Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts

Thursday, April 26, 2012

அல்லாவின் பெயரால் பொல்லாங்கு செய்யலாமா?

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும், இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் க்ரைம் 419 பற்றி ஓர் அலசல்!
உங்களில் சிலருக்கு இவ் வகையான மின்னஞ்சல்கள் கிடைத்திருக்கும். சிலர் இந்த மின்னஞ்சல்களை கண்டுக்காது விட்டிருப்பீங்க. ஆனால் சிலரோ குறுகிய வழியில் கோடீஸ்வரன் ஆகும் நோக்கத்தில் இந்த மின்னஞ்சலுக்கு பணம் கட்டி ஏமாந்திருப்பீங்க. உலக நாடுகளின் பல அரசியல் தூதுவர்கள் இம் மாதிரியான மின்னஞ்சலுக்கு ஏமாந்திருக்கும் சூழலில் சாதாரண மக்கள் பத்தி சொல்லவா வேண்டும்? இந்த க்ரைம் இன்று சர்வதேச போலீஸின் கவனத்தினை ஈர்த்திருப்பதோடு, இந்த கிரிமினல் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக பிடித்து கொடுப்போருக்கு பல இலட்சம் ரூபாக்கள் சன்மானம் வழங்கப்படும் என இன்ரபோல் அறிவித்திருக்கிறது.

Thursday, January 5, 2012

பெண்குறி மையப் புனைவைச் செதுக்கும் சித்திரங்கள்!

திமிர் கொண்டபடி 
துருத்திக் கொண்டிருக்கும் தனங்களும்
நத்தை போல நீண்டிருக்கும்
பெண் குறி பற்றிய வர்ணிப்புக்களும்
இப்போது ஆணாதிக்கத்திற்கு எதிரான
வீரியம் மிக்க எழுத்துக்களாக
தமிழ் உலகில் பரிணமித்துள்ளது!

Tuesday, December 27, 2011

இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா?

ஒரு பகிரங்க விவாத மேடை!
அன்பிற்கினிய உறவுகளே, பூமியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய மதங்களையும்,தாம் விரும்பிய மொழியினையும் பின்பற்றுவதற்கான பூரண உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுய நிர்ணய உரிமை பற்றிய கோட்பாடு விளக்கம் கூறுகின்றது.மனித மனங்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவனது விருப்புக்களும், வெறுப்புக்களும் அடிப்படையில் வேறுபட்டுக் கொள்ளும். உலகில் இன்று தாழ்த்தப்பட்ட இனமாக இஸ்லாம் சொந்தங்கள் தம்மைத் தாமே கருதுகின்றார்களா என்று ஓர் வினாவினை முன் வைக்கையில் அதற்கான விடை உங்கள் மனதிலிருந்து எப்படி வந்து கொள்ளும் என்பதனை அனுபவ உதராணக் குறிப்புக்களினூடாகப் பார்ப்போமா?

Saturday, April 2, 2011

எழுத்தாளர், கவிஞர் குட்டி ரேவதியிடம் சில கேள்விகள்!

எழுத்தாளர், கவிஞர்- குட்டி ரேவதி, மற்றும் கூடு தமிழ் ஸ்டூடியோ இணையத்தள நிர்வாகிகளிடம் சில கேள்விகள்!

உறவுகளே, அண்மையில் இணையத்தில் வலம், வந்து கொண்டிருந்த போது எதேச்சையாக குட்டி ரேவதி அவர்களால் கூடு. தமிழ்ஸ்டூடியோ எனும் இணையத்தளத்தில் ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள் எனும் தொடரினைப் படிக்க நேர்ந்தது. இத் தொடரின் ஏழாவது பாகத்திலே ஈழத்துப் பெண் கவிஞராகிய ஆழியாளின் கவிதைகளையும், அவர் ஈழத்துக் கவிதை மரபின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்களையும் குட்டி ரேவதி விளக்கியிருந்தார்.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க