Monday, September 5, 2011

ஈழ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கிறிஸ் மனிதர்கள்- துலங்கும் மர்மங்கள்!

ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றினை உற்று நோக்கினால், காலதி காலமாக அராஜகத்திற்கும், இனவாதக் கொள்கைக்கும் பெயர் போனவர்களாக விளங்கும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீது தமது முழுமையான பலத்தினைப் பிரயோகித்து அவர்களை அடக்கி, அம் மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான அரச படையினரின் தாக்குதல்கள் தவிர்ந்த; இராணுவக் கட்டுப்பாட்டினுள் வாழும் மக்கள் மீதான இனவாத தாக்குதல் நடவடிக்கைகளுக்குச் சான்றாக இதுவரை காலமும் விளங்கிய வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் கோருதல், கொலை செய்தல் முதலிய செயற்பாடுகளிலிருந்தும் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது தான் இந்தக் கிறிஸ் மனிதர்கள் விவகாரம்.
வெள்ளைவான் கடத்தல்கள் பற்றி மேலும் அறிய விரும்புவோருக்காக என் பழைய பதிவின் லிங்கினை இங்கே இணைத்துள்ளேன்.
http://www.thamilnattu.com/2011/06/blog-post_13.html
நிரூபனின் நாற்று வலை
2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வேரோடு அழித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் இறமை உள்ள அரசாங்கமானது, மீண்டும் மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் நோக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களைத் தம் காலடியின் கீழ் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற தொடர்ச்சியான கொள்கையின் அடிப்படையிலும் தற்போது அரங்கேற்றி வருகின்ற நாடகம் தான் இந்த கிறிஸ் மனிதர்கள் விவகாரம். இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட புலிப் போராளிகள் சிலரைக் கைப் பொம்மைகளாக்கி, அவர்களை வலுக்கட்ட்டாயப்படுத்தி தமது பொது மக்களை அச்சமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு செலுத்தும் நோக்கினை நிறைவேற்றலாம் என கனவு கண்டார்கள் அரச தரப்பினர்.நாற்று

 முன்னாள் புலிப் போராளிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுத்துக் கொலை, கொள்ளை, கப்பம் கோருதல் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட வைத்து குடாநாட்டில் மீண்டும் புலிகள் இருக்கிறார்கள்- ஆதலால் மக்கள் மீதான எமது சோதனை நடவடிக்கைகள அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியிலும், இவ் வருட ஆரம்ப காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் படு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து மேற்படி சம்பவங்களோடு தொடர்புடைய சீருடைத் தரப்பினரும், யாழில் இயங்கி வரும் அரசோடு சேர்ந்தியங்கும் ஓர் கட்சியும் பாரியளவில் மூக்குடைபட்டிருந்தார்கள்.
நிரூபனின் நாற்று வலை
தற்போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கான போராட்டிதினைத் தொடரக் கூடிய புலிகள் அமைப்பானது இல்லாத காரணத்தினால் மஹிந்த ராஜபக்சே அவர்களால் காலாவதியான நிலையில் நீக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தினை மீண்டும் நடை முறைக்குக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கிலும், தமிழ் மக்களில் யாராவது இன்னோர் விடுதலைப் போராட்டம் பற்றிச் சிந்திக்க கூடாது எனும் நோக்கிலும் தான் இந்தக் கிறிஸ் மனிதர்கள் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.  இலங்கை அரசாங்கத்தின் ஆட்சிக்குத் தீங்கு விளைப்போரை, ஜனநாயக நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள், பேரணி மூலம் குழப்ப முயல்வோரை, புரட்சிகரமான விடுதலைச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை, அரசதரப்பிற்கெதிராக எழுதும் ஊடகவியலாளர்களை அடக்கி கைது செய்த்து கால வரையற்ற ஜெயில் தண்டனை வழங்க இந்த அவசர காலச் சட்டம் நடை முறையில் உள்ளது.
நிரூபனின் நாற்று வலை
அவசர காலச் சட்டமும் பயங்கரவாத தடைச் சட்டமும் வெவ்வேறாகப் பெயரளவில் இருந்தாலும் இரண்டுமே ஒரே நோக்கத்தில் தமிழ் மக்களின் குரல் வளைகளை நெரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை எனலாம். வெளி நாட்டு இராஜதந்திர அமைப்புக்களுக்கு இலங்கையில் மீண்டும் பெயர் குறிப்பிடாத வன்முறையாளர்கள் கிறிஸ் மனிதர்கள் என்ற பெயரில் உலவுகிறார்கள் எனும் நோக்கில் ஓர் செய்தியினை வெளியிட்டு மக்கள் மீதான அரச படைகளின் கண்காணிப்பினை இறுக்கி வைத்திருப்பதற்கும் இந்த கிறிஸ் மனிதன் விவகாரமே உதவியாக இருக்கப் போகின்றது. அவசரகாலச் சட்டப் பிரேரணை பற்றிய விவாதம் இலங்கைப் பாராளுமன்றத்த்ல் கொண்டு வரப்பட்ட சமயம் பதுளையில் தொடங்கிய கிறிஸ் மனிதன் விவகாரம் தற்போது யாழ்ப்பாணம் வரை வந்து நிற்கிறது.
நிரூபனின் நாற்று வலை
கிறிஸ் மனிதர்கள் எனப்படுவோர், உடலில் கிறிஸ் பூசித் தமது காரியங்களை நிறைவேற்றுவோர் அல்ல. ஆனால் மக்களிடம் பிடிபடமால் சிரூடைத் தரப்பினரின் உதவியோடு தப்பிச் செல்வதால் இவர்களுக்கான பெயர் கிறிஸ் மனிதன் என்பது நன்றாகவே பொருந்திக் கொள்கிறது. இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பிரதேசம், கிழக்கு மாகாணம், மன்னார், வன்னியின் வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், முதலிய பகுதிகளில் தான் இந்த கிறிஸ் மனிதன் நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாளடைவில் இது கொழும்பில் வாழும் தமிழர்களின் இல்லங்களிற்குப் பரவினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
நிரூபனின் நாற்று வலை
கிறிஸ் மனிதர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளின் மீது கத்தியால் கீறுதல், அவர்களின் வீடுகளுக்கு நடு இராத்திரி வேளையில் சென்று வீட்டின் வெளிப்புறத்தைக் கூட்டி அழகு பார்த்தல், பூங்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர்ப் பைப்பினைத் திறந்து நீரினை விரயமாக ஓட விட்டு விட்டு, எஸ்கேப் ஆகி பொது மக்கள் மத்தியில் மர்ம மனிதர்கள் இருப்பது போன்ற விவகாரத்தினை உருவாக்குதல், தனியாகப் பெண்கள் உள்ள வீடுகளிற்குச் சென்று அவர்களின் மார்பகங்களைக் கத்தியால் குத்துதல், அங்க சேஷ்டை செய்து விட்டு அகப்படாமல் ஓடுதல் முதலிய செயற்பாடுகளில் தான் ஈடுபட்டார்கள்.
பெண்களின் மார்பு இரத்தம் மூலம் மஹிந்தரின் நீண்ட ஆயுள் வேண்டி யாகம் நடாத்துதல்!
நிரூபனின் நாற்று வலை
இந்தக் கிறிஸ் மனிதர்கள் விவகாரத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் நோக்கில் எம் தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பல செய்திகளும் பரப்பட்டன. அது தான் மஹிந்த ராஜபக்ச அவர்களின் யாகத்திற்கு வேண்டிய 3001 தமிழ் பெண்களின் மார்பக ரத்தம் பற்றிய வதந்தியாகும். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் பாலையூற்றுக் கிராமத்தில் மக்களின் முழுமையான எதிர்கால அம்சங்களைக் கணித்துக் கூறக் கூடிய, நான்கு வயதுச் சிறுமியின் சாத்திரம் மூலமே மஹிந்தருக்கு ஆயுள் குறைவு என்றும், இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் அவர் இறந்து விடுவார் என்றும் சாத்திரம் சொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்குப் பரிகாரமாக 3001 தமிழ் பெண்களின் இரத்தம் தேவை என்றும் புரளிகள் கிளப்பி விடப்பட்டன. இதனைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்ட கிறிஸ் மனிதர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் மார்புப் பகுதியில் கத்தியால் கீறி விட்டுச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

தெளிவான செய்திகளை வெளியிடாத தமிழ் ஊடகங்கள் மூலம் அடிச்சது யோகம் அரச தரப்பினருக்கு. ஹி......ஹி....ஹி...
றந்த பிரபாகரன் இரு ஆண்டுகளுக்குள் வருவார்.
நிரூபனின் நாற்று வலை
நான்கு வயதுச் சிறுமியின் சாத்திரமானது மக்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் எனப் பல சேதிகளைச் சொல்லி நிற்கையில், இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தமக்கு மனதில் இன்னமும் புலி பற்றிய கிலி விலகி விடவில்லை எனும் உண்மையினை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவராக- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினைக் காட்டி அவர் பற்றியும் சாத்திரம் கேட்டிருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பிரபாகரன் வெளியே வருவார் என்று சொல்லப்பட்டிருக்கும் சாத்திரம் மூலம் அச்சத்தில் வாழும் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட நாட்டின் தலைவரின் உள் மனம் அவசரகாலச் சட்டத்தினை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதற்கும் சான்றாக அமைவது தான் கிறிஸ் மனிதன் விவகாரம்.
கிறிஸ் மனிதன் பற்றி வாய் திறந்தால் அவர் வதந்தியாளர்!

கிறிஸ் மனிதன் பற்றிய செய்திகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களால் அரச படையினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பயன்படுத்தப்படும் செய்திகள் என்றும் கூறும் இலங்கைக் காவல் துறையானது கிறிஸ் மனிதன் பற்றி யாராவது செய்தி கூறினால், அவர்களை வதந்தி பரப்புகின்றார் என்று கூறிக் கைது செய்து ஐயாயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடுவதில் குறியாக இருக்கிறது. பேஸ்புக்கில் கிறிஸ் மனிதன் விவாகரத்தினைத் தொடர்ந்து உருவாக்கபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிறிஸ் மனிதர்கள் குழுமத்தினர் பற்றிய முழுமையான தகவல்களைப் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளது இலங்கையின் சைபர் கிரைம் போலிஸ் படை.
நிரூபனின் நாற்று வலை
குடாநாட்டில் சீருடைத் தரப்பினரால் கிறிஸ் மனிதர்களை கண்டால் தமக்கு அறிவிக்கும் படி கோரும் துண்டுப் பிரசுரங்கள் ஒவ்வோர் நாளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அரச தரப்போ கிறிஸ் மனிதன் என்ற ஒருவர் நாட்டில் இல்லை என்று மறுப்புரை வழங்கி வருகின்றது.
ப்படியானால் யார் இந்தக் கிறிஸ் மனிதர்கள்:

*நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து மக்களைக் கடித்துக் காயப்படுத்தும் செயலில் ஈடுபடுவோர், பொது மக்களால் கைது செய்யப்படும் வேளைகளில் சீருடைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றிக் கூட்டிச் செல்லப்படுகின்றார்கள்.

*கிறிஸ் மனிதனாக வீடுகளுக்குள் நுழையும் வேளையில் பொது மக்களால் விரட்டப்படுவோர் இராணுவ முகாமினுள் தான் ஓடி அடைக்கலம் தேடிக் கொள்கிறார்கள்.
நிரூபனின் நாற்று வலை
*பொது மக்களால் கைது செய்யப்பட்டு, அடித்து உதை வாங்கினாலும் வாயைத் திறந்து தமது நோக்கம் என்ன என்பதைச் சொல்லாது, மௌனமாக இருந்து விட்டு, சம்பவ இடத்திற்கு பொலிஸாரோ அல்லது படையினரோ வரும் சமயத்தில் அவர்களோடு போய் மறைகிறார்கள் இந்த கிறிஸ் மனிதர்கள்.
அப்படியானால் யார் இந்தக் கிறிஸ் மனிதர்கள்?

ஹி....ஹி.....ஹி....விடை மேலே உள்ள மூன்று புள்ளிகளிலும் பொதிந்திருக்கிறது.
**************************************************************************
எவ்வளவு தான் துன்பங்கள் வந்தாலும் நாமெல்லோரும் புன்னகையே வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டால் வாழ்வில் வெறுப்புத் தோன்றாது அல்லவா. அது போலத் தான் தன் ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து மத்திய கிழக்கு நாடொன்றில் வாழ்ந்தாலும் வலைப் பதிவில் புன்னகையே வாழ்க்கை என வாழ்ந்து வருபவர் தான் சகோதரன் முஹமட் பாயிக்.

இவரைத் தான் இன்றைய பதிவின் பதிவர் அறிமுகம் வாயிலாகப் பார்க்கப் போகின்றோம். எப்பொழுதுமே குழந்தைகளோடு பழகுவதால் என்னவோ தெரியவில்லை, குழந்தைகளிடம் பல்பு வாங்கிய பல காமெடிகளைத் தன் வலைப் பதிவில் எழுதியிருக்கின்றார். முழுக்க முழுக்க மொக்கைப் பதிவுகள் எழுதினாலும், ஆங்காங்கே ஒரு சில காத்திரமான விடயங்களையும் தன் வலையில் தவழ விட்டிருக்கின்றார் சகோதரன் முஹமட் பைக்கியூ அவர்கள். 

புன்னகையே வாழ்க்கை வலைப்பூவிற்குச் செல்ல:
http://faaique.blogspot.com/
அப்புறம் என்ன பார்க்கிறீங்க. புன்னகையே வாழ்க்கையினையும் ஓடிப் போய்த் தரிசிக்கலாம் அல்லவா. 


பிற் சேர்க்கை: பதிவு பிடித்திருந்தால், ஓட்டுப் பட்டைகளில் பசக் பசக் என்று உங்கள் வீரத்தைக் காட்டி விட்டுப் போகலாம் தானே நண்பர்களே!

104 Comments:

கவி அழகன் said...
Best Blogger Tips

முதல் கிறிஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்
முதல் கிறிஸ்//

மக்கள் அச்சத்தில் வீட்டிற்கு வெளியே வர முடியாதவர்களாக வாழ்கிறார்கள். உமக்கு ஓவர் குசும்பு...

கவி அழகன் said...
Best Blogger Tips

அஹா வவுனியா பஸ் ஸ்டான் படம் போல

கவி அழகன் said...
Best Blogger Tips

கிறிஸ் மனிதனை வைத்து அரசியல் அலசல் , சாத்திரம் , என்று பூந்து விளயாடிட்டிங்க

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

பண்ற அக்கிரமம் எல்லாம் பண்ணிட்டு அந்தாள் சாமி கும்பிடறானே?

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

அஹா வவுனியா பஸ் ஸ்டான் படம் போல//

ஹா....ஹா...எல்லாப் படமும் போட்டால் பதிவு நீண்டு விடுமே...

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

கிறிஸ் மனிதனை வைத்து அரசியல் அலசல் , சாத்திரம் , என்று பூந்து விளயாடிட்டிங்க//

நெசமாவா சொல்லுறீங்க...
நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

பண்ற அக்கிரமம் எல்லாம் பண்ணிட்டு அந்தாள் சாமி கும்பிடறானே?//

அவருக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகம் பாஸ்,

தனிமரம் said...
Best Blogger Tips

மக்களை அடக்கி ஆளுவதற்கு எப்படி எல்லாம் இனவாதிகள் திட்டம் போட்டு அச்சம் ஊட்டுகிறார்கள் குரல் கொடுக்க வேண்டி அமைப்புக்கள் வேடிக்கை பார்க்கின்றது இப்படியே போனால் இன்னொரு கம்போடியா ஆகும் போல் இலங்கை!

பதிவளர் அறிமுகத்திற்கு நன்றி அவருக்கும் வாழ்த்துக்கள்

ஆகுலன் said...
Best Blogger Tips

பாஸ் பயபடாம எல்லாத்தையும் சொல்லுறீங்க.......

சாத்திரம் அருமை......

ஆகுலன் said...
Best Blogger Tips

கவி அழகன் said...
அஹா வவுனியா பஸ் ஸ்டான் படம் போல///

எதெல்லாமா பாப்பாங்க.....எனக்கும் அப்டித்தான் தெரியுது...ஏனேன்றால் எனக்கு தெரிந்தது அது ஒண்ணுதான்...

புதிய பதிவருக்கு வாழ்த்துக்கள்...

maruthamooran said...
Best Blogger Tips

பல இடங்களில் உண்மைகள் உறைக்கின்றன.

Unknown said...
Best Blogger Tips

நீங்க சொன்ன சாத்திரம் உண்மையா நடந்தா ரொம்ப சந்தோசம் நிரூ..

சசிகுமார் said...
Best Blogger Tips

இருக்கிற பிரச்சினைகள் பத்தாதுன்னு இவனுங்க வேற புது பிரச்சினையா...

Prabu Krishna said...
Best Blogger Tips

மொத்தத்தில் தமிழன் நிம்மதியாக இருக்கவே கூடாது அதுதான் இவன்களின் எண்ணம்.

கூடல் பாலா said...
Best Blogger Tips

கிறுக்குத் தனமான வேலை செய்கிறார்கள்

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

பல உண்மைகளை நாசுக்காக போட்டு உடைத்திருக்கிறீர்கள் நண்பா.. வாழ்த்துக்கள் அண்ஸ். கிரீஸ் மனிதன் பற்றி அதிகம் தெரியாதவர்கள் அவசரமாக படிக்கவேண்டிய ஒரே பதிவு.... இந்த பதிவு... (எப்புடி நம்ம விளம்பரம்..)

Unknown said...
Best Blogger Tips

உண்மை நிலவரத்தை தெளிவாக காட்டுகிறது உங்கள் பதிவு..துணிச்சலுக்கு பாராட்டுகள்.

Unknown said...
Best Blogger Tips

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றனர் # ஆதலால், இதனால் சகலமானவர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

M.R said...
Best Blogger Tips

நல்ல தெளிவான பதிவு

பதிலை தந்து கேள்வியை பின்னே வைக்கும் சாதுர்யம்

அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள்

வாக்களித்தாயிற்று நட்பே


ரமேஷ்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

கிரிஸ் மனிதன்..... ஹையோஓஓஒ.... எங்கட நாட்டில இல்லாததென எதுவுமில்லை அவ்வ்வ்வ்வ்:)).

வவுனியா பஸ் ஸ்ராண்ட்? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... மனம் எங்கேயோ போயிட்டுது...

காட்டான் said...
Best Blogger Tips

இந்த கிறீஸ் மனிதர்கள் முழுக்க முழுக்க அரச நாடகமேன்னு ஆதாரபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.. பதிவில் உங்கள் கடின உழைப்பு தெரிகிறது.. இப்படியான ஆழமான அலசல்கள் பதிவுலகில் பார்பது அபூர்வமே.. வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு .. உங்கள் வீட்டுக்கும் கிறீஸ் மனிதர்கள் வரப்போகிறார்கள்..ஹிஹி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

ம் ...

Unknown said...
Best Blogger Tips

பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மாப்ள...பகிர்வுக்கு நன்றி!

காட்டான் said...
Best Blogger Tips

என்னையா சின்னபுள்ளதனமா இருக்கேயா நாலு வயசு சிறுமிக்கு வருங்காலத்த கணிச்சு சொல்ல முடியுமா..? அட என்னட்டையும் ஒருத்தன் இருக்கான் கக்கா போனா கழுவதெரியாம என்னைய கூப்பிட்டு நாறடிக்கிறான்.. இந்த பிள்ளைய பெத்தவன் நல்லா கல்லா கட்டிடுவான்...

செங்கோவி said...
Best Blogger Tips

சரியான அலசல் நிரூபன்..நல்ல புலனாய்வுப் பத்திரிக்கை படித்த உணர்வு.

செங்கோவி said...
Best Blogger Tips

நீங்கள் சொல்கின்றபடி பார்த்தால், கிறிஸ் மனிதர்கள் வதந்தியல்ல, உண்மையென்றே தெரிகின்றது. இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தமிழ்க்கட்சிகள் முன்வரவில்லையா?

செங்கோவி said...
Best Blogger Tips

இலங்கையில் இருந்துகொண்டு, இத்தகைய காத்திரமான பதிவை வழங்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகின்றேன். கவனமாக இருங்கள்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

நான் அறிந்த வரை மகிந்தர் உந்த சாத்திரம் கேட்டுவிட்டு தான் இந்த கிரிஸ் மனிதன் என்ற மாயையை ஏவிவிட்டிருக்கார்... குறிப்பாக பெண்களை இலக்கு வைத்து தான் தாக்குகிறார்கள்.. அதிலும் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு மேற்க்கத்தைய பெண்ணின் மார்பை அறித்திருக்கிறான் கிரிஸ் மனிதன்..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ஆனால் எனக்கு உந்த சாத்திரங்களில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை.. அந்த திருகோணமலை சிறுமி சாத்திரம் சொல்லுகிற வீடியோ ஒன்று பார்த்தேன்.. முக்கியமாய் அந்த சிறுமியின் தாயை தூக்கி உள்ள போடனும்.. சுதந்திரமாய் இருக்க வேண்டிய வயசில இப்படி சாத்திரம் சொல்லுறா,அருள் வந்திருக்கு எண்டு வதைக்கிரத்துக்கு ..))

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///// அவை பொதுமக்களால் அரச படையினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பயன்படுத்தப்படும்/// ஆமா ஏற்கனவே உலக புகழ் பெற்ற இராணுவம் என்று பெயர் எடுத்திருக்கினம் பாருங்க...))

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

/////அப்படியானால் யார் இந்தக் கிறிஸ் மனிதர்கள்?///சந்தேகமே வேண்டாம்.. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் சிங்கள மாத்தையாக்கள், இதன் மூலம் மீண்டும் தமிழர்கள் தூண்டப்படுகிறார்கள் என்பதை..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

செங்கோவி said...

////நீங்கள் சொல்கின்றபடி பார்த்தால், கிறிஸ் மனிதர்கள் வதந்தியல்ல, உண்மையென்றே தெரிகின்றது. இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தமிழ்க்கட்சிகள் முன்வரவில்லையா?/// பாஸ் நாடளுமன்ன்றத்தில் தமிழ் கட்சிகள் வெறும் காட்சி பொருட்களாக மட்டும் தான் , அவர்களின் கதைகள் எல்லாம் அங்கே எடுபடாது.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

புது பதிவருக்கும் அறிமுகத்துக்கும் வாழ்த்துக்கள் ...

மகேந்திரன் said...
Best Blogger Tips

இவங்களை எல்லாம் கேட்குறதுக்கு ஆள் இல்லை சகோ
ஆட்டம் போடுறாங்க.....

இன்றைய பதிவர் அறிமுகம் முஹம்மது ப்ஹைகு
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள இவனுக்கு 3000 பெண்களின் ரத்தம் தேவைன்னா அது அவனுக்கு ஏற்கனவே எங்கட பிள்ளைகள் சிந்தியிருக்கார்கள் உத விட எத்தனையோ மடங்கு....!

ஆனா அந்த பச்சபுள்ளையிண்ட சாத்திரம் பலிச்சுடுன்னுதான் நான் நினக்கிறேன்.. !!!?சாஸ்த்திரம் எங்களுக்கு ஆதரவா இருந்தா அதையும் நம்பித்தான் பார்போமே.. ஹி ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அம்மாம் மாப்ள நானும் இதப்பத்தி படிச்சேன்.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இவர்களுக்கு ரானுவமும் உதவி வருவது வேதனைக்குரியது..

காட்டான் said...
Best Blogger Tips

வீட்டு முற்றமெல்லாம் இவர்கள் கழுவுகிறார்களாம்.. இதென்னையா பெரிய விசயம் பக்ஸ கு......... யே கழுவுறாங்கையா இவங்க...

 வேண்டாம் பதிவு எழுதாமலே என்னைய இஞ்ச கொஞ்சபேர் ஆபாச பதிவர்ன்னு சொல்லீபுட்டாங்க.. இதுல வேற நான் வாய கொடுத்து ........ புண்ணாக்க விரும்பல..!!?


காட்டான் குழ போட்டான்..

Mohamed Faaique said...
Best Blogger Tips

அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி..

என் பெயர் தமிழில் ஃபாஇக் / ஃபாயிக். இப்படி வரும்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

எப்படியெல்லாம் தமிழர்களுக்குத் துன்பம் தர இயலுமோ அப்படியெல்லம் செய்து களிப்படையும் கூட்டம்.

kobiraj said...
Best Blogger Tips

அண்ணே உண்மைகளை தைரியமாக சொல்லுகிறீர்கள்.உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் .

Yoga.s.FR said...
Best Blogger Tips

இந்த விடயம் இன்னும் ஆழமானது என்பது புரிகிறது!உங்களைக் காக்க யார் வருகிறார்கள் பார்க்கலாம் என்ற ஒரு விடயமும் இவ்விடயத்தில் பொதிந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்!அவசரகாலச் சட்ட நீக்கம் ஒரு காரணமாக இருக்கவே முடியாது!மேலும்,இது விடயத்தில் "எந்த" ஒரு வெளி நாட்டு தூதரகங்களோ,அரசாங்கங்களோ வாய் மூடி மவுனம் காப்பது ஏன் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்கிறார்கள்,ஏவி விட்டவர்கள்!எங்கே,எப்போது,எப்படி அடிக்க வேண்டும் என்பதை நாங்கள் மட்டுமல்ல சர்வதேசமும் புரிந்தேயுள்ளன!இது மண்டையில் உறைக்காமல்,அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால் "அவர்கள்" எதுவும் பேசாதிருக்கிறார்கள் என்று "இவர்கள்" நினைக்கிறார்கள்!நீதி சாவதில்லை!

Yoga.s.FR said...
Best Blogger Tips

வதந்தியைப் பரப்புபவர்களே,வதந்தியைப் பரப்பாதீர்கள்,குற்றம் என்று சொல்கிறார்கள்!எங்கே போய் முட்ட?

K said...
Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

K said...
Best Blogger Tips

ஈழ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கிறிஸ் மனிதர்கள்- துலங்கும் மர்மங்கள்!///

இன்னமும் முடிந்துவிடவில்லையா, அவர்களின் துன்பம்!

K said...
Best Blogger Tips

மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். ///

ஆனால் சில நாடுகள் அவற்றைக் கண்டும் காணாததுபோல நடந்துகொள்வதோடு மட்டுமல்லாது, ஆட்சியாளர்களுக்கு உதவியும் அல்லவா செய்து வருகின்றன!

K said...
Best Blogger Tips

சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது.///

தமிழர்களை வைத்துத்தானே அவர்கள் பொழைப்பு நடத்துகிறார்கள்!

K said...
Best Blogger Tips

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான அரச படையினரின் தாக்குதல்கள் தவிர்ந்த; இராணுவக் கட்டுப்பாட்டினுள் வாழும் மக்கள் மீதான இனவாத தாக்குதல் நடவடிக்கைகளுக்குச் சான்றாக இதுவரை காலமும் விளங்கிய வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் கோருதல், கொலை செய்தல் முதலிய செயற்பாடுகளிலிருந்தும் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது தான் இந்தக் கிறிஸ் மனிதர்கள் விவகாரம்.///

எப்படியாவது, எந்தவழியிலாவது தமிழர்களை அழிப்பதுதான் அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது!

K said...
Best Blogger Tips

2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வேரோடு அழித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் இறமை உள்ள அரசாங்கமானது, ////

ஐயா.... இலங்கை அரசுக்கு எங்கே இறைமை இருக்கிறது்? அதுதான் சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளுக்கு தாரைவார்த்து ரொம்ப காலமாச்சே!

Mohamed Faaique said...
Best Blogger Tips

///நடு இராத்திரி வேளையில் சென்று வீட்டின் வெளிப்புறத்தைக் கூட்டி அழகு பார்த்தல், பூங்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர்ப் பைப்பினைத் திறந்து நீரினை விரயமாக ஓட விட்டு விட்டு, எஸ்கேப் ஆ/////

அடப்பாவிகளா இப்படியெல்லாம் பன்ரானுங்களா..?????

Mohamed Faaique said...
Best Blogger Tips

///தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினைக் காட்டி அவர் பற்றியும் சாத்திரம் கேட்டிருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பிரபாகரன் வெளியே வருவார் ///

இது போன்ற கதைகள் தமிழர்கள் தமக்கு தாமே சொல்லிக் கொண்டு சந்தோசப் பட உருவாக்கப் பட்ட கதைகள் என்றே நினைக்கிறேன்.

K said...
Best Blogger Tips

தமிழ் முஸ்லிம் மக்களைத் தம் காலடியின் கீழ் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற தொடர்ச்சியான கொள்கையின் அடிப்படையிலும் தற்போது அரங்கேற்றி வருகின்ற நாடகம் தான் இந்த கிறிஸ் மனிதர்கள் விவகாரம்.////

இதில் ‘ தொடர்ச்சியான கொள்கையின் அடிப்படையில்’ என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாகும்! காலாதிகாலமாக சிங்களவனுக்கு ஒரே ஒரு கொள்கைதான்! அது - தமிழனை சாகடிக்க வேண்டும் என்பது!

K said...
Best Blogger Tips

இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட புலிப் போராளிகள் சிலரைக் கைப் பொம்மைகளாக்கி, அவர்களை வலுக்கட்ட்டாயப்படுத்தி தமது பொது மக்களை அச்சமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு செலுத்தும் நோக்கினை நிறைவேற்றலாம் என கனவு கண்டார்கள் அரச தரப்பினர்.////

பகல் கனவு!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//பெண்களின் மார்பு இரத்தம் மூலம் மஹிந்தரின் நீண்ட ஆயுள் வேண்டி யாகம் நடாத்துதல்!// இது மாதிரியான செய்தியோ,வதந்தியோ யாரிடமிருந்து வருகிறதென தெரியவில்லை.ஆனால் இறுதிப் போரின் போது இத்தனை தமிழர்களை ராஜபக்சே பலி கொடுப்பதாக வேண்டுதலாகவும்,அந்த வேண்டுதலை நிறைவேற்றவே இந்திய கோயில்கள் உட்பட ராஜபக்சே யாகம் செய்ததாகவும் சிங்களப் பெண் ஒருத்தி சொன்னாள்.

K said...
Best Blogger Tips

மேற்படி சம்பவங்களோடு தொடர்புடைய சீருடைத் தரப்பினரும், யாழில் இயங்கி வரும் அரசோடு சேர்ந்தியங்கும் ஓர் கட்சியும் பாரியளவில் மூக்குடைபட்டிருந்தார்கள்.///

காரணம் மக்களுக்கு இருக்கும் தெளிவுதான்!

K said...
Best Blogger Tips

இன்னோர் விடுதலைப் போராட்டம் பற்றிச் சிந்திக்க கூடாது எனும் நோக்கிலும் தான் இந்தக் கிறிஸ் மனிதர்கள் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ///

உண்மை! ஆனால் இது எதிர்மறை விளைவுகளையே கொடுக்கும்!

K said...
Best Blogger Tips

இலங்கை அரசாங்கத்தின் ஆட்சிக்குத் தீங்கு விளைப்போரை, ஜனநாயக நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள், பேரணி மூலம் குழப்ப முயல்வோரை, புரட்சிகரமான விடுதலைச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை, அரசதரப்பிற்கெதிராக எழுதும் ஊடகவியலாளர்களை அடக்கி கைது செய்த்து கால வரையற்ற ஜெயில் தண்டனை வழங்க இந்த அவசர காலச் சட்டம் நடை முறையில் உள்ளது.///

அரக்கர்களின் ராஜாங்கத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

K said...
Best Blogger Tips

அவசர காலச் சட்டமும் பயங்கரவாத தடைச் சட்டமும் வெவ்வேறாகப் பெயரளவில் இருந்தாலும் இரண்டுமே ஒரே நோக்கத்தில் தமிழ் மக்களின் குரல் வளைகளை நெரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை எனலாம். ///

சாதாரண வீதிப் போக்குவரத்து சட்டத்தைக்கூட, தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இலங்கை அரசு பயன்படுத்தி வருவதாக அறிந்துள்ளேன்!

K said...
Best Blogger Tips

வெளி நாட்டு இராஜதந்திர அமைப்புக்களுக்கு இலங்கையில் மீண்டும் பெயர் குறிப்பிடாத வன்முறையாளர்கள் கிறிஸ் மனிதர்கள் என்ற பெயரில் உலவுகிறார்கள் எனும் நோக்கில் ஓர் செய்தியினை வெளியிட்டு மக்கள் மீதான அரச படைகளின் கண்காணிப்பினை இறுக்கி வைத்திருப்பதற்கும் இந்த கிறிஸ் மனிதன் விவகாரமே உதவியாக இருக்கப் போகின்றது. ///

ஆனால் வெளிநாடுகளுக்கு இது யாருடைய வேலை என்று மிக நன்றாகத் தெரியும்!

K said...
Best Blogger Tips

அவசரகாலச் சட்டப் பிரேரணை பற்றிய விவாதம் இலங்கைப் பாராளுமன்றத்த்ல் கொண்டு வரப்பட்ட சமயம் பதுளையில் தொடங்கிய கிறிஸ் மனிதன் விவகாரம் தற்போது யாழ்ப்பாணம் வரை வந்து நிற்கிறது.///

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தால் சந்தேகப்பட்டு விடுவார்கள் என்பதால்!

K said...
Best Blogger Tips

ஆனால் மக்களிடம் பிடிபடமால் சிரூடைத் தரப்பினரின் உதவியோடு தப்பிச் செல்வதால் இவர்களுக்கான பெயர் கிறிஸ் மனிதன் என்பது நன்றாகவே பொருந்திக் கொள்கிறது. ///

உண்மை!

K said...
Best Blogger Tips

நாளடைவில் இது கொழும்பில் வாழும் தமிழர்களின் இல்லங்களிற்குப் பரவினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.///

அதற்கு சில காலம் எடுக்கலாம்! ஏனென்றால் அவர்களின் நோக்கம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிறைவேறவில்லை!

K said...
Best Blogger Tips

கிறிஸ் மனிதர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளின் மீது கத்தியால் கீறுதல், அவர்களின் வீடுகளுக்கு நடு இராத்திரி வேளையில் சென்று வீட்டின் வெளிப்புறத்தைக் கூட்டி அழகு பார்த்தல், பூங்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர்ப் பைப்பினைத் திறந்து நீரினை விரயமாக ஓட விட்டு விட்டு, எஸ்கேப் ஆகி பொது மக்கள் மத்தியில் மர்ம மனிதர்கள் இருப்பது போன்ற விவகாரத்தினை உருவாக்குதல், தனியாகப் பெண்கள் உள்ள வீடுகளிற்குச் சென்று அவர்களின் மார்பகங்களைக் கத்தியால் குத்துதல், அங்க சேஷ்டை செய்து விட்டு அகப்படாமல் ஓடுதல் முதலிய செயற்பாடுகளில் தான் ஈடுபட்டார்கள்.///

இது ஆரம்பம் மட்டுமே! போகப் போக கொலையும் செய்வார்கள்!

K said...
Best Blogger Tips

இந்தக் கிறிஸ் மனிதர்கள் விவகாரத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் நோக்கில் எம் தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பல செய்திகளும் பரப்பட்டன. ///

இதில் ‘ எமது ‘ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ‘ சிங்களவனுக்கு விலை போன’ என்ற சொல்லை ரீப்ளேஸ் செய்யவும்!

K said...
Best Blogger Tips

அது தான் மஹிந்த ராஜபக்ச அவர்களின் யாகத்திற்கு வேண்டிய 3001 தமிழ் பெண்களின் மார்பக ரத்தம் பற்றிய வதந்தியாகும். ////

விஷ வதந்தி!

K said...
Best Blogger Tips

கிறிஸ் மனிதன் பற்றிய செய்திகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களால் அரச படையினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில்....////

அவர்களுக்கு நற்பெயர் என்ற ஒன்று இருக்கிறதா?

K said...
Best Blogger Tips

இலங்கைக் காவல் துறையானது கிறிஸ் மனிதன் பற்றி யாராவது செய்தி கூறினால், அவர்களை வதந்தி பரப்புகின்றார் என்று கூறிக் கைது செய்து ஐயாயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடுவதில் குறியாக இருக்கிறது. ////

தமிழனை இப்படியுமா சுரண்டுவார்கள்? வெட்கம் கெட்டவர்கள்!

K said...
Best Blogger Tips

பேஸ்புக்கில் கிறிஸ் மனிதன் விவாகரத்தினைத் தொடர்ந்து உருவாக்கபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிறிஸ் மனிதர்கள் குழுமத்தினர் பற்றிய முழுமையான தகவல்களைப் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளது இலங்கையின் சைபர் கிரைம் போலிஸ் படை.////

முடியல!

K said...
Best Blogger Tips

குடாநாட்டில் சீருடைத் தரப்பினரால் கிறிஸ் மனிதர்களை கண்டால் தமக்கு அறிவிக்கும் படி கோரும் துண்டுப் பிரசுரங்கள் ஒவ்வோர் நாளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ///

தங்களைத் தாங்களே நோட்டீஸ் போட்டு எதுக்கு தேடுகிறார்கள்?

K said...
Best Blogger Tips

அரச தரப்போ கிறிஸ் மனிதன் என்ற ஒருவர் நாட்டில் இல்லை என்று மறுப்புரை வழங்கி வருகின்றது.///

ஒரு வேளை நோட்டீஸ் கொடுப்பவர்கள் சரத் ஃபொன்சேகாவின் ராணுவத்தினரோ?

K said...
Best Blogger Tips

*நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து மக்களைக் கடித்துக் காயப்படுத்தும் செயலில் ஈடுபடுவோர், பொது மக்களால் கைது செய்யப்படும் வேளைகளில் சீருடைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றிக் கூட்டிச் செல்லப்படுகின்றார்கள்///

என்ன சார் நீங்க? தங்களைத் தாங்களே விசாரிக்க முடியுமா?

K said...
Best Blogger Tips

*கிறிஸ் மனிதனாக வீடுகளுக்குள் நுழையும் வேளையில் பொது மக்களால் விரட்டப்படுவோர் இராணுவ முகாமினுள் தான் ஓடி அடைக்கலம் தேடிக் கொள்கிறார்கள்.///

இதில் என்ன ஆச்சரியம்? எங்கிருந்து வந்தார்களோ அங்குதானே போக முடியும்?

K said...
Best Blogger Tips

*பொது மக்களால் கைது செய்யப்பட்டு, அடித்து உதை வாங்கினாலும் வாயைத் திறந்து தமது நோக்கம் என்ன என்பதைச் சொல்லாது, மௌனமாக இருந்து விட்டு, சம்பவ இடத்திற்கு பொலிஸாரோ அல்லது படையினரோ வரும் சமயத்தில் அவர்களோடு போய் மறைகிறார்கள் இந்த கிறிஸ் மனிதர்கள்.
அப்படியானால் யார் இந்தக் கிறிஸ் மனிதர்கள்?///

இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமோ?

K said...
Best Blogger Tips

பிற் சேர்க்கை: பதிவு பிடித்திருந்தால், ஓட்டுப் பட்டைகளில் பசக் பசக் என்று உங்கள் வீரத்தைக் காட்டி விட்டுப் போகலாம் தானே நண்பர்களே!///

பசக் பசக் என்றால்? புரியவில்லை!

ஓட்டுப்பட்டைகளுக்கு முத்தம் கொடுக்கணுமா சார்?

இண்ட்லி பட்டைக்கு ஒண்ணு குடுத்துப் பார்த்தேன் லாப் டப் ஈரமாச்சு!

K said...
Best Blogger Tips

புன்னகையே வாழ்க்கை வலைப்பூவிற்குச் செல்ல:
http://faaique.blogspot.com/
அப்புறம் என்ன பார்க்கிறீங்க. புன்னகையே வாழ்க்கையினையும் ஓடிப் போய்த் தரிசிக்கலாம் அல்லவா. ///

ஆமா, நண்பர் செம கில்லாடி! நேத்திக்கு என்னோட ப்ளாக் வந்து, செம கடி கடிச்சுட்டுப் போயிருக்காரு!

சரியான நகைச்சுவைப் பேரொளி போல!

வாழ்த்துக்கள் நண்பா!

சுதா SJ said...
Best Blogger Tips

ரெம்ப துணிச்சலாய் எழுதுறீங்க பாஸ்
அட்டகாசம்....

K said...
Best Blogger Tips

@செங்கோவி

இலங்கையில் இருந்துகொண்டு, இத்தகைய காத்திரமான பதிவை வழங்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகின்றேன். கவனமாக இருங்கள்.///

நானும் அதைத்தான் சொல்கிறேன்! ஓவர் கான்ஃபிடெண்ட் உடம்புக்கு ஆகாது!

சுதா SJ said...
Best Blogger Tips

உண்மைதான் பாஸ் நீங்க சொல்லுறது....

கிரிஸ் பேயி கிரிஸ் பேயி என்று சொல்லி இவங்களே ஆக்கள செட் பண்ணி செய்யுறாங்க..... நம்மள கடைசிவரை அடிமையாகவே வைத்து இருக்க இவங்க
பண்ணுற புது பிளான் இது.....
இப்படி ஒரு பீதியை கிளப்பி தங்கள் ராணுவ ஆக்கிரமிப்புக்கு
புது நியாயத்தை உருவாக்க நினைக்குறாங்க......

சுதா SJ said...
Best Blogger Tips

அதுசரி......

ராஜபக்ஷ , கோத்தபாயா என்று ரெண்டு கிரிஸ் பேய் நம்ம நாட்டை ஆளும் போது
நாட்டுக்குள்ள குட்டி குட்டி கிரீஸ் பேயுங்க வரத்தான் செய்யும் ஹீ ஹீ

மாய உலகம் said...
Best Blogger Tips

வருந்ததக்க விசயம் நமது மக்களை நன்றாக வாழவே விட மாட்டாங்க்ய போலருக்குதே.... ஒன்று போனால் இன்னொன்று கொடுமைகளை செய்துகோண்டே இருக்கிறார்களோ... இன்னும் எவ்வளவு நாள் தான் இதையெல்லாம் மற்ற நாடுகள் வேடிக்கை பார்க்குமோ.... எல்லா கொடுமையும் செஞ்சுட்டு அந்த நாதாரி சாமி கும்பிட்டா சரியா போயிருமா... சாமி என்ன நம்ம நாட்டு அரசியல்வாதியா.... புத்திக்கெட்ட அரக்கன்கள்...ச்சே

மாய உலகம் said...
Best Blogger Tips

சகோதரன் முஹமட் பைக்கியூ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

///2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வேரோடு அழித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் இறமை உள்ள அரசாங்கமானது, மீண்டும் மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் நோக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களைத் தம் காலடியின் கீழ் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற தொடர்ச்சியான கொள்கையின் அடிப்படையிலும் தற்போது அரங்கேற்றி வருகின்ற நாடகம் தான் இந்த கிறிஸ் மனிதர்கள் விவகார///


டக்குண்ணு உண்மையை போட்டு
உடைச்சீங்க பாருங்க அங்கதான் பாஸ் நிக்குறீங்க,

அம்பலத்தார் said...
Best Blogger Tips

கிரீஸ்மனிதனைவைத்து சமகால அரசியல் நிலவரத்தை அலசி ஆராய்ந்துவிட்டியளே. தப்புச்செய்தவனிற்கு ஆள்மனதில் ஒருபயம் எப்பவும் இருந்துகொண்டேயிருக்கும்.ராஜபக்சவிற்கு சாத்திரம் சொல்லும் ஜோசியர், பரிகாரம் தேடும் சாமியார்களிற்கு நல்லகாலம் என்பது புரிகிறது

Mohamed Faaique said...
Best Blogger Tips

மலை நாட்டுல ஆரம்பித்த இந்தத் தொல்லை வடக்கு நோக்கி போனதில் நமக்கு நிம்மதி. கொஞ்ச நாளா, நம்ம ஆளுங்களோட நிம்மதியே போயிருந்தது.
அராங்கத்தின் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இந்த செயல்களின் மூலம் இல்லாமல் போய் விட்டது.

shanmugavel said...
Best Blogger Tips

//மீண்டும் மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் நோக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களைத் தம் காலடியின் கீழ் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற தொடர்ச்சியான கொள்கையின் அடிப்படையிலும் தற்போது அரங்கேற்றி வருகின்ற நாடகம் தான் இந்த கிறிஸ் மனிதர்கள் விவகாரம்.//

அடப்பாவிகளா!

Thenammai Lakshmanan said...
Best Blogger Tips

இப்படி எல்லாம் கொடுமைகள் வேறு பெண்களுக்கு நடக்கிறதா.. பாவம்..:(

shanmugavel said...
Best Blogger Tips

பல உண்மைகளை அறிந்துகொண்டேன் நிரூபன்,பகிர்வுக்கு நன்றி

Anonymous said...
Best Blogger Tips

ஏன்டா ஏன்டா..................ஏன்டா இப்படி எல்லாம் நடக்கு?

என் புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/jaffna.html

K.s.s.Rajh said...
Best Blogger Tips

சாரி இரவாகிவிட்டது நோ கமணட் ஒன்லி ஓட்டு மட்டும்....

Rizi said...
Best Blogger Tips

நிறைய விஷயம் சொல்லியிருக்கியல் படிச்சிட்டு வரேன்..

Rizi said...
Best Blogger Tips

@Mohamed Faaique said...


//என் பெயர் தமிழில் ஃபாஇக் / ஃபாயிக். இப்படி வரும்.//

உங்க பெயர் நிறைய பேர் வாயில நுழைய மாட்டேங்குது.. பேசாம வாயில் நுழையிர பேரா வெச்சிடுங்க பாஸ்,,

Rizi said...
Best Blogger Tips

//இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிறிஸ் மனிதர்கள் குழுமத்தினர் பற்றிய முழுமையான தகவல்களைப் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளது இலங்கையின் சைபர் கிரைம் போலிஸ் படை//

அப்பாடா நான் அந்த குழுமத்துல இல்ல,,

Riyas said...
Best Blogger Tips

நீங்கள் சொல்லிய தரவுகளை வைத்து பார்க்கும் போது யார் அந்த கிறீஸ் மனிதர்கள் என புரிகிறது...

எப்போதும் சொல்வது போல..

இதுவும் கடந்து போகலாம்..

கார்த்தி said...
Best Blogger Tips

அவசர கால சட்டம் நீக்கப்பட்டாகிவிட்டது. இன்னமும் கிறீஸ் மனிதர்கள்... எனக்கு ஒண்ணுமா விளங்கல!!

Unknown said...
Best Blogger Tips

நீங்களாச்சும் தெளிவா ஒரு முடிவ சொல்லுவீங்கன்னு பாத்தா...

Unknown said...
Best Blogger Tips

இம்புட்டு நேரத்துக்கப்புறம் வந்து கமென்ட் பண்றனே...கடை ஓனர் கண்டுக்குவாரா?

Unknown said...
Best Blogger Tips

தெளிவா விளக்கமா செய்முறை படம் போட்டாலே நம்மள மாதிரி ஜந்துக்களுக்கு புரியாது பாஸ்..இப்பிடி சொல்லி இருக்கீங்க..எங்க...

Unknown said...
Best Blogger Tips

தெளிவான அரசியல் பார்வை நிரூபன் பாஸ்!
தெளிவாய் எல்லாத்தையும் அலசி இருக்கீங்க..அது தான் உண்மையான காரணங்கள்!!

Unknown said...
Best Blogger Tips

போனா போகுது நூறாவது கமென்ட் நான் தான்!

பிரணவன் said...
Best Blogger Tips

என்ன செய்தாலும் தெய்வம் நின்று கொள்ளும். . .

Angel said...
Best Blogger Tips

படிக்கவே பயங்கரமா இருக்கே .

KANA VARO said...
Best Blogger Tips

3001 தமிழ் பெண்களின் //

எவ்வளவு எடுத்திட்டாங்க. இன்னும் எவ்வளவு இருக்காம்?. எங்கட சனம் படுற பாட்டை நினைக்க ரத்த கண்ணீர் தான் வடிக்கனும்.

Anonymous said...
Best Blogger Tips

நன்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்..நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சர்யம் தான் சகோதரே...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails