Wednesday, August 1, 2012

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

ஹாலிவூட், ஹொலிவூட், Hollywood, கோலிவூட், கோலிவுட் திரை விமர்சனம்!
குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல!
வாழ்க்கையினை நாம் எல்லோரும் சவாலாக எடுத்துக் கொண்டால் தான் தடைகளையும்- தடங்கல்களையும் தாண்டி வளர்ச்சியடைய முடியும். சவால்கள் நிறைந்த தமது வாழ்க்கையினைப் பிறருக்காக அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் அமைவதில்லை. தன் வாழ்க்கையினை அர்ப்பணித்து, பிறருக்காகப் போராடுகின்ற சவால்கள் நிறைந்த மனிதனின் திரைக் கதையினை உள்ளடக்கிய ஒரு படத்தினைப் பற்றித் தான் நாம் இப் பதிவினூடாகப் பார்க்கப் போகின்றோம்.
2010ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 10ம் திகதியன்று 20th Century நிறுவனத்தின் வெளியிட்டீல், டன்ஷல் வோஷிங்டன் (Danzel Washington) , டோனி ஸ்கோர்ட் (Tony Scott) , கிறிஸ் பைன் (Chris Pine) மற்றும் பல ஹோலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பில்  ரிலீஸ் ஆகிய படம் தான் இந்த UNSTOPPABLE.  முற்று முழுதாக உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து (INSPIRED BY TRUE EVENTS) தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரில்- ஆக்சன் படமானது, அமெரிக்காவின் Walbridge Ohio பகுதியில் 2001ம் ஆண்டு தன் கட்டுப்பாட்டினை இழந்து அசம்பாவிதத்தினை ஏற்படுத்திய ரயிலின் கதையினைத் தன்னகத்தே உண்மைச் சம்வமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்து 150 பள்ளிச் சிறார்களை ஏற்றியபடி ஒரு புகை வண்டி புறப்படத் தயாராகும் வேளை, இன்னோர் புகை வண்டியான 777எனும் பெயர் கொண்ட புகைவண்டி, 30,000 தொன் இராசயன- வாயுக்களை உள்ளடக்கிய கொள்கலன்களோடு மறு திசையிலிருந்து சம நேரத்தில் தமது பயணத்தினைத் ஆரம்பிக்கின்றது. இரசாயன வாயுக்களை உள்ளடக்கிய 777 ரயிலின் தண்டவாளத்தில் ஏதோ தடங்கல்கள் உள்ளதென்று அறிந்த ஓட்டுனர், முதலில் உதவியாளரை அழைத்து, கீழே இறங்கிப் பார்க்குமாறு கூறுகின்றார். 

உதவியாளரால் ரயிலில் என்ன கோளாறு என்று கண்டறிய முடியாத சூழ் நிலை ஏற்பட்டுக் கொள்ள, 777 வண்டியின் ஓட்டுனர் புகை வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பரிசோதிக்கும் சமயம் வண்டியானது AIR BREAK அறுந்ததும் வேகமாக கட்டுப்பாட்டினை இழந்து ஓடத் தொடங்குன்றது. பத்து இலட்சம் மக்கள் செறிந்து வாழும் பென்சில்வேனியா மாநிலத்தின் முக்கிய நகருக்கூடாக இந்தப் புகை வண்டியானது கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அதி வேகமாகச் செல்லும் போது, ஆபத்துக்கள் நிகழும் என்பதால், தமது உயிரினைப் பணயம் வைத்துப் புகை வண்டியினை நிறுத்துவதற்காகப் போராடுகின்றார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.
முதலில் கட்டுப்பாட்டினை இழந்த ரயிலின் ஓட்டுனரும், அவரது உதவியாளரும் வேகமாக காரின் உதவியோடு கலைத்துச் சென்று, புகை வண்டிக்குள் நுழைந்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் சமயம், நொடிக்கொரு தரம் அதிகரிக்கும் புகை வண்டியின் வேகம் காரணமாக அம் முயற்சி தோல்வியில் முடிவடைகின்றது. 

