இன்றைய பதிவினூடாக ஓர் வரலாற்றுச் சம்பவத்தினை மீட்டிப் பார்க்கவிருக்கின்றோம். அது என்ன வரலாற்றுச் சம்பவம் என்று நீங்க ஆழ்ந்த சிந்தனையினுள் செல்லலாம். வாருங்கள், மெதுவாக பதிவினுள் இறங்குவோம்.
ஐயா வணக்கம், அம்மா வணக்கம், மற்றும் அனைவருக்கும் வணக்கமுங்கோ!நம்ம பேட்டிக்கு வந்திருக்கும் ஹெஸ்ட்டை பார்க்கிறதுக்கு முன்னாடி, அவரைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம் படிப்போமா? "பதிவுலகில் உள் குத்திற்கு ரொம்பவே பேர் போனவர் நான் தான் என்று" அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் மகான் இவர். இவரோட ஸ்பெசாலிட்டியே உள்குத்து என்ற பெயரில் மத்தவங்களுக்கு புரியாத மாதிரியும், தனக்கு மாத்திரம் புரிகிற மாதிரியும் பதிவெழுதி; தன்னோட எழுத்துக்கள் பின் நவீனத்துவ இலக்கியம் என்று மார் தட்டிக் கொள்வது தான். இப்போ...நாம நேரடியாக நாரதரைச் சந்திக்கப் போவோமா? வாருங்கள்!
ஒவ்வோர் வருடமும் பிறந்த நாள் வருகின்றதே என நாம் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குளித்து குதூகலிக்கும் போதெல்லாம், அணைக்கப்படும் மெழுகுவர்த்திப் புகையோடு சேர்ந்து காணாமற் போய் விடுகின்றது வயதாகின்றதே என்கின்ற நினைப்பு. நாம் வாழும் காலத்தில் ஒவ்வோர் வருடமும் ஓராண்டு குறைகின்றதே என கவலை கொள்வோரை விட; எமக்கு அடுத்த பிறந்த நாள் எப்போது வரும் என ஆவல் கொண்டிருப்போர் தான் இவ் உலகில் அதிகமாக உள்ளார்கள். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் எம் உலகியல் ஆசாபாசங்கள் நீங்கப் பெற்றவர்களாக நாம் ஆண்டு, அனுபவித்து மாண்டு போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாலும் தீராத நோயால் வாடுவோரைத் தவிர யாருமே சாவை விரும்பி அழைத்துக் கொள்வதில்லை.