Thursday, August 29, 2013

ஆ(மூ)பாசப் பதிவர் நிரூபனை அடியோடு விரட்டுவோம்!!

வாருங்க வலையுலக மக்களே,  பதிவுலகில் யாரோ நிரூபன் என்று ஒரு பய புள்ளை இருக்காராம். அவருக்கு எதிராக தான் இந்த பதிவு அப்படீன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன்! அட என்ன மேல பார்க்கிறீங்க. ஆமாங்க நீங்கள் இங்கே வந்திருப்பது நிரூபனின் நாற்று தளம் தான்! ஆனால் ஒரு விசயம் என்னவென்றால், அடிக்கடி நிரூபன் தன் பேரை மாற்றிக்கிறார். ஆமாங்க நானே தான் நிரூபன் பேசுறேனுங்க! ஒரு பதிவு ஹிட் ஆகனும் என்றால், இப்படி ஏதாச்சும் ஒரு பதிவர் பேரை வைச்சு தீயை பத்த வைச்சாலே போதும். பதிவு பத்திக்கும்! இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

இப்ப விசயம் என்னவென்றால், நல்ல பதிவு ஒன்று எழுதினால் வெறும் நாற்பது பேர் தான் எட்டிப் பார்க்கிறாங்க. ஒண்ணுக்குமே உதவாத பதிவு என்று நாமளே வெறுப்போட ஒரு கில்மா தலைப்பில பதிவு எழுதினால் கூட்டம் பிச்சுக்குதுங்க. எழுபதாயிரம் பேஜ் வியூஸ் பெற்ற பதிவு கூட இந்த மாதிரியான வகையறாப் பதிவு என்றால் பார்த்துங்களேன்! 
என்ன பண்ண நம்ம மக்களோட ரசனை இப்படியாச்சே! இனிமே இந்த நிரூபன் பய புள்ள திரும்பும் இடமெல்லாம் ஆபாச பதிவு எழுதுறான் அப்படீன்னு யாருமே எழுத மாட்டீங்க. காரணம் இனிமே வரலாற்றுச் சிறப்பு மிகு பதிவுகளை எழுதலாம் என்று ப்ளான் பண்ணியிருகேனுங்க. இன்னோர் விசயம் ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் வித்தியாசமான பேர்ல பதிவு எழுதப் போறேன்! 
ஸோ..யாருமே கோவிச்சுக்காம நல்ல பிள்ளைங்களா இனிமே நல்ல பதிவுகளை தேடி வாங்க! 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails