பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும்.
தேவையான பொருட்கள்:
*எள்ளு- 150-200g எள்ளு (Sesame Seeds)
*ஒரு முழுத் தேங்காயின் துருவிய தேங்காய்ப் பூ. (Coconut Powder)
*வெல்லக் கட்டி & சர்க்கரை: (Jaggery Cube)
*சிறிதளவு சர்க்கரை (Sugar)
இனி எள்ளு உருண்டை எப்படிச் செய்வது- செய்முறை!
*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.
*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).
*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.
*இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார்.
*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.
*போத்தலினுள் இந்த எள்ளுருண்டையினைப் பொதி செய்தால் இரண்டு வாரங்கள் வரை பழுதாகாது வைத்திருந்து நீங்கள் உண்டு மகிழலாம்.
இது தான் எள்ளு உருண்டை செய்வதற்கான ரெசிப்பி. ஸோ உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் நீங்கள் கேட்கலாம்.
முக்கிய குறிப்பு: எள்ளு உருண்டையில் தேங்காய்ப்பூ, வெல்லக் கட்டி முதலிய இனிப்பு - கொழுப்புத் தன்மை வாய்ந்த பதார்த்தங்கள் சேர்க்கப்படுவதால் நீரிழிவு நோயுள்ளோர் தவிர்ப்பது நல்லது.
*****************************************************************************************************************************************************************
பதிவுலகப் பெருங் கடலில் ஜோதிடம் தொடர்பான பதிவுகளையும், ஆன்மீக ஈடேற்றம் தரும் ஆகமப் பதிவுகளையும் பகிர்ந்து வருபவர் தான் ஜோதிடர்- பதிவர் ஆர்.கே.சதீஷ்குமார் அவர்கள். தொடர்ச்சியாகப் பல தடவைகள் அவரது இணையத் தளம் அடையாளந் தெரியாதோரால்(அனானிகளால்) ஹேக் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்றுத் தனது பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றார்.
திகிலூட்டும் பேய்கள் பற்றிய ஐதீகங்களிற்கான விளக்கங்கள், ஜோதிட- வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள் எனப் பல தரப்பட்ட விடயங்களோடு, அரசியல் செய்திகளையும் தன் வலைப் பதிவினூடாகப் பகிர்ந்து வருகின்றார் ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார் அவர்கள்.
ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களின் நல்ல நேரம் வலைப் பதிவிற்குச் செல்ல:
***************************************************************************************************************************************************************
இன்ட்லியில் ஓட்டளிக்க:
இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
70 Comments:
முதல் ஆள்
டாக்டர் நிரூபன் வாழ்க!!!!!!!!!!!
வணக்கம் டாக்குத்தர் ஐயா
//இது தான் எள்ளு உருண்டை செய்வதற்கான ரெசிப்பி. ஸோ உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் நீங்கள் கேட்கலாம்//
செய்யிறது ஒக்கே.... சாப்பிடுறது எப்பிடின்னு போடவே இல்ல
நல்லதொரு சமையல் குறிப்பு
மருத்துவக்குறிப்புடன் வந்து எங்கள் கிராமத்து நினைவுகளை எல்லுருண்டை மீட்டிப்பாக்க வைத்துவிட்டது!
டெம்ளேட் வடிவமைப்பு நாற்றினை மிகவும் அழகாக்கி இருக்கின்றது!
அயுல்வேத வைத்தியக்கலாநிதி நிரூபனின் மற்றுமொரு மருத்துவக்குறிப்பு!
நல்லநேரம் சதீஸ் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!
சார் நீங்க ஒரு இஞ்சினியர்ன்னு சொன்னாங்களே...
பாஸ் என்னாச்சு ஓட்டுப்பட்டைக்கு தனிமரம் தவிக்கின்றது! இண்ட்லி கோவிந்தா?
ரசிக்க ருசிக்க...
எல்லா கலையிலும் வல்லவர் போல...
சதீஷ்குமார் மீண்டும் திரும்பியதற்க்கு வாழ்த்துக்கள்...
மச்சி இதனுடன் உழுந்து (மா) சேர்த்தால் இதன் பலன் அதிகம். நம்ம இடங்களில் அப்படிச் செய்வதை புண்ணாக்கு என அழைப்பர்.
உழுந்தானது எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணையால் உண்டாகும் தீவிர வயிற்றுப் போக்கு என்பவற்றை கட்டுப்படுத்தும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
அப்பாடி இன்னிக்கு தான் 10 க்குள்ள ஒழுங்கா வாக்கிட போறன்..
நன்றி மருத்துவர் ஐயா
ok ok
ஐ எள்ளுருண்டை எனக்கு ரொம்ப பிடிச்சது. எனக்கு வேணும் இப்போ.
