இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கலைஞானி கமலஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்திற்கு கிரேஸி மோகன் திரைக்கதை, வசனங்கள் எழுத, இப்படத்தில் கமல் கதையும் எழுதி உள்ளார்.
வரும் அக்டோபரில் தொடங்கும் இப்படத்திற்காக நாயகி வேடம் ஏற்க முதலில் காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் ஒதுங்கி விட்டதால், தற்போது அசினிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் நல்ல என்ட்ரிக்கு காத்திருந்த அசின் உடனடியாக தேதிகளை கொடுத்து விட்டாராம். ஆக தசாவதாரத்துக்கு பிறகு, கமல் – அசின் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது.
|
0 Comments:
Post a Comment