எமலோகத்தில் எம தர்மனும், குழுவினரும் பேசிக் கொள்கிறார்கள்.
*எமனின் சீடன்: மன்னா!! கேட்டீர்களா சேதி? பூலோகத்தில் ஜெயலலிதா எனும் முன்னாள் நடிகையை பிரதமராக தகுதி உள்ளவரா அப்படீன்னு கேப்டன் கேட்டுப்புட்டாராம்.
எம தர்மன்: அப்படியா சங்கதி? அதைக் கேட்பவருக்கு கேள்வி கேட்கிற தகுதி இருக்கான்னு அம்மா கேட்கமால் விட்டுப்புட்டாங்களே!!
*தெருக் கடையில் ஒருவன்: சினிமாவும், அரசியலும் இப்ப சாக்கடையாச்சு!
பத்திரிகை படிப்பவன்: அடப் போங்க சார், உங்களுக்கு இன்னமும் மேட்டரே தெரியலை! நம்ம அரசியல் இப்போ டாஸ்மாக் கடை ஆகிடுச்சு சார்!கலைஞரும், அவரது குடும்ப அரசியல் பரிவாரங்களும் பேசிக் கொள்கின்றார்கள்!
கலைஞர்: "பசங்களா! சிலோன் பிரச்சினை; அப்படீன்னு ஒண்ணு, இருக்கும் வரை நாம எல்லோரும் அரசியல்ல எண்பது வருசம் என்ன இன்னும் எண்ணூறு வருசத்திற்கு காலூன்றி இருக்கலாம்!”
கலைஞரைச் சுற்றியுள்ளோர் : அடக் கறுமம்! இந்தாள் இன்னும் போய்ச் சேர்ற யோசனை இல்லாமல், ஆட்சில இறுக்கி கட்டிப்பிடிச்சிட்டு வாழ்ற யோசனைல தான் இருக்கு! நாம இனிமே உருப்பட்ட மாதிரித் தான்!!
*ஜெயா டீவி தொகுப்பாளரும், ஒரு நேயரும்!
தொகுப்பாளர்: நேயரே, உங்களால் பாட முடியுமா?
நேயர்: அடப் பாடிட்டா போச்சு!
இலவசத்தை ஊத்திக் கொடுத்து
இரண்டாயிரம் ஓட்டு வாங்கி
பரவசமா ஆகிடனும் செல்லக் கண்ணு - மெதுவா
கெடா நாட்டில பதுங்கிடனும் செல்லக் கண்ணு
அடுத்த தேர்தல் வரும் போது அம்மாவுக்கு ஓட்டு போடனும்
செல்லக்கண்ணு! நீயும் அம்மாவுக்கு ஓட்டு போடனும் செல்லக்கண்ணு!
தொகுப்பாளர்: நிறுத்துங்க சார்! எப்படிங்க அம்மாவுக்கு ஓட்டுப் போடுவது! ரெட்டை இலை தோடம்பழத்திற்கு தானேங்க ஓட்டு போட முடியும்!
* சொத்தாசை கொண்ட பித்து பிடித்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை - மக்கள்
செத்தாலும் கவலையில்லை என்ற நிலமையே உலகெங்கும் நிகழும்!!
அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?
<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?
சனிக்கிழமை இலங்கை - இந்திய நேரம் காலை 06.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம்.
இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com
புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்!
புரட்சி இணைய வானொலியில் இதயம் கேட்ட பாடல் நிகழ்ச்சி, காதலா காதலா நிகழ்ச்சியில் பாடல் விரும்பி கேட்க விரும்பும் நேயர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் வாயிலாகவும் உங்கள் விருப்ப பாடலின் பெயரையும், பாடலை யாருக்காக விரும்பி கேட்கிறீங்க என்பதனையும் குறிப்பிட்டால் நிகழ்ச்சியில் உங்கள் விருப்ப பாடலும் இடம் பெறும்!
புரட்சி இணைய வானொலியில் இதயம் கேட்ட பாடல் நிகழ்ச்சி, காதலா காதலா நிகழ்ச்சியில் பாடல் விரும்பி கேட்க விரும்பும் நேயர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் வாயிலாகவும் உங்கள் விருப்ப பாடலின் பெயரையும், பாடலை யாருக்காக விரும்பி கேட்கிறீங்க என்பதனையும் குறிப்பிட்டால் நிகழ்ச்சியில் உங்கள் விருப்ப பாடலும் இடம் பெறும்!
|
2 Comments:
Valthukkal enakku oru nalla padal tharavun
பாத்துங்க! அம்மா காதுல விழப்போவுது!
இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in
Post a Comment