ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!
பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க
சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க?
சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!
சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.
இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
மௌனகுரு:ஏம்மா தாமரைக்குட்டி!பன்னிக்குட்டி அறிஞ்சிருக்கேன். யானைக்குட்டி அறிஞ்சிருக்கேன். பூனைக்குட்டி அறிஞ்சிருக்கேன். சிங்கம் மற்றும் புலிக் குட்டி கூட அறிஞ்சிருக்கேன். அது ஏன் உன் பேரு மட்டும் கொஞ்சம் வித்தியாசமா தாமரைக் குட்டீன்னு இருக்கே.
தாமரைக்குட்டி:அது வந்துங்க, இப்பூடி பப்ளிக்கில கேட்டிருக்கிறீங்க. வெளியே சொல்ல வெட்கமா இருக்குங்க.
மௌனகுரு:ஏலேய் சும்மா பில்டப்பு குடுக்குறதை விட்டுப்புட்டு மருவாதையா சொல்லிடு.
தாமரைக்குட்டி: அது வந்துங்க; என்னோட ஆளை கண்டதும் தான் என் முகம் மலருமுங்க. அதான் என் லவ்வரை சூரியனா நினைச்சுப்புட்டு, அவர் குட்டியா நான் இருக்கிறதால இப்படி ஓர் பேரை வைச்சுப்புட்டேன்.
பதிவர் ஹிட்டழகன் காட்டானும்,கட்டழகன் கனக வேலும் பேசிக்கிறாங்க:
ஹிட்டழகன்: ஏம்பா கட்டழகா; புதுசா ப்ளாக் எழுத வந்த பதிவர் கூட பேசிப் பார்த்தியா? அவருக்கு செம ஹிட்டு கிடைக்குதான்னு கேட்டியா?
கட்டழகன்: அடச் சே! நீங்க எல்லாம் மனுசனா சார்? அதையெல்லாம் அவனோட பொண்டாட்டி கூட இல்லே கேட்டு தெரிஞ்சுக்கனும். இப்போத் தான் கலியாணமே ஆகியிருக்கு. ஒரு மூனு மாசம் வெயிட் பண்ணிட்டு கேட்போமில்லே!!
டீக்கடைக்காரனும், வாடிக்கையாளரும்:
டீக்கடைக்காரன்: ஏனுங்க நாயர்; நடிகர் விஜயும், ஜெயாவும் இரு துருவங்களாகிட்டாங்களே. பின்னாடி ஏதும் மர்மங்கள் இருக்குமா?
நாயர்: பின்னாடி என்ன இருக்குன்னு நமக்கு எப்படிப்பா தெரியும்? எல்லாம் சந்திரசேகரனுக்குத் தான்யா வெளிச்சம்.
ட்ரைவிங் மாஸ்டரும், மாணவன் மணியும்:
மாஸ்டர்: மிஸ்டர் மணி! இன்னைக்கு உன்னோட ட்ரைவிங் கிளாஸ் எல்லாமே முடிஞ்சிருச்சு. இனிமே தனியா கார் ஓடுவீங்க தானே.
மணி: சார், தனியா கார் ஓடுவது ஒன்னும் மேட்டரே இல்லைங்க. ஆனால் முன்னாடி இருக்கிறது ப்ரேக்கா இல்லை ஆக்ஸிலேட்டரா என்று தானுங்க டவுட்டு.
செல்லக் குறும்பு:
என் அம்ஷிகாவின் வயசோ மூவாறு
அணைத்து முத்தம் கொடுத்த இடம் நாயாறு
பார்வையாலே இருவருக்கும் கோளாறு
வாந்தி எடுத்ததனால் வீட்டில் இப்போ தகராறு!
|
0 Comments:
Post a Comment