Monday, August 26, 2013

கலைஞரின் கலர் டீவியில் ஜெயாவின் கவர்ச்சிப் படம் - ரீமேக்

டெசோவென்றும், ஈழ விசுவாசமென்றும்
வயது போன வேளையில் ஐயா
என்னவென்னவோ உளறித் தான் பார்க்கிறார்
உஷா பேன் - கிரைண்டர் மிக்ஸி இதெல்லாம்
இலவசமாய் அள்ளி விட்டும் பார்த்தார்
ம்....ம்ம் யாருமே கண்டுக்கலை
அவருக்கு இனியும் வெற்றி கிடைக்கும் என
இப்போது வரை நம்பிடவும் யாரும் தயாரில்லை!

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.




ஐயாவை தந்திரமாய் விரட்டினாய்
ஏழை மக்களை ஏமாற்றி
இரட்டை இலை மூலம்
ஆசை வார்த்தை கூறி
ஆட்சிதனில் அமர்ந்தார் அம்மா
ஆண்டுகள் மூன்றாகிறது - தமிழகத்தில்
அபிவிருத்தியோ மந்த கதியில் போம்மா!

எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறோம் அம்மா
எங்கள் உணர்வு தனை கொஞ்சம் புரிந்து கொள்ளேனம்மா!

ஐயா கொடுத்தார் இலவச டீவி - இப்போ
அதிலே நமக்கெல்லாம் கண்களிற்கு விருந்தாக
அம்மா தருகிறார் அடிக்கடி அதிரடி ப்ளாஷ் நியூஸ் அப்டேற்ஸ்
சும்மா இருக்க சுதந்திரம் கிடைக்காது என்பதனை
உணர்ந்தும் அம்மா கொடுக்கும் இலவசத்தில்
மயங்கி கிடக்கின்றோம்
அடிக்கடி அதிரடிச் சேதி கேட்டு நாமும்
மெய் சிலிர்க்கின்றோம்!

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails