செய்தி: அதிமுக வெகு விரைவில் அடியோடு விரட்டப்படும் - கேப்டன் சூளுரை
விமர்சகன்: அடப் போங்க தம்பி! போய் வேலையைப் பாருங்க! சூளுரை என்ற இடத்திற்கு பதிலா மப்புரைன்னு எழுதியிருக்கலாமில்லே!
செய்தி: ஜெயலலிதாவின் இறுதி காலம் நெருங்குகிறது - தேதிமுக கூட்ட தொடரில் கேப்டன்
விமர்சகன்: ஏலேய்! எம்புட்டு நாளைக்கு மக்களை நீங்க ஏமாத்த போறேய்? அம்மாவுக்கு வயசாகிடுச்சு என்பது நீங்க சொல்லியா தெரியனும்?
செய்தி: தமிழ் நாட்டில் இனிமே தேதிமுக காலம் ஆரம்பமாகிடுச்சு!
வழிப்போக்கன்: போங்க தம்பி! போங்க! கலைஞர் கட்சியோட எதிர்காலம் முடிஞ்சு போச்சுன்னா இனிமே உங்க கட்சி ஆட்டம் தானே ஆரம்பம்னு அர்த்தம். இதைப் பெரிய உலக மகா சாதனை மாதிரி சொல்லுறீங்க!
அரசியல் ஆசாமி: அம்மாவுக்கு இப்போ கஷ்ட காலம்! கேப்டனுக்கு இப்போ நல்ல காலம் ஆரம்பிச்சிடுச்சு!
வழிப்போக்கன்: இதை மட்டும் அம்மா அறியனும், ஏலேய் சாமியோவ்! உனக்கு சோதனை காலம் ஆரம்பமாகிடும்!!
அன்பு நண்பர்களே, புரட்சி எப்.எம் கேட்டவாறு பதிவினைப் படிக்க...கீழே உள்ள ப்ளேயரில் Play அடையாளத்தை அழுத்துங்கள்
கேப்டன்: எம்.ஜி.ஆர் எங்கே? கருணாநிதியும், ஜெயலலிதாவும் எங்கே?
விமர்சகன்: ஆகா...மறுபடியும் மொதல்லா இருந்தா கேப்டன் சார்? நீங்க இப்போ எங்கே நிற்கிறீங்க? தரையிலையா? இல்லே வானத்திலயா?
செய்தி: விஜயகாந்த் மீது ஜெயா அவதூறு வழக்குப் பதிவு
விமர்சகன்: ஆகா....ஏம்மா நீங்க மட்டும் சட்ட சபைல விஜயகாந்தை கன்னா பின்னாண்ணு விமர்சிக்கலாம். அவர் மட்டும் உங்கள பத்தி பேசக் கூடாதோ!
கேப்டன்: சட்ட சபையில் ஜெயாவை புகழ அமைச்சர்களுக்கு நேரம் போதவில்லை.
வழிப் போக்கன்: எதுக்கு சார் சட்ட சபைல ஜெயாவை புகழனும்? அதுக்கு தான் போயஸ் காடன் இருக்கே சார்!
புரட்சி எப்.எம் இணையத் தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்
புரட்சி எப்.எம் இணையத் தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்
|
0 Comments:
Post a Comment