ஒவ்வோர் வருடமும் பிறந்த நாள் வருகின்றதே என நாம் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குளித்து குதூகலிக்கும் போதெல்லாம், அணைக்கப்படும் மெழுகுவர்த்திப் புகையோடு சேர்ந்து காணாமற் போய் விடுகின்றது வயதாகின்றதே என்கின்ற நினைப்பு. நாம் வாழும் காலத்தில் ஒவ்வோர் வருடமும் ஓராண்டு குறைகின்றதே என கவலை கொள்வோரை விட; எமக்கு அடுத்த பிறந்த நாள் எப்போது வரும் என ஆவல் கொண்டிருப்போர் தான் இவ் உலகில் அதிகமாக உள்ளார்கள். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் எம் உலகியல் ஆசாபாசங்கள் நீங்கப் பெற்றவர்களாக நாம் ஆண்டு, அனுபவித்து மாண்டு போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாலும் தீராத நோயால் வாடுவோரைத் தவிர யாருமே சாவை விரும்பி அழைத்துக் கொள்வதில்லை.
|
|

