Friday, August 23, 2013

ஆபாச பட ஆசையால் அவமானப்பட்ட பதிவர் - உண்மைம் சம்பவம்

பாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. முகம் சுளிக்கும் விடயங்கள் நிரம்பியுள்ள இப் பதிவினைப் பிடிக்காதோர் முன்னெச்சரிக்கையாகத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வோர் மனிதனது மனங்களுக்குள்ளும் வித்தியாசமான ஆசா பாசங்கள் வெவ்வேறு உருவில் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். சமூகத்தின் முன்னால் என்னை நல்லவன் என்று எடை போட்டுக் காட்டும் வகையில் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. பல பேர் தாம் நல்லவர்கள் என்று சொல்லித் திரை மறைவில் தில்லு முல்லு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில்; வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. ஹி.....ஹி.....

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஹை ஸ்கூல்(உயர் தரம்) முடிக்கும் வரைக்கும் உள்ளூர் நண்பர்களோடு லூட்டி அடித்துக் கொண்டிருந்த நான் 2000ம் ஆண்டு பல்கலைக் கழக(கம்பஸ்) அனுமதி கிடைத்த பின்னர் வெளியூர் நண்பர்களோடு புதிய ஓர் இடத்தில்- புதிய சூழலில் என் கம்பஸ் வாழ்க்கையினை ஆரம்பித்தேன். குளு குளு காலநிலை நிலவும் பேராதனை எனும் பகுதியில் உள்ள, இலங்கையின் மூவின மாணவர்களும் கல்வி பயிலும் பெரதெனியா கம்பசில் நானும் ஒரு தமிழ் மாணவனாக இணைந்து கொண்டேன்.

இணைந்து கொஞ்ச காலத்தில் ராக்கிங்(பகிடி வதை) என்ற பெயரில் எல்லா வகையான பழக்க வழக்கங்களையும் சீனியர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுத்த எல்லாவகையான பழக்க வழக்கங்களிலும் கிளாஸ் அடித்து, நல்லவன் எனும் முகமூடி அணிந்து பெண்கள் முன்னால் நான் ஒரு அந்தக் கால விஜய் மாதிரி வலம் வரத் தொடங்கினேன்.( அது யாருஙக செருப்பைத் தூக்குறது. ச்....சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லுறேனுங்க. கோபம் வேணாம்)

ஒரு நாள் என்னுடன் நெருங்கிப் பழகும் வகுப்புத் தோழிகளில் ஒருத்தி- வவுனியாவைச் சேர்ந்தவள், திடீரெனக் கேட்டாள். ’’ஏன்டா நிரூ- உங்கட பொடியங்கட(பசங்களோடை) ஹாங்கிலை(Gang) ஒருத்தர் கிட்டயும் அந்தப் பட சீடி இல்லையாடா?
அடடா.....இதென்ன விளையாட்டு என்று யோசித்து, என்னைச் சுதாகரித்துக் கொண்ட நான்;
ஆமா அதென்ன அந்தப் படம்? 
’’போடா வெண்ணெய். அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது. சீன் படம். மற்றப் படம்.  இது கூடத் தெரியாதா லூசுப் பயலே.

1999ம் ஆண்டு வரை சீரான மின்சார வசதி, கணினி வசதியின்றி- ஒரு குக் கிராமம் போன்ற யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எனக்கு- என்னை ஒரு பெண் இப்படிக் கேட்டு விட்டாளே என்றதும் ஒரு மாதிரியாகி விட்டது.
’’டாய் நிரூ, முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாரேன்.  இல்லேன்னா உன்னோட சிநேகிதர்களிடம் கேட்டுப் பாரேன். கண்டிப்பா வைச்சிருப்பாங்களடா. உனக்குத் தெரியாமல் போட்டுப் பார்ப்பாங்கள் போல இருக்கு. கேட்டுப் பார் நிரு’’
என்று கூறி என் ஆவலையும் ஆசையினையும் தூண்டி விட்டாள்.

இரு வாரேன், என்று கூறி விட்டு. அவளிடமிருந்து நைசாக நழுவி, என் ரூமிற்கு ஓடிப் போனேன். அங்கேயிருந்த என் கூட்டாளிப் பசங்களிடமும் கேட்டேன். அவங்களும் தங்களிடம் சீன் படம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். வேறு வழி.  
ஒரு பொம்பிளைப் பிள்ளையே என்னிடம் சீன் படம் கேட்கும் போது, இது வரைக்கும்- நான் ஒரு அப்பிராணிப் பையன் மாதிரிச் சீன் படம் பார்க்காமல் இருக்கிறேனே என்ற கௌரவப் பிரச்சினை ஒரு பக்கம் என்னை வாட்ட, என் நண்பனின் உதவியுடன் களத்தில் இறங்கினேன்.

கட்டுக்கலை செல்வ விநாகயர் கோயிலுக்கு அண்மையில் இருந்த திரைப் படக் கொப்பிகளை வாடகைக்கு விடும் கடைக்குச் சென்றேன். 
முதல் அனுபவமும், இது நாள் வரை பார்த்திராத புது முகமாக கடைக்காரர் இருந்த காரணமும் என்னை அறியாமலே என்னுள் வெட்கத்தை வர வைத்தது.
கடைக்காரர் பார்ப்பதற்கு சிங்கள மொழி பேசுபவர் போல இருந்தார். மனதில் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு நான் பின்னே நின்று, என் நண்பனை அனுப்பி படக் கொப்பி பற்றிக் கேட்கச் சொல்லுவோம் என்றால்;
‘’வெருளிக்கு வாய்ச்ச வெங்காயம் ரேஞ்சிலை’’அவனோ, 
தான் போய்க் கேட்க மாட்டேன் - நிரூ நீ போய்க் கேளடா என்று சொல்லிட்டான்.
வேறு வழி ஏதுமின்றி, மெது மெதுவாக கடை வாசலுக்குப் போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தேன், வில்லங்கமான(விவகாரமான) ஆளுங்க யாராச்சும் உள்ளே நிற்கிறாங்களா என்று. என் அதிஷ்டம் கடையினுள் கடை முதலாளியைத் தவிர வேறு யாருமே இல்லை.
அடிச்சுது பார் யோகம் எனும் ரேஞ்சில், மெதுவாக கடையினை நோட்டம் விட்டேன். சீன் படக் கொப்பி எங்காவது தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தேன். இல்லவே இல்லை. 
அட, இவ்ளோ தூரம் வந்திட்டமில்லே, இனி எதுக்கு வெயிட் பண்ணனும் எனும் நோக்கில்,
அண்ணே அந்தப் படக் கொப்பி இருக்கா?
என்று கேட்டேன்.
அவனோ சிங்களத்தில் ‘மொக்கத்த ஹியன்னா(என்ன சொல்லுங்க என்று கேட்டான்?

ஆகா. அவனுக்குத் தமிழ் தெரியாதது ரொம்ப நல்லது என்ற நினைப்பில், எனக்குத் தெரிந்த இண்டர்நேஷனல் மொழியில்(அதாங்க ஆங்கிலம் என்று சொல்லுவாங்களே) சீன் பட சீடி இருக்கா என்று கேட்டேன்.
அவனுக்கு அது புரியவில்லைப் போல. நோ...நோ என்று தலையாட்டினான்.
அப்புறம் விடுவேனா. அடுத்ததாக கேட்டேன். Do you have XXX?(Triple X)   உங்களிடம் 3X படக் கொப்பி இருக்கா என்று கேட்டேன். அவனும் ஓம் என்று தலையசைத்தான். ஓக்கே அருமையான சந்தர்ப்பம். விடாதே நிரூ என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

எவ்வளவு காசு? என்ன மாதிரிப் படம் இருக்கு என்று கேட்டேன். 
‘’150.00 ரூபா அட்வான்ஸ் தர வேண்டும். அத்தோடு ஐடி கார்ட்(அடையாள அட்டை) டீட்டெயில்ஸ் உம் நீங்கள் தந்தால், லேட்டஸாக வந்த படம் தாரேன் என்று சொன்னான்.

ஓக்கே என்று தலையாட்டி, ஐடியை எடுத்துக் கொடுத்தேன். ஐடியை கையில் வாங்கி வைத்துக் கொண்டு முறைத்தான்.  நீ வன்னித் தமிழனா. உனக்கெதுக்கு ஆபாசப் படம் பார்க்கிற ஆசை.(அட நாதாரி, ஏன் வன்னித் தமிழனுக்கும் கண் இருக்குத் தானே.. பார்க்கிறதில் என்ன தப்பு) 
இந்தா இப்பவே போலீஸை கூப்பிட்டு, உன்னை ஒரு வழி பண்ணி, உன் கம்பஸிற்கும் சொல்லிடுறேன் என்று மிரட்டினான்.
போலீஸ் என்றதும், போகம்பர சிறைச்சாலை தான் நினைவுக்கு வந்தது. தமிழர்களைக் காரணம் இன்றிக் கைது செய்தாலே இது தான் சந்தர்ப்பம் எனும் நோக்கில் போட்டுத் தாக்குவாங்கள். இதிலை சீன் படம் பார்க்கிற ஆசையிலை போலீஸில் மாட்டினால் எங்கெல்லாம் அடிப்பாங்களோ என்ற பயம் நெஞ்சை வாட்டத் தொடங்கியது. எனக்குப் பின்னே நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் நண்பனையும் உதவிக்கு அழைத்தேன். 

என் நிலமையினை விளக்கினேன்.  போலீஸை எல்லாம் கூப்பிட்டு எங்களை அவமானப்படுத்த வேண்டாம். பேசித் தீர்த்துக் கொள்ளுவோம் என்று கெஞ்சத் தொடங்கினேன். எனக்கு கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கிச்சு. ’’பாவிப் பய, என் ஐடியை வாங்கி தன் கையிற்குள் வைத்துக் கொண்டெல்லே வீராப்பு வசனம் பேசுறான். ஐடியை தந்திட்டு ஏதும் டீல் பண்ணினான் என்றால், பக்கத்திலை கிடக்கும் கல்லையாவது அவன்ரை மொட்டை மண்டையிலை எறிஞ்சு போட்டு ஓடலாம் என்று யோசித்தேன். ’’அடடா, பெரும்பான்மை இனத்துக் கடைக்காரன் மேலை சிறுபான்மைத் தமிழன் கை வைச்சிட்டான் என்று ஒரு இனக் கலவரத்தையெல்லே பய புள்ளைக உண்டு பண்ணிடுவாங்க. இதெல்லாம் வேலைக்காகாது’’.
எல்லாம் என்னோட கெட்ட காலம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். 
டீலிங் ஆரம்பமாச்சு. ’’ஐயா சாமி! நீ என்னோடை அண்ணா மாதிரி! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். இனிமேல் உன்ரை கடைப் பக்கம் வர மாட்டேன். எனக்கு சீன் பட ஆசையும் இனிமேல் வராது. ஆளை விட்டிடு சாமி’’ என்றேன். 

அவனோ மசிவதாக இல்லை. நீண்ட நேர டீலிங்கிற்குப் பின்னர், பாக்கட்டில் இருப்பதை உருவுவதே ஒரே வழி என முடிவெடுத்தான். ’’எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் தா என்றான்””.  உதவிக்கு வேறு, கடையில் இருந்த போனில் போன் பண்ணி, இன்னொரு சிங்கள நண்பரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு டீலிங்கில் குறியாக இருந்தான். 
என் பாக்கற்றில் இருந்த ஐநூறு ரூபா, என் நண்பன் பர்சில் இருந்த எழுநூறு ரூபா என மொத்தமாக ஆயிரத்து இருநூறு ரூபாவைக் கொடுத்தோம். 

ஆள் இறங்கி வரக் காணோம். ஆயிரத்து இருநூறு ரூபாவை வாங்கினாப் பிறகும், ஐடி கார்ட்டை தார நோக்கம் இல்லை. என் கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் கண் வைச்சிட்டான் பாவி. 
அப்பா ஆசை ஆசையாக மூத்த பொடியன் கம்பசிற்குப் போறான் என்று வாங்கித் தந்த அறு நூறு ரூபா பெறுமதியான புத்தம் புது CASIO- கசியோ மணிக்கூட்டில் கையை வைச்சிட்டான். வேறு வழி. அதையும் கொடுத்து, போட்டிருந்த ஆடைகளை மட்டும் உருவாத குறையாக- வெட்கித் தலை குனிந்து கம்பஸ் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நானும் சீன் படக் கொப்பி வாடகைக்கு எடுக்கச் சென்ற என் நண்பனும் ஒரு டீலிங் மேற் கொண்டோம்.

’’மச்சான், நடந்ததை வெளியில் சொல்லிடாதை. என் மானம் போயிடும். 
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். மச்சி வெளியே சொல்லிப் போடாதே. நாளைக்கே பாங்கிற்குப்(Bank) போய் உன்னோடை எழு நூறு ரூபாவை எடுத்து தாரேன்’’ என்று சொல்லிச் சமாளித்தேன்.  இனிமேல் சீன் படம் பார்க்கும் ஆசையே மனதில் வராதபடி படக் கொப்பிக் கடைக்காரன் நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்ற நினைப்போடு மறு நாள் கம்பசிற்கு வந்தேன். 

மதிய வகுப்புக்கள் முடிந்த பின்னர், மீண்டும் என் வகுப்புத் தோழிகளைச் சந்திக்க நேர்ந்தது. டாய் நிரூ, எங்கேயடா படக் கொப்பி என்று கேட்டாள் அவள்....
நான் படக் கொப்பி வாங்கப் போய் அவமானப்பட்ட மேட்டரையா அவளிடம் சொல்ல முடியும். 
அடிப் பாவி....நீ இதே நினைப்பிலை தான் எப்பவும் இருக்கிறியா என, மனதிற்குள் நினைத்தபடி அவளை ஒரு பார்வை பார்த்தேன். என் பார்வையில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, உனக்கு வேணும்னா, நான் ஒரு படக் கொப்பி தரவா. போட்டுப் பாரேன் என்றாள். ஹி.....ஹி....
நம்மடை கம்பஸ் காலத்தில் பசங்களை விடப் பொண்ணுங்க தான் சீன் படம் பார்க்கிறதில் முன்னுதாரணமாக இருந்தாளுங்க. 
வர வரப் பொண்ணுங்களும் முன்னேறிக்கிட்டே போறாங்க இல்லே...

ச்சே.....சொந்தக் கதை சோகக் கதையாககிட்டுதே. 

இதன் அடுத்த பாகம்:  சீன் படம் பார்க்கையில் விடுதலைப் புலிகளிடம்(LTTE) மாட்டிய அப்பாவி ஆண் மகனின் அனுபவங்கள். உங்களுக்காக அடுத்த பதிவில்.......

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.


2 Comments:

Mahesh said...
Best Blogger Tips

nice anna. waiting for the next part

Unknown said...
Best Blogger Tips

ஒரு ஸீன் படத்துக்கு இவ்ளோ அக்கப்போறஎந்த கேட்ட இலவசமாவே கொடுத்து இருப்பேன்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails