Friday, August 23, 2013

ஊதிப் பருத்த ஊர்மிளா - ஒன் ஒடம்பு சைஸிற்கு இது தேவையா?

தூர இடப் பயணங்களிற்கு எல்லோரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வார்கள். நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கோடு ஒரு நாள் இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன். 

வழமையாகப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், என் நல்ல நேரம், யாருமே இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான் நீட்டி நிமிர்ந்து தூங்கத் தொடங்குகிறேன்.  பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக் கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து உட்காருகிறாள். 

என் அதிஷ்டம்...இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும் என்று எத்தனை நாள் ஏங்கி இருந்தேன் எனும் நினைப்போடு, தூக்கமும், மண்ணாங்கட்டியும்; என்று என் மனதிற்குள் நானே பேசியபடி, விழித்திருந்து, என் பிரயாணப் பையினுள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். 

புத்தகத்தைப் படிக்கிற மாதிரி நடிச்சுக் கொண்டு, சந்திலை சிந்து பாடிச் சீன் பார்க்கிறது தானே பசங்களோடை வேலை.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails