்பு

பாகம் 03:
ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க. அப்புறம் நான் அவங்களைக் காணவே இல்லைங்க. இறுதியாக யாரோ ஒரு நண்பன் சொன்னான். அவங்க இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பக்கமா இருக்கிற கண்டிக்குப் போயிட்டாங்க அப்படீன்னு. என் பதின்ம வயது வரை நான் மீண்டும் காண மாட்டேனா என ஏங்கிய பொண்ணு இந்த ஷிரோமி தான். ஷிரோமியின் பிரிவினால் ரொம்பவுமே வாடிப் போயிட்டேனுங்க. அந்தச் சின்னவயசில் சேலை கட்டும் பொண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடலைப் படிக்கும் போது மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பினை எனக்கு கொடுத்தவங்க இந்தச் ஷிரோமி.

Friday, January 27, 2012

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு

மச்சாள்காரிங்க கூட ஜாலியாக பால்ய வயதினைக் கழிச்சுக் கொண்டிருந்த எனக்கு இடியாக அமைந்தது என் அப்பாவின் வேலை மாற்றம். இதன் காரணமாக முதலாம் ஆண்டு கல்வியினை நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்று தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் மீண்டும் வித்யா & நித்யா கூட விளையாட மாட்டேனா என்று ஏங்கிக் கொண்டிருந்தேனுங்க. அப்போது தான் எனக்குப் பக்கத்தில் ஒரு பூக் கட்டுக் கட்டிய ஆளு வந்து அமர்ந்திருந்தா. என் ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவங்க என் கூடவே வருவா என்று நான் நினைச்சிட்டிருந்தேன். ஆனால் அவங்க மூனாம் கிளாஸ் முடிய முன்னாடியே எஸ் ஆகிட்டாங்க. 
இனிப் பாகம் ஒன்றின் தொடர்ச்சியாக......

Tuesday, January 24, 2012

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.

Tuesday, November 22, 2011

விதானையாரின் பெட்டையிடம் சிக்கிய விடலைப் பருவ நினைவுகள்!

எதிர் வாங்கில் வந்திருப்பாள்
என்னை விட உயர்ந்திருப்பாள்
புதிர் போட்டு புன்னகைப்பாள்
பூங் குழலால் உரசிடுவாள்
கதிர் பட்டு(க்) கண்ணுடையாள்
காதல் மொழி பேசிடுவாள்
புதிர் நீக்கி என்னிடத்தே
பூங்கோதை நீ வருவதெப்போ?

Wednesday, September 14, 2011

ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!

மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்? 
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?


Monday, March 14, 2011

எனக்கு அது போக மாட்டேங்குது!

வணக்கம், வந்தனம், நமஸ்தே, ஆயுபோவான், அஸ்லாமு அலைக்கும், எல்லோரும் எப்பிடி இருக்கிறீங்கள்?  இன்றைக்கு ஒரு சீரியஸ்ஸான மேட்டரோடை உங்களை நாடி வருகிறேன். சில வேளை உங்களுக்கு இந்தப் பிரச்சினை சிரிப்பை வரவழைக்கலாம். ஆனாலும் இப் பிரச்சினையால் நான் தினம் தினம் படும் வேதனை இருக்கிறதே, அவலம் இருக்கிறதே அது வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க