எச்சரிக்கை : இது ஓர் பொதுவான பதிவு! இங்கே எந்த ஓர் மதத்தையோ, மதவாதிகளையோ தனியாக பெயர் சுட்டி ஓர் வசனம் கூட எழுதப்படவில்லை!
நீண்ட இடை வேளைக்குப் பின்னர் பதிவுலகப் பக்கம் வந்து பார்த்தால் பல மாற்றங்கள். பதிவர் சந்திப்பு தொடர்பான சந்தோசமான விடயங்கள் என பல மாற்றங்களை அன்றாடம் ஒவ்வோர் பதிவுகளின் ஊடாகவும் காணக் கூடியதாக இருந்தது. அட, பதிவுலகில் மதம் பரப்பும் நடவடிக்கைகளில் இருந்தவங்க எல்லோரும் திருந்திட்டார்கள் என நிம்மதிப் பெரு மூச்சி விட்டேனுங்க. ஆனால் பாருங்க ஒரு கொடூரமான நிகழ்வு. இன்னமும் நாம் மாற மாட்டோம் என அடம் பிடித்து, வலிந்து திணித்து மதம் பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள் இந்த கொடியவர்கள் என்பதை நினைக்கையில் சிரிப்பாக இருக்கிறது!
உலகம் முன்னேறிக் கொண்டு போகிறது. நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நாம் இன்னமும் இப்படியே தான் இருப்போம் என இந்த மதவாதிகள் நினைப்பது அவர்கள் சுதந்திரம். ஆனால் தம்முடைய மதம் பரப்பும் வரம்பினுள் நின்றால் பரவாயில்லை! சும்மா என் பாட்டிற்கு சிவனேன்னு பதிவு எழுதிட்டு இருக்கும் என்னை வம்பிழுத்து தம் மதம் பரப்பும் பதிவுகளினுள் வலிந்து திணிக்கிறார்கள். எப்படித் தெரியுமா? பதிவுலகில் நிரூபன் போன்ற கில்மா பதிவர்களின் பதிவுகளைப் படிப்பதை விட, தமது மதவாதப் பதிவுகளைப் படித்து மனதை சாந்தப்படுத்திக் கொள்ளலாமாம்.
சாமிகளா! ஆளை விடுங்கடா! இந்த மாதிரி கோமாளி விளையாட்டிற்கெல்லாம் நாம் வரலைங்க. நானுண்டு என் பாடு என்று எழுதிட்டு இருக்கேன்! நீங்க உங்க வழியில் மதம் பரப்புங்க. அது உங்க பிரச்சினை! என்னையெல்லாம் உதாரணப்படுத்தி, உங்கள் மத விற்பனையை மேம்படுத்த முயற்சிக்காதீங்க!
|
3 Comments:
இன்றுதான் உங்களுடைய அத்தனை பதிவுகளையும் படித்தேன்.
‘சரக்கு’ உள்ள பதிவர் நீங்கள்.
சில நேரங்களில் ஏனோ ‘சரக்கடித்த’ குடிமகன் போல ‘கசாமுசா’ன்னு எழுதுகிறீர்கள்.
காரணமும் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.....
‘ஹிட்ஸ்’ ஆசை!...[இல்லை, வெறியா?]
@ நண்பா, ஹிட்ஸ் வெறி எல்லாம் இல்லைங்க. சும்மா ஒரு பொழுது போக்கு தான்
நீங்களே நம்மளை விட எம்மாம் பெரிய விசயங்கள் எல்லாம் எழுதுறீங்க..
அவ்வ்வ்வ்வ்
500 இற்கும் மேற்பட்ட பதிவுகள் இங்கே இருக்கு. அவ்ளோ பதிவுகளையும் ஒரே நாளில் படித்து முடித்தீர்களா?
என்னா ஒரு வேகம் நண்பா!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பரே
மீண்டும் என்னை மணியடித்துக் கூப்பிடுகின்றனர் போலும், களத்தில் இறங்க வேண்டும் போல. மதம், சாதி, அரசியல், இனவெறி என ஒரு குரூப்பாத்தான் இயங்கி கிட்டு இருக்கிறாங்க, கொஞ்சம் பணி கொடுத்தாத் தான் திருந்துவாங்க போல.
Post a Comment