வணக்கம் நண்பர்ஸ், பேஸ்புக்கில் என்னவெல்லாம் பண்ணலாம் என்று யோசிக்கிறீர்களா? பணம் சம்பாதிக்கலாம். நல்ல நண்பர்களைக் கண்டு பிடிக்கலாம். ஏன் நண்பிகளை, காதலன், காதலிகளைக் கூட நமக்கு ஏத்த மாதிரி தேடிக்கலாம். இவை எல்லாவற்றையும் விட, நாம நம்ம பதிவுகளை பலரிடம் கொண்டு செல்லலாம். பேஸ்புக்கில் செம பிரபலமா இருக்கும் பதிவர்கள் அப்படீன்னு பார்தமுன்னா, நம்ம ஈரோடு கதிர் , விக்கியுலகம் வெங்கட் குமார், மைந்தன் சிவா, நாஞ்சில் மனோ, இந்திரா, செல்வி ஆகியோர், இவங்க போஸ்ட் போட்டாலும் சரி காலை வணக்கம் சொன்னாலும் சரி 100+ லைக் குறுகிய நேரத்தினுள் வரும் அப்படீங்கிறது கேரண்டி!
இனிமே பேஸ்புக்கில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்னு பதிவு எழுதலாம்னு இருக்கேன்! அதுக்கு முன்னாடி, இம்புட்டு நாளா நாம பேஸ்புக்கில என்ன செய்தோம் என்று நீங்க கேட்பீங்க இல்லையா? ஸோ அதனால நாமளும் பேஸ்புக்கில வெட்டியா உட்கார்ந்திருந்து குட்டி குட்டி கவுஜ எழுதினோம்னு உங்க கூட ஷேர் பண்ணிக்கப் போறேன்! என் மொக்கைகளைப் படிக்க நீங்க ரெடியா?
கொன்னுட்டியே பாவி!
கொன்னுட்டியே பாவி!
நீ செல் நம்பர் கொடுத்து
டயல் பண்ணச் சொன்னாய்
பேசினான் உன் அண்ணன்
டயல் பண்ணச் சொன்னாய்
பேசினான் உன் அண்ணன்
ஹாஸ்பிட்டலில் மூச்சு வாங்கிட
அழுதபடி இந்த காதல் கண்ணன்!
அழுதபடி இந்த காதல் கண்ணன்!
நீ மட்டும் மாறிட்டே ஷீலா!
ரெனோல்ட் பேனாவில் மை உறிஞ்சி
ஸ்கூல் மேசையில் உன் பேர் எழுதி
சைக்கிள் கூடைக்குள்
யாருக்கும் தெரியாமல் லெட்டர் எறிந்து
அம்மன் கோவிலடியில்
அதிகாலை ஆறு மணிக்கே - காதல்
பக்திப் பரவசத்துடன் உனைச் சந்திக்க வந்து
நல்லூரின் பின் வீதியில்
உன் நெற்றியில் நான் பொட்டிட,
என் நெற்றியில் நீ பொட்டிட்டு
நாலு வார்த்தை பேசினோம் ஓர் காலம்!
ராஜா கிரீம் ஹவுஸில் ஐஸ் கிரீம் வாங்கி
யார்க்கும் தெரியாமல் ஓரமாய் உட்கார்ந்து
ரோஜா உன் பேச்சை கேட்க காத்திருந்தேன்
நிரூ நடந்ததெல்லாம் மறந்திடுவோம்
நாளை நான் கனடா பயணம் என்றாய்
பறந்தோடிப் போனாய்
இன்று வரை கூடு திரும்பாத கிளியாய்!
|
0 Comments:
Post a Comment