Wednesday, August 28, 2013

ஆடலரசி ஜெயலலிதா - பாடலரசன் கருணாநிதி - லிவ்விங் டாக்கீஸ்

ஆடலரசி ஜெயலலிதா! 

நடனத்தில் ஓர் காலத்தில் தாரகை
நம் எம்ஜி ஆர் கூட வந்திடுவார் மேனகை - இன்றோ
தமிழரை வைத்து அரசியல் நடனமாடுவதில்
அம்மா ஓர் அரசியல் ஆடலரசி
அவர் செய்கையால் நாமோ
செய்வதறியாத பாவ ஜீவன்களாய்!

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
அடிக்கடி நிகழ்ந்திடும்
அதிரடி மாற்றங்கள்
சட்ட சபையே சிரித்திடும்
சபாஷ் பலே காமெடிகள்
திட்டமிட்டாலும், திடீரென்று
நிகழும் அம்மாவின் அரசியல் மாற்றங்கள்
பட்ட கஷ்டங்களின் மேல்
மருந்து தடவி ஜெயா
தமிழர்க்கு தீர்வு கொடுப்பார் என்றால்
கெட்ட குடியே கெட்டுப் போ
என்றோர் சாபம் வேறு
என்ன சொல்ல
உலக வரை படத்தில்
சபிக்கப்பட்ட நாட்டின் ஜீவன்களாய்
ஈழத் தமிழர்கள்!
பாடலரசன் கருணாநிதி! 

வயசு போனதால் எம்
பாட்டனுக்கு கொஞ்சம்
ஞாபக மறதி - அவர் வாய்க்கு
அவல் கிடைத்தது போல
ஏதேதோ புலம்பிடுவார்
டில்லிக்கு தந்தி அடிப்பார் - வீட்டின் ஓரத்தில்
பல்லிக்கும் லைட் அடித்து பார்ப்பார் - சில்லறை
சல்லிக்கு மேல் சல்லி சேர்த்து
ஆசியாவின் சிறந்த ஓர் பணக்காரனாய் ஐயா
பாசத் தலைவா என்று பின் தொடரும்
மக்களுக்கு பரிவு காட்டாராம் மெய்யா?




0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails