அசையாச் சொத்திற்காய்
அப்பாவின் சொற் கேட்டு
ஆசை கொண்டேன் - அன்று
அப்போது ஒரு நிமிடம்
உட்கார்ந்து யோசித்தால்
பாசை மறந்த ஊரில்
பரிதவித்திருப்பேனா?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினர் பதிவு thamilnattu.com
திஹாரில் தனியறை,
நான் தின்னும் உணவிலோ
கசக்கின்ற உப்புச் சுவை
மண்ணாளும் வயதில்
மென்மையான தமிழ்(க்) கவி வடித்து
பொன்னாடை போர்த்தி
பெருமிதம் கொள்ள வேண்டிய நானோ
திண்டாடி இருக்கின்றேன்!
என்ன தான் நடக்கும் நாளைய;
ஏகாந்தப் பொழுதில் என
என் முன்னே உள்ள
கம்பியை எண்ணி காத்திருக்கின்றேன்!
நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்யப்படுகின்றது.
மானாட மயிலாட பார்த்து
எமக்கெல்லாம் மகத்தான
அரசியல் சாணக்கியம் கற்பித்த
தந்தையின் மொழியை அன்றோ
உதறித் தள்ளி நான்
விட்டிருந்தால்
இன்று கோபாலபுரத்தின்
தலைவியாய் ஆயிருப்பேன்!
என் கோலங்கள் சிதைந்தல்லவா
இன்று கொடுந்துயரில் மூழ்குகின்றேன்!
நான்கு சுவர் நடுவே
நாவறண்டு வாழ்கின்றேன்,
நாளை(15.09.2011) என்ன நடக்கும்
என நெஞ்சு பட படக்க
ஏங்குகின்றேன்!
திண்டாடும் திமுக! கொண்டாடும் முப் பெரும் விழா!
"மந்திரியும் சிறை சென்றார்,(ராசா)
மலை போல் நீண்ட
சங்கிலித் தொடராக
என் மகளும் பின் சென்றார்
என்றாலும் எம் தமிழ் உணர்வில்
ஏது குறை காண்பீரோ?
கொண்டாடி மகிழ்வோம்
முப்பெரும் விழாவை
கோலுவேற்றிப் பாடுவோம்
திமுக புகழை நாளை(15.09.2011)
மன்றாடிக் கனி மொழி
வழக்காடு மன்றத்தில் இரைஞ்சினாலும்
"சிபிஐ தான் மோந்து பார்த்துப் பிடித்திடுமா
நாம் பதுக்கியுள்ள பணத்தை?"
என்றோதும் கலைஞரின்
குரல் கேட்ட பின்னுமா
கனி மொழியே
உன் தந்தையினை
நம்பி(க்) காத்திருக்கின்றாய்?
************************************************************************************************************************************
பல்சுவைப் பதிவுகளையும் தன்னகத்தே உள்ளடக்கிப் பாரினில் நடை போடும் தமிழ் வலைப் பூக்கள் வரிசையில் சமையற் குறிப்புக்களைப் பகிர்வதற்கான தனியான வலைப்பூக்கள் எம் நாவின் சுவையினை அதிகரிக்கும் விதமாக உள்ளன. இவ் வகையில் அசத்தலான இந்திய- இலங்கை மற்றும் மேலைத் தேச- கீழைத் தேச உணவுக் குறிப்புக்களை/ ரெசிப்பிகளைத் தன் வலையில் பகிர்ந்து வரும் மகி அவர்களின் வலைப் பூவிற்குத் தான் நாம் இன்று செல்லப் போகின்றோம்.
மகி அவர்களின் வலைப் பூவான Welcome To Mahi's Space வலைப் பூவிற்குச் செல்ல:
http://mahikitchen.blogspot.com/
************************************************************************************************************************************
இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
71 Comments:
ஐயோ பாவம் ஹி ஹி,,,
ஹய் நான்தான் பர்ஸ்ட் ஜெயில்...
இது கவிதையா ஒப்பாரியா...?
மந்திரியும் சிறை சென்றார்,(ராசா)
மலை போல் நீண்ட
சங்கிலித் தொடராக
என் மகளும் பின் சென்றார்
என்றாலும் எம் தமிழ் உணர்வில்
ஏது குறை காண்பீரோ?
கொண்டாடி மகிழ்வோம்
முப்பெரும் விழாவை
கோலுவேற்றிப் பாடுவோம்
திமுக புகழை நாளை(15.09.2011)//
கொலுவேற்றி பாடுவோமா..?? பாலூற்றி பாடுவோமா..? சரியா சொல்லும்யா...
வணக்கம் நிரூபன் சார்! இனிய புதன்கிழமை மாலை வணக்கம்! நலமா இருக்கீங்களா? யாழ்ப்பாணம் எப்படி இருக்கிறது? கிரீஸ் பூதங்கள் எல்லாம் ஓடிவிட்டனவா?
அப்புறம் கவிதை நல்லா இருந்திச்சு! உலகம் உருண்டை என்பதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்ல முடியாது!
நன்றி சார்!
நிரூ என்ன சொல்லறது திக்குது
சு.. சு..சு,, சூப்பர்
உங்க கவிதை தித்திக்குதே!!??
நல்லாவே இருக்கு அண்ணா உங்க கவி ; கவித
என்ன செய்ய அசை படனும் மத்தவங்க சொத்து மேல அசை கூடாது
கனிமொழியின் நிலை பற்றி தமிழ்மொழியாம் செம்மொழியில் விளாசல் அருமை
//அசையாச் சொத்திற்காய்
அப்பாவின் சொற் கேட்டு
ஆசை கொண்டேன் - அன்று
அப்போது ஒரு நிமிடம்
உட்கார்ந்து யோசித்தால்
பாசை மறந்த ஊரில்
பரிதவித்திருப்பேனா?//
இங்கு அசையா சொத்து என்று குறிப்பிட்டமைக்கு ஏதேனும் காரணம் உண்டா நிரூ..?
//ஏகாந்தப் பொழுதில் என
என் முன்னே உள்ள
கம்பியை எண்ணி காத்திருக்கின்றேன்!//
வெளங்கும்.. ஜெயில்ல இருந்தா வேற வேலையே பாக்க மாட்டாங்கன்னு நினைப்பா..? அது என்னயா ஆ.. ஊ.. னா ஆளாளுக்கு கம்பி எண்ணுறான் கம்பி எண்ணுறான்னு சொல்லுறீங்க
//இன்று கோபாலபுரத்தின்
தலைவியாய் ஆயிருப்பேன்!//
இது என்ன புது கதை.? வெள்ளை கொடிக்கு திரும்பவும் வேலையா?
//கொண்டாடி மகிழ்வோம்
முப்பெரும் விழாவை
கோலுவேற்றிப் பாடுவோம்
திமுக புகழை நாளை//
கட்சிப்பணியோடு களப்பணியை ஒப்புமைபடுத்தி பார்க்காதவர் கலிஞர்..
//"சிபிஐ தான் மோந்து பார்த்துப் பிடித்திடுமா
நாம் பதுக்கியுள்ள பணத்தை?"//
இப்படி கலிஞர் சொன்னாரா.? புது நியூஸா இருக்கே..!
//கனி மொழியே
உன் தந்தையினை
நம்பி(க்) காத்திருக்கின்றாய்?//
பின்ன அங்கிருந்து கம்பியவா உடைச்சிட்டு வர முடியும்..?
கனிமொழியை மனதில் வைத்து எழுதியிருக்கிறீர்கள்... ம்ம் ஓகே..! #நோ டபுள் மீனிங்
நமக்கு அலர்ஜி பாஸ்... எஸ்ஸாயிக்கிறேன்
நல்லா அனுபவிக்கட்டும். ஆனா இந்த உண்ணா ஹஜாரே போராட்டம் இந்த விஷயத்தை அமுக்கி விட்டது.
விடுங்க மாப்பிள அவரு தாங்க இன்னும் அரசியல்ல இருக்கோம்ன்னு காட்டுறதுக்கு விழா எடுக்கிறார்..!!
ஆனா உங்கட ஒப்பாரி நல்லாதான்யா இருக்கு..!!??
அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்..
Nalla erukuthu.....
எது எழுதினாலும் செம ஹிட் ஆகிறது உங்க வெற்றியின் ரகசியம் என்னவோ
வழக்கமா எல்லாத்துக்கும் கலைஞர் தான் கவிதை எழுதுவாரு!
மகிக்கு வாழ்த்துக்கள்.
அப்படி போடு நைனா
shanmugavel said...
வழக்கமா எல்லாத்துக்கும் கலைஞர் தான் கவிதை எழுதுவாரு!//
ha ha ha ha ha ha ha i like it this ha ha ha ha ha...
கவிதாயினியின் ஒப்பாரி அருமை!
நல்ல நல்ல வலைப்பூக்களை அறிமுகம் செய்கிறீர்கள் சிறப்பு நன்றி
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கனிமொழி, தி. மு.க.ன்னு நமுத்துப் போன பட்டாசையே வெடிச்சுட்டிருப்பீங்க. பரமக்குடியில் என்ன நடந்துச்ச்,என்ன நடந்துட்டிருக்கு,இனி என்ன நடக்கப்போகுது அப்பிடீன்னு ஒரு கவிதய விடுங்க பார்க்கலாம். ஓஓஹோஹோ.... இந்த பரமக்குடி மேட்டர திசை திருப்ப கனிமொழி கவிதை. அப்படித்தானுங்க அண்ணாச்சி. தெக்கத்தி மாவட்டங்க எல்லாம் தகிச்சிட்டு இருக்கு.கவித போடறாங்களாம் கவித.
//மானாட மயிலாட பார்த்து
எமக்கெல்லாம் மகத்தான
அரசியல் சாணக்கியம் கற்பித்த
தந்தையின் மொழியை அன்றோ
உதறித் தள்ளி நான்
விட்டிருந்தால்
இன்று கோபாலபுரத்தின்
தலைவியாய் ஆயிருப்பேன்!//
கனிமொழி படிக்க வேண்டிய கவிதை நண்பரே..
கருத்தான கவிதை
நட்புடன்
சம்பத்குமார்
அரசியல் தாத்தாவுக்கு மகளை நினைவு இருக்கிறதோ என்னவோ...
விட்டால் முரசொலியில் தமிழ் பெண்களே நீங்கள் அனைவரும் முப்பெரும் தேவியர் ...உங்களுக்கு தான் இந்த விழா என்பார்...
கனியும் ஒன்னும் தெரியாத பாப்பா அல்லவே...
கனிமொழிக்கு ஒரு நகல அனுப்பி வையுங்கள் சகோதரம்...
((மானாட மயிலாட))இப்போ காய் ஆட கனி மொழி ஆட
அடடா... திரும்பிப் பார்ப்பதற்குள்... அரசியல் கவிதையோ?... நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).
கவிஞர் கனிமொழிக்கே கவிதையா?
அப்பாவுக்கே தெரியாமல் விளையாடியதால் தானே இந்த நிலைமை?
முப்பெரும்விழா கொண்டாட இன்னும் நாள் இருக்கு..அடுத்து அண்ணன் அழகிரியும் உள்ளே போனப்புறம் பார்த்துக்கலாம்..
கட்டு கட்டா பணத்தை எண்ணியவர்கள் இப்ப கம்பி எண்ணுகின்றார்கள். . .விடுங்க பாஸ் அரசியல்ல இதேல்லாம் சாதாரணம். . .
18வது ஓட்டு நானே..........!
அறம் பாடியே கொல்ல வேண்டும்,ஒட்டு மொத்த(க்) குடும்பத்தையும்!
Blogger செங்கோவி said...
18வது ஓட்டு நானே..........!///அட இவருக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சா?ஓட்டுப் போட்டிருக்காரு?????ஹி!ஹி!ஹி! ஹி!ஹி!
பத்தொன்பாவது வோட்டு எனது பாஸ் எதாச்சும் பாத்து போட்டு குடுங்க. இல்லை நம்ம கடை பக்கமாவது வந்து போங்க.
nalla kavithai.hi.hi.santhilal18852@gmail.com
Super ;;;;;
ha ha ha
////திஹாரில் தனியறை,
நான் தின்னும் உணவிலோ
கசக்கின்ற உப்புச் சுவை/// கண்ணீரோடு இருக்கிறா என்பதை எடுத்துக்காட்டும் வரிகள் என்று நினைக்கிறேன் ...
கொண்டாடி மகிழ்வோம்
முப்பெரும் விழாவை
கோலுவேற்றிப் பாடுவோம்//விழா எடுக்கிறது எல்லாம் கலைஞருக்கு புதுசா என்ன ))
மகிக்கு வாழ்த்துக்கள் ...
பாவம் இப்போதைக்கு வெளிய விடமாட்டாங்க போல.....
கவிதையில் அடுத்த தலைவியாக வரவேண்டிய கவிதாயினி கள்ளப்பணத்திற்கு கண்டவருடன் கூட்டுச் சேர்ந்து பெற்ற மகனை பிரிந்திருப்பது ஒரு அன்னையாக கொடுமையே!
@தம்பி கூர்மதியன்
இங்கு அசையா சொத்து என்று குறிப்பிட்டமைக்கு ஏதேனும் காரணம் உண்டா நிரூ..?//
ஆம் நண்பா,,
யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கும் சொத்து,
சிறிது காலத்திற்கு அசையாது தானே இருக்கும்,
அதனால் தான் அசையாச் சொத்து என்று சொன்னேன்.
கவிதை சூப்பர் பாஸ்.
கனிமொழியின் நிலை பரிதாபம் என்றாலும் உப்பு தின்றவன் தண்ணி குடித்துத்தானே ஆகணும் ஆதலால் அனுபவிக்கட்டுமே.....
கனிமொழியின் நிலை அவர் கவிதை ஒன்றையே நினைவு படுத்துகின்றது
அப்பா சொன்னார் என தலை சீவினேன் அப்பா சொன்னார் என பள்ளி சென்றேன் அப்பா சொன்னார் என் சில நண்பர்களை தவிர்த்தேன்
அப்பா சொன்னார் என.... இப்புடி போகும் அந்த கவிதை இதில் அப்பா சொன்னார் என என்று செய்த தவறையும் கனிமொழி இனி சேர்த்துகொள்ளலாம்
அறிமுகமான பதிவருக்கு என் வாழ்த்துக்கள்
கல்விக்காக பல லகரங்களை வாங்கிக்கொண்டு அழ வைத்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது...தேவையான வாழ்கையை அவர்களே தீர்மானித்தார்கள்....பகிர்வுக்கு நன்றி நண்பா!
அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள்
இந்த தாத்தா குடும்பத்தை பத்தி இன்னுமா பதிவுலகம் எழுதுது...........ஆடிய ஆட்டம் என்ன பாடியா பாடல் என்ன?தாத்தா.....அவரது குடும்பமு....ஹி.ஹி.ஹி.ஹி......சிரிப்புத்தான் எனக்கு வருது பாஸ்..
அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள் .கலைஞர் எதிரி வாழ்க
ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.
என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே...குறிப்பாக..செங்கோவி.நிரூபன்.சி.பி.செந்தில்குமார்.பன்னிக்குட்டி ராம்சாமி.காட்டான்.தமிழ்வாசி போன்றவங்கள்..வந்து உங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்...இவங்க பெயர் மட்டும் தெரிஞ்சதால சொன்னன்...எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க....
கனிமொழிக்கே கவிதையா ?
என்று என் வலையில்
உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?
சுருட்டிய பணம் போதும் தானே இனி ஒரு முறை ஆட்சி வரணுமா?
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ.......
த்சோ..த்சோ..கவிதாயினியின் கதியை உங்கல் கவிதை வரிகளில் பார்க்கையில் கஷ்டமாக உள்ளது
voted
நடப்பு விசயங்களை கவிதை வடிவில்
அருமை
அளவுக்கு அதிகமாக ஆடினால் அனுபவிக்க தான் வேணும் விடுங்க பாஸ் இவுங்களுக்கு பாவமே பார்க்க கூடாது.
அப்புறம் தமிழ்மணத்துல இப்பொழுது 28 உள்ளது. ஆதலால் ஓட்டு போடாமல் செல்கிறேன். நண்பன் சொல்ல மதிப்பவன் தானே உண்மையான நண்பன் ஹீ ஹீ கிரேட் எஸ்கேப்
தேன்மொழிக் கவிதை
அறிமுகப் பதிவருக்கு
வாழ்த்துக்கள்...
மகிக்கு வாழ்த்து
தலைப்பும், கவிதை (ஒப்பாரி-மனோ)அருமை..
கனிமொழியை மனதில் வைத்து எழுதியிருக்கிறீர்கள்.ம்..ம்..சூப்பர்
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் Day 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
அறிமுகத்திற்கு நன்றிங்க நிரூபன்! உங்க பதிவை நிதானமாப் படிக்க அடுத்த வாரத்தில்தான் நேரம் கிடைக்கும்,சீக்கிரம் வந்துடறேன்!
ரொம்ப சந்தோஷம் + நன்றி! :)
//மன்றாடிக் கனி மொழி
வழக்காடு மன்றத்தில் இரைஞ்சினாலும்
"சிபிஐ தான் மோந்து பார்த்துப் பிடித்திடுமா
நாம் பதுக்கியுள்ள பணத்தை?"
என்றோதும் கலைஞரின்
குரல் கேட்ட பின்னுமா
கனி மொழியே
உன் தந்தையினை
நம்பி(க்) காத்திருக்கின்றாய்?//
ஹா ஹா.. யாரச்சும் அவங்களுக்கு அனுப்பி வைங்கப்பா இந்த கவிதையை. நிரு, எதுக்கும் ஜாக்கிரதை, வீட்டுக்கு ஆட்டோ வரப்போவுது..
Post a Comment