 அடுத்து முன் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் உதவியுடன், அதே தண்டவாளத்தில் பின்னே வரும் 777 வண்டியினைத் தடுத்தி நிறுத்திப் இரு பெட்டிகளையும் இணைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தோல்வியினைத் தழுவிக் கொள்ள, 777 வண்டியானது அதி வேகமாகத் தனக்கு முன்னே செல்லும் வண்டியினை உடைத்து நொறுக்கியவாறு பயணிக்கையில் தடுத்து நிறுத்த முயற்சித்த வண்டி தீப்பற்றி வெடித்துச் சிதறுகின்றது.

ஹெலிகாப்டரின் உதவியோடு வேகமாக ஓடுகின்ற ரயிலின் மேற் புறத்தில் குதித்து, உள்ளே சென்று ரயிலினைத் தடுத்து நிறுத்தலாம் என்று மேற்கொள்ளப்படும் முயற்சியும் விபரீதமான உயிரிழப்பில் முடிவடைந்து கொள்ள, பென்சில்வேனியா மாநிலத்தின் போலீஸ் படைப் பிரிவின் உதவியானது கோரப்படுகின்றது. 

ஓடுகின்ற ரயிலின் Emergency Stop Button ஐத் துப்பாக்கியால் கூட்டாகத் தாக்குதல் நடாத்தி உடைத்துப் புகை வண்டியினை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியும் தோல்வியில் தழுவிக் கொள்ள படத்தின் கதாநாயகன் டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள்- 20 வருடங்களாகப் ரயில்வே பணியில் இருக்கும் தன்னால் இப் புகையிரதத்தினை நிறுத்த முடியும் எனச் சவால் மேற்கொண்டு, பலத்த தடைகளின் மத்தியில், ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உதவி பெற்று 70mph வேகத்தில் செல்லும் ரயிலைத் தனது ரயிலின் மூலம் பின் பக்கமாகக் கலைத்துச் சென்று, ரயிலினை நிறுத்தினாரா இல்லையா, எதிர்த் திசையில் 150 பள்ளிச் சிறார்களோடு வருகின்ற புகையிரதத்திற்கு என்ன ஆச்சு எனும் விடயங்களைக் கூறி நிற்கின்ற படம் தான் இந்த Unstoppable. 
ஒவ்வொரு நொடிப் பொழுதும் அடுத்தது என்ன நடக்கும் என்கின்ற திரிலிங் உணர்வினையும், மயிர்க் கூச்செரியும் காட்சிகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய இப் படத்திற்கு HARRY GREGSON- WILLIAMS அவர்கள் இசையமைத்திருக்கிறார். விசுவல் எபக்ட் மூலம் துல்லியமான ஒலிக் கலவைகளைத் தன்னகத்தே தாங்கி வந்திருக்கிறது இப் படம். 

MARK BOMBACK அவர்களின் எண்ணத்திலும், எழுத்துருவாக்கத்திலும் உருவாகியுள்ள இப் படத்தினை Julie Yor, Tony Scott, Mimi Roger, Eric Mcleod, Alex Young முதலியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். திரிலிங் படம் என்றாலும் ஆங்காங்கே ஒரு சில செண்டிமெண்டல் காட்சிகளையும் தவழ விட்டிருக்கிறார்கள் படக் குழுவினர். டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள் தன் இரண்டாவது மகளின் பிறந்த நாளிற்கு வாழ்த்துச் சொல்லாது, வேலை பிசியால் மறந்து போய் வேலைக்கு வந்த பின்னர் மகளோடு தன் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ள முயற்சி செய்கின்றார். ஆனால், அவரது மகள் செல்லமாய்க் கோபம் கொண்டு தன் தந்தை வாழ்த்துத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளும் ஒவ்வோர் நிமிடமும், அவரது தொலைபேசி அழைப்பினை அவொய்ட் பண்ணிக் கொள்கின்றார்.

இறுதியில் மக்களுக்காக தம் உயிர் போனாலும் பரவாயில்லை, கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பயணிக்கும் இந்தப் புகையிரதத்தினைத் தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொண்டவர்களாக டன்ஷேல் வோஷிங்டன் அவர்களும், புதிதாக ரயில்வே பணிக்குச் சேர்ந்த டோனி ஸ்கோர்ட் அவர்களும் தீர்மானம் மேற்கொள்ளும் சமயத்தில், தன் மகளைப் பற்றிய நினைப்பானது மீண்டும் வந்து கொள்ளத் தொலைபேசி அழைப்பினை எடுக்கின்றார் டன்ஷேல் அவர்கள்.

அவரின் மூத்த மகளிடம் உன் தங்கையோடு பேச வேண்டும் என்ற சொல்ல,  மகளோ மீண்டும் தந்தையினை அவொய்ட் பண்ணி, அவரோடு பேசமாட்டேன் என்று சொல்ல, அந்த நிமிடத்தில் 
"Tell you'r Sister, I Love You, I Have to go"....எனச் சொல்லும் சமயத்தில் அவர் கண்களிலிருந்து நீர் சொரிகின்றது. 
தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அதிகம் நிரம்பியிருந்தாலும், பாலியல் சீன்கள் ஏதுமற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த திரிலிங் படமானது 83வது அக்கடமி அவார்ட்டிற்கு சிறந்த சவுண்ட் எடிற்றிங் எனும் பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. $85-95 மில்லியன் பட்ஜெட்டில் வெளிவந்துள்ள இப் படமானது வசூலில் சாதனை நிலை நாட்டியிருக்கிறது. 

UNSTOPPABLE: திரிலிங் பிரியர்களுக்கான தித்திக்கும் விருந்து. 

படத்தின் ட்ரெயிலரைக் கண்டு களிக்க: 

98 நிமிடங்கள் கொண்ட இப் படத்தினைப் பார்த்து மகிழ: 

************************************************************************************************************************ அப்புறம் மக்கள்ஸ், யாரோ நாற்று குழுமம் அப்படீன்னு ஒரு பேஸ்புக் குழுமம் இருக்காமுங்க. அவங்க புரட்சி எப்.எம் அப்படீன்னு ஒன்னை உருவாக்கியிருக்காங்க. நேரம் இருக்கும் போது நீங்களும் புரட்சி எப்.எம் கேட்பதோடு, உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் இந்தப் புதிய வானொலி பத்தி அறிமுகஞ் செஞ்சு, அவங்களையும் கேட்கச் செய்வது தான் புதிய கலைஞர்களுக்கு நீங்கள் வழங்கும் பேராதரவாகும். இந்த வானொலியை உங்கள் கையடக்க தொலைபேசிகள் ஊடாகவும் நீங்கள் கேட்டு மகிழ முடியும் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இத்தால் அறியத் தருகின்றோம். 

நண்பர்களே..ஏலவே என் வலைப் பதிவிற்கு நீங்கள் பேராதரவு நல்கியது போல, புரட்சி இணைய வானொலிக்கும் உங்களின் பேராதரவினை வழங்குவீங்க என்று நம்புகின்றேன். 
அன்பு உறவுகளே, 
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்றைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை 10.00 மணி தொடக்கம் உங்கள் புரட்சி இணைய வானொலியில் பல நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமனாவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 
ஹலோ இணையம் நிகழ்ச்சியினை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக காத்திருக்கிறது. சுவையான, சுவாரஸ்யமான நாளாந்த விடயங்களை தாங்கி, அனைத்து இணையச் செய்திகளையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நீங்கள் கேட்டு மகிழலாம். 

வாங்க பேசலாம் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 08.00 மணிக்கு காதலா காதலா நிகழ்ச்சி இடம் பெறவிருக்கு. நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவருகு கேட்டு மகிழலாம்.


ஹலோ இணையம் நிகழ்ச்சியோடு இணைந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் ஐ கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்:



2 Comments:

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

சிறப்பான ஒரு திரைப்படம் அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

செம ஸ்பீடுல மூவ் ஆகும் சூப்பர் ஆக்சன் படம் இது. ஸ்டார் மூவிஸில் கூட அடிக்கடி ஓடிட்டிருந்ததா ஞாபகம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails