Sunday, August 25, 2013

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஸே?

கோத்தபாய ராஜபக்ஸ: அண்ணா! உலகெல்லாம் வாழும் தமிழர்களோ உங்களை போர்க் குற்றவாளி என்று சொல்லி அசிங்கப்படுத்துறாங்க. ஆனா உங்க காலடிக்கு கீழே இருக்கும் தெமிழங்களோ நீங்க நல்லவன்னு சொல்லி பெருமைப்படுறாங்களே! ஏன் இவங்க மட்டும் இப்படி இருக்காங்க?
மகிந்த ராஜபக்ஸ: தம்பியே! அதுகள் நாய்கள்! நான் போடும் எலும்புத் துண்டிற்கு வாலாட்டுவது தானே அவர்களின் வழக்கம்! அவர்கள் குணத்தினை மாற்றவா முடியும்?


கருணா: ஐயே மகிந்த! நாம கொட்டியை அழிச்சது இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு!
மகிந்த: அந்த சந்தோசத்தின் லட்சணம் தான் நேத்து நைட்டே தெரியுமே? கனவுல புலி வந்திட்டென்று பயந்து, உங்கள தேடி வந்த சிங்கள நடிகையையும் பயமுறுத்தி, அநியாயமா ஒரு லுங்கியையும் நாறடிச்சிட்டீங்களே!
கோத்தபாய: தமிழர்களின் மாற்றுக் கருத்தாளர்கள் எனும் பட்டியலில் ஒரு கும்பல் சுத்திட்டு இருக்கே! இவர்களால் நமக்கு இனிமே ஏதாவது பிரயோசனம் என நினைக்கிறீங்களா அண்ணா?
மகிந்த: இவர்களால் நமக்கோ, இந்த நாட்டுக்கோ ஏன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களுக்கோ பயனேதுமில்ல. ஆனால் குட்டைய குழப்பிட்டு தமிழர்களை ஆட்டி வைக்க இவனுங்க நமக்கு தேவையல்லவா. ஆகவே இப்போதைக்கு விட்டு வைப்போம்!

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

கருணா: ஐயே மகிந்த! நாம உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறது. நீங்க நமக்கு நடிகைங்களை அனுப்பி வைக்கிறது.
மகிந்த: நாம நடிகைங்களை அனுப்பி வைக்கிறது இருக்கட்டும். ஆனா நைட்டுல நீங்க புலி வருதுன்னு பயந்து நடிகைக்கு -உங்க பயவாதத்தை காட்டாம இருந்தா சரிங்க!

கோத்தபாய:அண்டை நாட்டில் ஏதோ டெசோ மாநாடுன்னு வைக்கிறாங்களாமே! இதால நமக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருக்குமா அண்ணா?
மகிந்த: டெசோ மாநாட்டை வைக்கும் ஆளே பயனற்ற ஒரு பழசு! இதால நமக்கு என்னாகிடப் போகுது? வழமை போலவே நாம கை கொட்டிச் சிரிப்போம் வாருங்க! 

புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails