(வயது வந்தோருக்கான விழிப்புணர்வு கதை)
குமரன் வாத்தியிடம் டீயூசன் முடித்து வீட்டிற்கு வந்து தன் தாயார் கோமதி ரெடி பண்ணி வைத்திருந்த சூடான தேநீரைப் பருகியவாறு கம்பியூட்டரை ஆன் செய்யத் தொடங்கினாள் ஜிலக்ஷா. "புள்ள ஜிலக்ஷா உனக்கு எக்ஸாம் கிட்டுதில்லே!கம்பியூட்டரில உட்காந்திருந்து டைம்மை வேஸ்ட் பண்ணுறதை நிறுத்திட்டு ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வாற வழியைப் பார்க்கலாமில்லே" எனத் தன் தாயார் அதட்டலுடன் ஏசிய ஏச்சினைக் கூடச் செவிமடுக்காதவளாக கணினி முன் உட்கார்ந்து பேஸ்புக்கினை ஓப்பின் செய்தாள் ஜிலக்ஷா. "இன்னைக்கு யாராச்சும் புதுசா ப்ரெண்ட் ரீக்குவெஸ்ட் கொடுத்திருக்காங்களா?" எனத் தேடியவளின் கண்ணுக்கு வர்ஷன் எனும் பெயருடன் ஒருவர் வெயிட்டிங்கில் கட்டழகு நிறைந்த தோற்றத்துடன் கூடிய போடோக்களை உள்ளடக்கிய புரோபைலுடன் காட்சியளிப்பது தென்பட்டது.