ஐயா வணக்கமுங்கோ நான் காட்டான் வந்திருக்கேன்யா.. ரெண்டு நாளா என்ர சிவலயன் புண்ணாக்கு எடுக்கிறானில்ல... டொக்குத்தர் நிரூபன் இங்கின இருந்தா அனுப்பிவிடுங்கையா...!!!!!!?????))
எள்ளுருண்டை...எனக்குப் பிடித்த பண்டம். எங்கள் ஒற்றில் திதிகளுக்கு செய்வார்கள்.
thamil manam 9
முன்பெல்லாம் அடிக்கடி வீட்டில் செய்து
சாப்பிட்ட பதார்த்தம் ,இப்பொழுது நினைவில் மட்டும்.
அவசிய மருத்துவ குறிப்பு நன்றி நண்பரே
சகல கலா வல்லவருக்கு வாழ்த்துக்கள்!இப்படி ஒரு "ஆம்பிளை"க்கா கலியாணம் நடக்காது என்று சொன்னார்கள்?
வைரை சதிஷ் said...
நன்றி மருத்துவர் ஐயா!////இப்படிச் சொல்லி "அவரைப்" போல்,இவரை சிறுமைப்படுத்தாதீர்கள்,பிளீஸ்!!!!
Real Santhanam Fanz said...
சார் நீங்க ஒரு இஞ்சினியர்ன்னு சொன்னாங்களே.///ஆமாம்,இஞ்சினியர் தான்,உடம்பு இஞ்சினியர்!!!!
பயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .
காட்டான் said...
ஐயா,வணக்கமுங்கோ நான் காட்டான் வந்திருக்கேன்யா.. ரெண்டு நாளா என்ர சிவலயன் புண்ணாக்கு எடுக்கிறானில்ல...டொக்குத்தர் நிரூபன் இங்கின இருந்தா அனுப்பிவிடுங்கையா...!!!!!!?????))////அவர் "மாடு"களுக்கு வைத்தியம் பாக்க மாட்டார்.உங்களுக்கு..........................................?!புண்ணாக்கு எடுக்காட்டி,தவிடு காட்டுங்கோ!அதுக்கும் மசியாட்டி,வெட்டி பங்காக்கிப் போடுங்கோ!
மதுரன் said...செய்யிறது ஒக்கே.... சாப்பிடுறது எப்பிடின்னு போடவே இல்ல.////எள்ளுருண்டை செய்து விட்டு நிரூபனை தொடர்பு கொள்ளவும்!முடியவில்லையெனில்,என்னுடன் தொடர்பு கொள்ளவும்!எப்படிச் சாப்பிடுவது என்ற செய்முறை விளக்கம் கொடுப்போம்.ஹி!ஹி!ஹி! ஹி!
மருத்துவர் !!?? நிரூ..
வாழ்த்துக்கள்
எள்ளை பற்றி புதிய செய்திகள்
எள்ளுருண்டை டாக்டர் ஆனார் நிரூபன்...!!!
எள்ளுருண்டை கொழுப்பை குறைக்க கூடியது...!!!
அருமையான மருத்துவ குறிப்பு மக்கா.....!!
ஒரு சமையல் குறிப்பையும், மருத்துவக் குறிப்பையும் அழகாக மிக்ஸ் பண்ணி தந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!
பதிவர், ஆர்.கே. சதீஸ்குமார் சாருக்கு இனிய வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சகோ பயனுள்ள பகிர்வுக்கு ...........
பாஸ் நீங்க ஒரு வில்லேஜூ விஞ்ஞானி பாஸ் )))
இதை ஆண்களும் சாப்பிலாமா பாஸ் ))
@சி.பி.செந்தில்குமார்
//டாக்டர் நிரூபன் வாழ்க!!!!!!!!!!!//
ஹஹஹா, நானும் வழிமொழிகிறேன் !
// "எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது" //
ஆஹா, அண்ணனுக்கு சமைக்கவும் தெரியுமோ ?
தங்கச்சி ரொம்ப நாள் அஹ சமையல் குறிப்பு போடலேன்னு தன் அண்ணா போட்டுட்டரோ >
ஹஹஹா ..
ம.தி.சுதா said...
// மச்சி இதனுடன் உழுந்து (மா) சேர்த்தால் இதன் பலன் அதிகம். நம்ம இடங்களில் அப்படிச் செய்வதை புண்ணாக்கு என அழைப்பர்.
உழுந்தானது எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணையால் உண்டாகும் தீவிர வயிற்றுப் போக்கு என்பவற்றை கட்டுப்படுத்தும்...//
உண்மை !!
அற்புதமான பதிவு ! அனைத்து பிரிவுகளிலும் கலக்குறீங்க அண்ணா !!
சூப்பர் !!!
அருமையான மருத்துவ குறிப்பு..
கலக்குறிங்க...மருத்துவ குணமும் அதே மாதிரி சமையல் குறிப்பாகவும் கொடுத்து அசத்திட்டிங்க...ரொம்ப அருமை...வாழ்த்துகள்..
சென்ற பதிவுகளில் என்னை உங்களுடைய ப்ளாகில் அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி....
பிரபல பதிவர் நிரூபன் டாக்டரான கதை !காண வாருங்கள்!
எனக்கு எள்ளுரண்டை பிடிக்கும் கடைகளில் செல்லும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவேன்!
என்ன மச்சி திடீர்னு மருத்துவக்குறிப்பு
தம்பி நிரூபன் வணக்கமடா மோனே, எப்படி இருக்கிறாய்? உதென்ன பொடிச்சியளின்ர பிரச்சனையைப் பற்றியெல்லாம் பதிவு போட்டிருக்கிறாய்?
ஏன், கெதீல கலியாணம் கிலியாணம் கட்டப் போறீயே!
அந்தக்காலத்தில, நானும் கனகம்மாவும் கலியாணம் கட்டி, 16 புள்ளயள் பெத்தம்.ஒருத்தருக்கும் ஒரு வியாதியும் வரேலை!
இந்தக் கால பெண்டுகளுக்கு பவிசு கூடிப்போச்சு கண்டியோ, ஒழுங்கா குனிஞ்சு நிமிந்து வேலை செய்யுறேலை.
அதால தான் உந்த கோதாரி வருத்தமெல்லாம் வருது. என்ர கனகம்ம 16 புள்ளையள் பெத்துப்போட்டும், நல்ல திடகாத்திரமா, குமர் பெட்டையள் மாதிரி இருந்தவள்.
அந்தக் காலத்தில உந்த வெள்ளிடி விழுந்த வருத்தம் ஒண்டும் வாறேலை. இப்பதான் ஆயிரத்தி எட்டு வருத்தங்கள்.
இருந்தாலும் தம்பி நல்ல பதிவு போட்டிருக்கிறாய்.
நேத்து கல்யாணம் ஆகலைனு பீல் பன்னி பதிவு..போட்டீங்க..இன்று..சமையல் குறிப்பு....................அப்ப அடுத்தது..........கெட்டிமேளமா?(அப்பா...பாஸ்சை கோத்துவிட்டாச்சு)
பாஸ் ஒரு வேலையா இருக்கன் இரவுக்கு வாரன் ஓட்டு போட
ப்ளாக் பகிற்வுக்கு நன்றி.மருத்துவ குறிப்பு பயனுள்ளது..
என்ன நிருபா என்ன நடந்த
முதல் பதிவு வாசிச்சு கணக்கா கருத்து போடணும் என்டுரத்துக்குல அடுத்த பதிவு
ஆறுதல போன் போட்டு கதைக்கிறன்
அண்ணே நாலு உறுண்டை பார்சல்
Yoga.s.FR said...
காட்டான் said...
ஐயா,வணக்கமுங்கோ நான் காட்டான் வந்திருக்கேன்யா.. ரெண்டு நாளா என்ர சிவலயன் புண்ணாக்கு எடுக்கிறானில்ல...டொக்குத்தர் நிரூபன் இங்கின இருந்தா அனுப்பிவிடுங்கையா...!!!!!!?????))////அவர் "மாடு"களுக்கு வைத்தியம் பாக்க மாட்டார்.உங்களுக்கு..........................................?!புண்ணாக்கு எடுக்காட்டி,தவிடு காட்டுங்கோ!அதுக்கும் மசியாட்டி,வெட்டி பங்காக்கிப் போடுங்கோ!
இப்பிடி ஆபாசமா பின்னூட்டமிடுபவர்களை ஆதரிக்கும் நிரூபனை கண்டிக்கிறேன்...!!!!?? இவர் ஏன் என்ர சிவலயனை "மாடு"என்கிறார் அவருக்கு ஒரு பெயர் இருக்கேய்யா..!!? ஐரோப்பாவில் அதிக காலம் சுற்றியதால் அவர்களின் உணவுப்பழக்கங்களை மற்றவர்களிடம் இவர் தினிக்கிறார் இது ஒரு கலாச்சார சீர்கேடே இதை கண்டிக்க கலாச்சார காவலர்கள் யாருமே இல்லையா..!!? ஐயகோ என்ர தமிழினமே என்ர உடன் பிறப்பே ஓடி வாருங்கள்.. !!??
மருத்துவம் தொடர்பாக வெள்ளைப்படுதல் வேறு விஷயம்.இதில் வெறும் கிராமப்புற நம்பிக்கைகள் தரப்பட்டுள்ளது.
மாப்ளே! எப்போ டாக்டர் ஆனிங்க?
இனிக்குது,மணக்குது எள்ளுருண்டை (பதிவு)
பயனுள்ள மருத்துவ தகவலை பகிர்தமைக்கு நன்றிகள் டாக்குத்தர் .
உண்மையில் எல்லுக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது... நல்லெண்ணெய் ஆரோக்கியம் என்று சொல்வதிலிருந்தே இதன் மகத்துவம் அறியலாம்...ம்ம்ம்ம் பகிர்வுக்கு நன்றி நண்பரே
காட்டான் said...இப்பிடி ஆபாசமா பின்னூட்டமிடுபவர்களை ஆதரிக்கும் நிரூபனை கண்டிக்கிறேன்...!!!!?? இவர் ஏன் என்ர சிவலயனை "மாடு"என்கிறார் அவருக்கு ஒரு பெயர் இருக்கேய்யா..!!? ஐரோப்பாவில் அதிக காலம் சுற்றியதால் அவர்களின் உணவுப்பழக்கங்களை மற்றவர்களிடம் இவர் தினிக்கிறார் இது ஒரு கலாச்சார சீர்கேடே இதை கண்டிக்க கலாச்சார காவலர்கள் யாருமே இல்லையா..!!? ஐயகோ என்ர தமிழினமே என்ர உடன் பிறப்பே ஓடி வாருங்கள்.. !!??////உடன் பிறப்புகளின்ரை லட்சணம் தான் தெரிஞ்சு போச்சே?பிறகும் ஏன் கூப்பாடு போடுறியள்?சரி மரியாதையா சொல்லுறன்:மிஸ்டர்.சிவலயன் புண்ணாக்கு எடுக்காட்டி,உப்பிடியே (porte.de.clignancourt)"கிளிஞ்சான் கோட்" பக்கம் கொண்டு போனியளெண்டா,பேரீச்சம் பழத்துக்கு குடுக்கலாம்!(பண்ட மாற்று மாதிரி!)
என்னய்யா இது திடீர்னு இப்படி ஆரம்பிச்சுட்டீங்க?
//தசைகள் இறுக்கமாக //
சாப்பிடலாமோ?
//தசைகள் இறுக்கமாக //
சாப்பிடலாமோ?
//எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது//
யோவ், இதைச் சொல்லத்தான் இப்படி பில்டப்பா..இது தான் எங்க பாட்டியே செய்யுமே.
இதைத் தான் டாகுடரு நிரூ-ன்னு காட்டான் மாம்ஸ் சொன்னாரா..கரெக்ட் தான்.
//எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது//////அது வந்து என்னன்னா,வெளி நாட்டில கொஞ்சம் பொண்ணுங்க இருக்காங்க!அவங்களுக்காக இத எழுதியிருக்காரு!அவங்க,ஊருல "தூசி" படாம வளந்தவங்க!இப்புடி ஒண்ணு இருக்கிறதே அவங்களுக்குத் தெரியாது!முருக்கங் காயே தெரியாதுன்னா பாத்துக்குங்க!வாட் இஸ் திஸ் அப்புடீன்னு கடயில கேக்குறாங்கன்னா.............................?!
No No No...Take diversion....
தொப்பி அளவானவங்க போட்டுக்குங்க!ஆணாதிக்க வாதின்னு கூட வேணும்னா சொல்லுங்க!நான் நேரில பாத்தது,கேட்டது!அதனால தான் சொன்னேன்.
இளைய தளபதி “செவ்(Chef) நிரூபனுக்கு” வாழ்த்துக்கள்...
அதுசரி உண்மையைச் சொல்லோணும்.. உது ஆர் செய்த எள்ளுருண்டை?.
இத்தப் பார்றா,இங்க வந்து "உண்மை"யெல்லாம் கேக்கிறாங்க!சிஸ்டர்,எல்லாம் கூகிளோட மகிமை தான்!
@shanmugavel
மருத்துவம் தொடர்பாக வெள்ளைப்படுதல் வேறு விஷயம்.இதில் வெறும் கிராமப்புற நம்பிக்கைகள் தரப்பட்டுள்ளது//
அண்ணாச்சி,
மருத்துவம் தொடர்பாக வெள்ளைவிடுதல் வேறு விடயம் என்றாலும், வெள்ளைப் போக்கு உள்ள பெண்களிற்கு எள்ளில் உள்ள மருத்துவ குணம் தீர்வாக அமையாதா?
நல்ல பயனுள்ள பதிவு....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment