பாகம் ஒன்றின் தொடர்ச்சி. பாகம் 01 படிக்காதோர் இங்கே கிளிக் செய்யுங்கள்.
சிம்ம நடிகை பம்மல் பட பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்தார். அவ்வேளையில் சிம்மத்திற்கும் நடன மாஸ்டருக்கும் இடையில் காதல் என எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். அதுவே உண்மையாகும் வகையில் இருவரும் சர்ச்சைகளை, தோற்றுவித்தார்கள்.
மீடியாக்காரர்களுக்கு வேறு வேலையே கிடையாதுங்க எனக் கோபத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் பிந்து மாதவி! தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அது என்று வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்.
அது , இது , எது என சின்னத் திரையில்ஆரம்பித்து, திரைத் துறையில் தற்போது ஜமாய்த்து வருபவர் தான் சிவகார்த்திகேயன்! கேடி பில்லா கில்லாடி ரங்காவில் நடித்த பிந்து மாதவியுடன் கிசு கிசுவில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது. பொதுவாக திரையுலகப் பிரபலவங்கள் வாழ்வில் கிசு கிசுக்கள் வருவது இயல்பு. ஆனால் ஏற்கனவே மாமன் மகளை மணமுடித்து இல்லற பந்தத்தில் இணைந்துள்ள சிவகார்த்திகேயன் வாழ்வில் இப்படி ஒரு நிலமை ஏற்பட்டிருப்பதானது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபலங்கள் என்றால் எப்போதும் ப்ராப்ளங்கள் சூழ்ந்து கொள்வதும், அப் ப்ராப்ளங்கள் சுவாரஸ்யமாக அமையும் பட்சத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து கொள்வதும் இயல்பான ஓர் விடயமாகும். கிரிக்கட்டில் தன் சுழற் பந்து மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரனா ஷேர்ன் வோர்ன் அவர்கள் கிரிக்கட்டில் புகழ் பெற்றுப் பிரபலமாக வாழ்ந்ததனைப் போன்று கிசு கிசுக்களுக்கும், மன்மத லீலைகளுக்கும் பஞ்சம் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றார். உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள் சிக்கல்களில் மாட்டி விட்டாலே போதும்! பத்திரிகைகளின் முன் பக்கத்தில் வர்ணமயமான அட்டைப் படத்துடன் கூடியவாறு சூடான செய்திகளைப் போட்டு நல்ல வருமானமும் ஈட்டி விடுவார்கள் பத்திரிகையாளர்கள்.