Sunday, August 5, 2012

சிற்றின்ப வெறியால் சீரழிந்த காதல்!

மறந்து போகுமோ முதற் காதல்!

புவியினிலே  கவிக்கும் பல பாடு பொருள் உண்டாம் – – இக்
கவியினிலே நானும் மறந்து போகுமா முதற்
காதல் என உரைக்க வந்தேன் – அட போடா நீயும் உன்
கவியும் என வார்த்தைகளை நீவிர் எறிந்து வீசாது
கேட்டிடுவீர் – குறை நிறைகளையும் பகிர்ந்திடுவீர்!
சின்ன வயசு – சிந்தைக்கு விருந்தளிக்கும் அவள்
கன்னமழகு – களிமண்ணால் மெழுகப்பட்ட
சின்னக் குடிசையினுள் வாழ்ந்த காலத்தில்
பிண்ணிப் பிணைந்தது மனதினுள் பல நினைப்பு
என்னை மறந்தேனா – இல்லை எண்ண மறந்தேனா
என்றிரைஞ்சி நிற்கையிலே என் காதில் கேட்டது
அண்ணன் சாந்தன் குரலில் ஓர் பாட்டு!

புதிர் கொடுத்த பின்னர் விளிக்கும் சிறு
புள்ளையதன் கதையாய் – நினைவுகள்
கதிர் வெடித்துப் பரவும் காலமதில் நானும்
புதிய இசை கேட்டேன் – காதல் கொண்டேன் – பொழுது புலரமுன்னர்
புலிகளின் குரலை காதில் கொண்டேன்!
பதிய மிட்ட நினைவாய் காதில்
பாய்ந்தது ஈழப் பாட்டு – அன்று முதல்
புதுவையரின் கவி மீதெனக்கு ; அவர்
புதுமைகளை உள்வாங்குவதால்
எது கவிதை எனும் அர்த்தம் அறியாத நாட் தொடக்கம்
இது கவிதை எனச் சொல்லி ரசித்தேன் – காதலுற்றேன்!

காதலெனும் சொல்லுக்கு அர்த்தங்கள் பலவிருக்கும் – அடியேனோ
காதலதன் சிறப்புணர்ந்து சித்தத்தின் நினைவுகளை
மோத விட்டேன் – கரை மேவித் தெளிந்தது பல நினைவு
காதில் தேன் பாய்ச்சும் இந்த கவிச் சுவைக் கரும்பு!

அன்னை மண் மீது ஆறேழு வயசு தொடக்கம்
அப்படி ஒரு காதல்!!!
சின்ன வயசென்றாலும் சிந்தையில் புலி வீரர் பார்த்து – அவர்
உன்னத வீரச் செயலுணர்ந்து எண்ணிடத் தோன்றும்
என்னையும் கொடுக்கனும் என்று – ஆனாலும்
எதிரியின் நினைப்பு
கண்ணை உறுத்திட மனம் மாறும்!


தாயகம் மீது தனியொரு காதல் – சிங்களப்
பேயது வந்து ஆட் கொள்ளும் வேளை
ஓய்வது இன்றி விரட்டிட வேண்டும் – இதற்கு
ஏற்றதோர் வழி மோதலே என்று மனம் கூறும்
தூயவன் தலைவன் எம்மையெல்லாம் துள்ளி திரியும் காலத்தில்
மாயமாய் வந்து ஆட் கொண்டதால் மனதினுள்
தாயகத் தவப் புதல்வன் அவனே எம் தலைவன் என காதல் – அவன் குறி தவறிட கூடாது என்று மனதினுள் உந்தி எழும் ஓர் சாதல்!!

அஞ்சாம் வகுப்பு – ஆளோ வட்டுக்காய் அளவு
கொஞ்சி மகிழும் சீனை தெரு கோடிக்குள்ளால் பார்க்கையிலோ
பஞ்சாய் வெடித்துப் பரவியது என் நினைவு – மனம்
கெஞ்சும் அந்த காட்சிதனை ஒட்டி நின்று பார்த்ததனால்
நெஞ்சமதில் பற்றிக் கொண்டது நெருப்பு – விளைவு
பாடஞ் சொல்லி தந்த டீச்சர் மீதும் பற்ற வைத்தது காதெலெனும் விருப்பு!!

சஞ்சிகைகள் மீதும், சந்த கவி மீதும் காதல்
மஞ்சமிட்டு கொண்டது –அட சின்னவனாம் எனக்கு அப்போது
வெஞ்சமரைத் தாங்கி வந்த விடுதலைப் புலிகளும், வெளிச்சமும்
நெஞ்சமதில் இலக்கிய தீயை வைத்தது – உளத்தில் காதலெனும்
நேசத்திற்கோ பலப் பல அர்த்தம் தந்தது!

பதின்ம வயது – பல வித கனவு வரும்
அதிகம் பேசினாலோ மனம் ஆத்திரம் கொள்ளும்
சுதியில் சுகமிருக்கோ இல்லையோ ஒரே பாட்டை
சுகந்தமென எண்ணி மனம் மீட்டும்
கதியால் வேலிக்குள்ளாலும் அடுத்த வீட்டு கார்த்திகா என்னை பார்த்து காதல்
கதையை உரைக்க மாட்டாளா என்றே எண்ணிட தோன்றும்!!

எதிர் வாங்கில் வந்திருப்பாள்
என்னை விட உயர்ந்திருப்பாள்
புதிர் போட்டு புன்னகைப்பாள்
பூங் குழலால் உரசிடுவாள்
கதிர் பட்டு(க்) கண்ணுடையாள்
காதல் மொழி பேசிடுவாள்
புதிர் நீக்கி என்னிடத்தே
பூங்கோதை நீ வருவதெப்போ என்று மனம் எண்ணும்
அவள் ரியூசனுக்கு வருகையிலோ என் நினைவோ துள்ளும்!

செம்பவளச் சிங்காரி - அவள்
சின்ன இடை ஒய்யாரி
அம்புலியின் பூங்கோதை - அவள்
அன்ன நடை மாக்கோதை
கும்மிருட்டு(க்) குழற்காரி - அவள்
குயிற் பாட்டில் சிருங்காரி
செம்பருத்தி வாய்க்காரி- எனை(ச்)
செவ் இதழால் நனைப்பதெப்போ
என்றெழுதி கொடுத்தேன் -அந்த
ஏந்திழையாளிடம் நானும் காதல் உரைத்தேன்!

கண்டாவளையருகே காலாற நடந்து போவது போல்
அவளுடன் கை கோர்த்து போகையில் வரும் நினைப்பு – எண்ணம்
துண்டாடி நின்றது போல் தெப்பக் குளமருகே அவள் வரவில்லையாம் என்றதும் காற்று போன சைக்கிள் டியூப்பாய் சுருங்கிப் போகும் எந்தன் கன்னம்!
கோணாவில் கவிதா – அவள் கொவ்வைப் பழச் சிவப்பாம்
மானாடா மயிலாட பார்க்காத காலத்திலும் அவள் நடையழகோ
தானாடும் தம்புராவின் மேற்பக்க இயல்பாம்!
கானாக் கவி தொடுக்க அப்போது முயற்சித்தேன் எந்தன்
கற்சிலை மடு பண்டார வன்னியனை நினைத்திட்டேன்
தேனாய் உருகி கடிதமுடன் கவி வரைந்தேன் – அட அண்ணாமல பட
மீனா(ய்) சிரித்தாள் – ஆச்சரியமுற்றேன்! அப்படியே காதலுற்றேன்!

எண்ணிரண்டு வயதாம்; அவள்
என்னை விட நிறமாம்
பெண்களுக்குள் அழகாம்; அவள்
பேச்சு மொழி சுவையாம்
கண்ணிரண்டில் ஒளியாம்; அவள்
கன்ன மதில் குழியாம்
பெண்ணவளின் ஊரோ பொம்பரிப்புத் திடலாம்
இடம் பெயர்ந்து வந்தாள் – மனதினுள்ளே பல
எண்ணத்துடன் இலவசமாய் இடமதுவும் தந்தாள் – சைக்கிளில்
கடந்து செல்லும் வேளையிலோ கண்ணடிப்பாள் – பல
பெண்களுக்குள் அவளும் தனித்துவமாய் வண்ணமிட்டாள்!
திருநகரூர்
மண்ணதிலே நானும் அவளும்
விஜய் திரிஷா ஜோடி
அட எம்மை பற்றி பேசாமல் இருக்குமா ஊர் வாயெனும் ஓட்டச் சாடி? –
வன்னி
மண்ணை விட்டு போகப் போறேன் என்றாள்
மையலுற்ற ஆசைகளை கிளைமோர் வெடி போல பறக்க வைத்தாள் - இறுதியாக

எண்ணி எண்ணித் தவிக்கும்
என்னை நீயும் புரிவதெப்போ என்று நானும் கேட்டேன்
எண்ணமது ஈடானால் என்றோ ஓர் நாள்
கன்னமதில் முத்தமிடுவேன் என்றாள் – கையசைத்துச் சென்றாள்!!

போடி சிறுக்கி போய் விட்டாயா – வாடி இருக்கும் உள்ளத்திற்கு – பனை
கோடிக்கு கீழ் இருக்கும் கள்ளும்; குறைச் சுருட்டும் கொடுத்து ஆற்ற இது என்ன
கேடி(க்) காதலா – இல்லையே!! லேடி உன் மீது என் பாடியின் நேசிப்பை விட
கோடியாய் அன்பைச் சொரிந்து நான் வைத்த காதலடி – முகம் வாடிடச் செய்தாய் என்றாலும் முழங்காவில், முறிகண்டி கேட்கும் வரை அழுதாலும் – என்னை நீ மீண்டும்
நாடியா வருவாய் – இல்லையே! ஓடியே போ! நான் ஒப்பாரி வைத்து விட்டு இந்த இத்துப் போன
பாடியைச் சுமக்கின்றேன் என தேற்றிக் கொண்டேன்!

தேதி வைக்கும் முன்பே - இன்ப(த்)
தேன் மழையில் நனைவோம்
ஆதி முதல் அந்தம் வரை
அனு தினமும் கற்போம்
பாதி உயிர் பிரிந்தாலும் - உலகில்
பாச வலி மறவோம்
மீதி உயிர் இருப்பின்- நாம்
மீண்டும் மீண்டும் பிறப்போம் என
பாடி வைத்த கவியும் பொய்யாச்சு – நான்
தேடி கொண்ட முதற் காதலும் என்னை விட்டுப் போயாச்சு!

விழியோரம் ஈரம் – மனமென்னும் வினையூக்கியில் பாரம்
அழியாத நினைவதனால் என்றும் இது காரம் –
அட நீரும் கவி கேட்டீர் என்பதனால் மனதினுள் இல்லை சோகம்!
அழியாத நினைவுகளை ஒப்புவித்தேன் – அவள்
அழகான முகத்து நினைவுடனே இப்போது நான் தப்புகின்றேன்!!!
**********************************************************************************************
அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

நாளைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை  10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

ஹலோ இணையம் நிகழ்ச்சி காலை 10.00-12.00 மணி வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு நீங்கள் வாழ்த்த்துக்களை தொலைபேசி, Skype ஊடாக நீங்களும் இணைந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஹலோ இணையம் நிகழ்ச்சியை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக நண்பகல் 12.00-03.00pm வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்கள் நாளாந்த செய்திகள், தினப் பலன்கள், இணையச் செய்திகளின் தொகுப்பு, சிறந்த வலைப் பதிவு பற்றிய விளக்கம் ஆகியவற்றையும் கேட்டு மகிழ்வதோடு நேரடியாக இணைந்து பாடல்களையும் கேட்டு மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

புரட்சி இணைய வானொலியில் இதயம் கேட்ட பாடல் நிகழ்ச்சி, காதலா காதலா நிகழ்ச்சியில் பாடல் விரும்பி கேட்க விரும்பும் நேயர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் வாயிலாகவும் உங்கள் விருப்ப பாடலின் பெயரையும், பாடலை யாருக்காக விரும்பி கேட்கிறீங்க என்பதனையும் குறிப்பிட்டால் நிகழ்ச்சியில் உங்கள் விருப்ப பாடலும் இடம் பெறும்! 

1 Comments:

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...
Best Blogger Tips

உஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆஅ.. எந்தாப்பெரிய பதிவு...

//அண்ணன் சாந்தன் குரலில் ஓர் பாட்டு!//

ஆஆஆஆ அவரின் ஏலேலங்கிளியே பாடலை என்றைக்கும் மறகேலாது, கணீரெனும் குரலில் கோயில் கச்சேரிகளில் பாடுவார்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails