Showing posts with label குசும்பு. Show all posts
Showing posts with label குசும்பு. Show all posts

Thursday, September 26, 2013

வயசுப் பையனின் வாலிப லீலா விநோதங்கள்!

கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!

பேஸ்புக்கில் லவ் செஞ்சேன் -வாயேண்டி
பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம் என்றேன்
போங்க மச்சான் - எனக்கு சொல்லவே
வெட்கமா இருக்கு என்றால்
என்னாடி விஷயம் என்றேன்?
பேஸ்புக்கில் லவ் செஞ்சால்
புள்ளையெல்லாம் இப்படித் தான்
பிறக்கும் என்றால் - எப்படிடா செல்லம் என்றேன்
அனுப்பினாள் பாவி ஓர் போட்டே - அட நானும்
அதிர்ச்சியில் உறைந்தேன் - சாய்ந்தேன்!!

Sunday, August 25, 2013

அந்த பதிவரின் மனைவிக்கு பெயர் ஹி(க)ட்டழகியா? பதிவுலகம் அதிர்ச்சி!

ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!

பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க
சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க?
சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!
சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.

Friday, August 3, 2012

வில்லங்கத்தை கொ(கெ)டுக்கும் விபரீத கு(சு)றும்புகள்!

கள்ளக் காதலும் கணவன் கையில் ஆதாரமும்!
பெண்டிலை(க்) கேட்டாராம் பெருசு
பெறு மாதம் எப்போதென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
அன்பாக கேட்ட பின்
மண்டே சொல்லுகிறேன் என
மனதுக்குள் யோசித்தாள் தேவி;
இன்றைய காலத்தில் நடக்கும்
இடக்குமுடக்கான வேலையிது
என்றே சொல்லி எனை
ஏமாளியாய் அனுப்பினாள்- பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!
மன்றம் போட்டு மைக்செட் பூட்டி
மங்கையர் முழங்கும் காலத்தில்
"கன்றாவி லைப்" இதுவென
கணவன்மார் புலம்பினால் வாழ்வும்
திண்டாடி கோர்ட்டேறி
தீராத தொல்லையோ; டிவோசில் முடியுமாம்!

Tuesday, March 27, 2012

அப்பாவி என் பார்வை தப்பானதோ - மப்பாலே என் வாழ்வும் செக்கானதோ?

குணத்தை கெடுக்கும் குடிபானம்! குமரிப் பெண்ணால் வாழ்வே நாசம்!

அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்
அருமை நண்பன் ஆசையாய் அழைத்தான்
தப்பாக இருக்காது மச்சான் என்றான் 
தரமான சரக்கிது அடி என்றான்
முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ
மப்பேத்தும் கள்ளதனை கண்டதுமே நெகிழ்ந்தேன்
மனதையும் பறி கொடுத்தேன் - மயக்கத்தில்
தப்பான ரூட்டில் போவேனா என்றேன்!
தரமான கள்ளு என தமிழுரைத்தேன்
அப்பாவி என் பார்வை தப்பானதோ? 
அடுத்தாத்து பெண் மீதும் ஒப்பானதோ?
மப்பாலே மனம் போன போக்கில் 
மதி கெட்டும் போய் விட்டேன்
அப்பாவாய் ஆகாத குறையாக இன்றோ
ஆருமற்ற ஜெயிலில் களி தின்றேன்!

Wednesday, February 8, 2012

கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - கேப்டன் ஜில் ஜல்!

ஓட்டுக்கு இல்லாத மதிப்பும் ஒத்த வெரலுக்கு கிடைச்சிருக்கே - தேதிமுக உடன் கூட்டொன்று வைக்காத கட்சி மானமும் காத்தோட போயிருச்சே: வழிப் போக்கன் டட்டுவம்
*****************************************
கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - வாஞ்சிநாதன் IPS
வெரல உயர்த்தி பேசினே சட்ட சபையை வுட்டு டிஸ்மிஸ் செஞ்சுபுடுவேன் - CM ஜெயலலிதா நாற்று

Saturday, February 4, 2012

மப்படித்த கேப்டனும், சொல் அம்பு தொடுத்த ஜெயாவும்!

நறுக், விறுக், சுருக் நகைச்சுவை மேடை!

தொண்டன்: கேப்டன் சார்! சரக்கு அடிக்கும் போது, ஏனுங்க விரலை காண்பிக்கிறீங்க? 
சரக்கு ஆர்டர் செய்யும் போதும் ஏனுங்க விரல் லேபிள் அப்படீன்னு ஆர்டர் பண்றீங்க?
கேப்டன்: தொண்டா, இப்போதெல்லாம் சொல்லுக்கு கெடைக்காத மருவாதை விரலுக்குத் தானே கெடைக்குது. அத்தோட White label தரும் பவர் கூட என் விரல் மூலமா தான் வெளிப்பட்டிருக்கு. அதால என்னோட அகராதில எனிமே white label இன் பெயர் விரல் லேபிள் தான்! நிரூபனின் நாற்று வலைப் பூ ஒரிஜின

Friday, February 3, 2012

நாளை எனக்கு கல்யாணமாம் - என்ன நான் செய்வேன் சொல்லுங்களேன்!

நாளை எனக்கு கல்யாணமாம் - நான்
என்ன செய்வேன் சொல்லுங்களேன்!
காலை எழுந்தவுடன் கரும்பாய் ஓர் சேதி
மதுரனோ என் காதில் மெதுவாய் சொன்னான்
ஓலை எழுதி ஒருத்தியை பார்த்து
ஒன்னை எனக்கு புடிச்சிருக்கு என்றும் சொல்லவில்லை
வேளை வரும் வரை காதல் வெறி கொண்டு அலைந்து
வெட்டியாய் நானும் காத்திருக்கவில்லை

Monday, January 30, 2012

பதிவரின் மனைவிக்கு பெயர் ஹிட்டழகியா? பதிவுலகம் அதிர்ச்சி!

ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!

பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க
சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க தெரியுமா?
சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!
சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.

Wednesday, December 21, 2011

கடுப்பைக் கிளப்பும் கனவுக் கன்னிகள் & கொஞ்சும் கவிதைகள்!

சிந்துவினால் சிந்தனையினை இழந்த வாலிப மந்தியின் நிலை! 

அந்தியிலே வந்து போனாள் சிந்து - எனை
ஆதரவாய் கூட்டி சென்ற இடம் ஓர் சந்து!
மந்தியினைப் போல அவள் பின்னே சென்றேன்
மயக்கமது தெளிகையில் கட்டிலினால் கீழே விழுந்தேன்!

Thursday, December 8, 2011

கலியாண வயசுப் பையனின் கனவு குசு(று)ம்புகள்!

கலியாணம் கட்டாத பிரமச்சாரியின் கனவு(ப்) புலம்பல்!

குட்டி குஷ்பூவிடம் தம் மனதை(க்) கொட்டி(த்) தொலைத்தனர் பலர் 
தமிழில் ஹன்சி கொடி கட்டி(ப்) பறக்காளா என கோயிலில் - அங்க(ப்)
பிரதிஷ்ட்டை அடிக்கின்றனர் இன்னும் சிலர்!
நட்ட நடு இராத்திரியிலும் கனவில் ஹன்சி(கா) வரவே 
மிட் நைட் மசாலா தேடுகின்றனர் சிலர் - அவள் அழகு படுத்தும்
பாட்டால் ஹன்சியே கதியென அலையும் ஜொள்ளர்களும் நம்மில் உளர்!

Wednesday, November 9, 2011

வில்லங்கத்தை தூண்டும் விபரீதமான கு(சு)றும்புகள்!

கள்ளக் காதலும் கணவன் கையில் ஆதாரமும்!
பெண்டிலை(க்) கேட்டாராம் பெருசு
பெறு மாதம் எப்போதென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
அன்பாக கேட்ட பின்
மண்டே சொல்லுகிறேன் என
மனதுக்குள் யோசித்தாள் தேவி;
இன்றைய காலத்தில் நடக்கும்
இடக்குமுடக்கான வேலையிது
என்றே சொல்லி எனை
ஏமாளியாய் அனுப்பினாள்- பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!
மன்றம் போட்டு மைக்செட் பூட்டி
மங்கையர் முழங்கும் காலத்தில்
"கன்றாவி லைப்" இதுவென
கணவன்மார் புலம்பினால் வாழ்வும்
திண்டாடி கோர்ட்டேறி
தீராத தொல்லையோ; டிவோசில் முடியுமாம்!

Thursday, October 6, 2011

செல்லமாய் அவள் பெயர் சொன்னேன் - சீ! தூ என செருப்பால் அடித்தாள் பாவி!

நவீன மகளுக்காய் நடு ரோட்டில் வீழ்ந்த தந்தை!

பொங்கலுக்கு வந்த மகள் ரீட்டா
போதையேத்த கேட்டாள் ஒரு குவாட்டர்
போத்தலது வாங்க சென்ற அவள் அப்பன்
போதையிலே தள்ளாடி வீழ்ந்தார் அரை மப்பில்!

Tuesday, September 20, 2011

கலியாணம் கட்டாத பிரமச்சாரியின் காலக் கிறுக்கல்கள்!

தலை தப்பினால் போதும்!


கோயில் முன்றலில் அவளின்
சிரிப்பொலி கேட்டு(த்) திரும்பிப் பார்த்தேன்- அவள்
பின்னே கோமதி மாமி கையில் தேங்காயுடன்
நிற்பதைக் கண்டு தலையில் கை வைத்தேன்!
(இக் கவிதையில் தொக்கி நிற்கும் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்- ஏன் தலையில் கை வைத்தேன் என்று யாராச்சும் சொல்ல முடியுமா?)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க