Showing posts with label இனவாதம். Show all posts
Showing posts with label இனவாதம். Show all posts

Sunday, August 5, 2012

முஸ்லிம்களை பூண்டோடு அழிக்க தயாராகும் இலங்கை அரசு!

முஸ்லீம் ஈழம் கோரி போரடத் தயாராகும் ஈழ முஸ்லிம்கள்! 

அனைத்து வலைப் பதிவுச் சொந்தங்களுக்கும் நாற்று குழுமத்தின் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!
வாங்க மக்கள்ஸ்...சிங்கள இனவாதிகளுடன் முஸ்லிம் மக்கள் ரொம்ப நாளா ஒண்ணா வாழ்றாங்களாம்! அது போல தமிழ் மக்களும் வாழப் பழகிக்கனும். ஈழ மக்கள் சிங்களவர்களை எதிரிங்க போல பார்ப்பதை நிறுத்திட்டு, ஓடும் புளியம் பழமும் போல ஒண்ணா இணைஞ்சிருக்கிற முஸ்லிம் மக்களைப் போல வாழக் கத்துக்கனும்! இப்படிச் சொன்னவர் வேறு யாரும் இல்லைங்க! நம்ம பதிவுலக தீர்க்கதரிசி - சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறப் போகிற அண்ணன் சுவனப்பிரியன் தானுங்க! அவர் போன வருசம் அக்டோபர் மாசத்துல சொன்னாரு! இப்போ தானுங்க அந்த வார்த்தையை நம்ம சிங்கள இனவாதிங்க நெசமாக்கியிருக்காங்க.

Thursday, August 2, 2012

ஊடகங்களின் வாயை அடைக்கும் ஸ்ரீலங்காவின் மகிந்த வம்சம்!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? சாப்பிட்டாச்சா?
இன்றைய நவீன தொழில்நுட்ப விருத்தியின் காரணமாக சுயாதீன ஊடகங்களின் வளர்ச்சி என்பது வளர்ந்த நாடுகளில் தாவிப் பிடிக்க முடியாத எல்லையினை எட்டியுள்ளது எனலாம். ஆனால் ஓர் இனத்தின் இரு கண்களுள் ஒன்றாக விளங்கும் மொழி வளர்ச்சியினைச் சிதைக்கும் நோக்கில் ஊடகங்கள் மீது சுருக்கு கயிறு வீசுகின்ற அசிங்கமான செயல் இலங்கையில் மாத்திரம் தான் இன்றும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 1983ம் ஆண்டு தென்னாசியாவில் மிகப் பெரியதும், பழமை வாய்ந்ததுமான யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் பேரினவாதிகளின் தமிழர்களின் தாய் மொழியினைச் சிதைக்கின்ற செயற்பாடு ஆரம்பமாகின்றது.

Friday, May 18, 2012

மண்டை ஓடுகளில் ரத்தம் குடித்த சிங்களப் பேய்களும் பேரினவாதிகளும்!

கைகளில் சுடுகலன்
கனரக ஆயுதங்களின்
திணிப்பில் கற்பழிப்புக்கள்
மெய்யினில் தமிழர் மீதான
வெறியினை வெளிப்படுத்தும்
அங்க அடையாளங்கள்!

Friday, April 6, 2012

ஈழத் தமிழர்களே! அடிச்சுக்கிட்டு சாகுங்கடா!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கீமூனைச் சந்திக்க வேண்டும் என மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஒரு பெண் ஓடோடி வந்தாள். அவள் பெயரை காவலர்கள் கேட்டார்கள். அதற்கு அவளோ தன் பெயர் "சலீமா" என்று உரைத்தாள். "பான்கிமூன் பயங்கர பிசியாக இருக்காரே!" என ஐநா சபையில் பணி புரியும் ஊழியர்கள் கூறியும், நீ செவிமடுக்காதவளாய்; என்னைச் சந்திக்க ஓடோடி வந்திருக்கிறாயே! அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார் பான்கிமூன்! 

Tuesday, February 21, 2012

சிங்கள தேசத்திற்கு ஆப்படிக்க தயாராகும் சர்வதேசம் - மனங் கலங்கும் மகிந்தர்!

இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக,தமிழர்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு தக்கதோர் சக்தி ஈழத்தில் இல்லை என்கின்ற துணிவில் இந்தியா, மற்றும் சீனாவின் செல்லப் பிள்ளையாக அவர்கள் மடியில் படுத்துறங்கியவாறு, உலக நாடுகளையும், உலகில் வாழும் மனிதாபிமானம் மிக்க அமைப்புக்களையும் ஏமாற்றி வந்தது இலங்கை அரசு. பிரபாகரனுக்குப் பின்னரான சகாப்தம் எப்போது வருமென இலவு காத்த கிளியாக காத்திருந்த சிங்கள இனவாதிகள்; மே 17ம் திகதி 2009ம் ஆண்டின் பின்னர் ஈழத்தில் இடம் பெற்ற அசாதாரண மாற்றங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இன்று தான் பதில் வந்ததோ!
பாவி உன் கண்களும் செய்த பாவத்தை நினைத்து அழுகின்றதோ?

Monday, September 26, 2011

சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை!

இலங்கையில் பல ஆண்டுகளாக இடம் பெற்ற விடுதலை வேண்டிய மக்களின் ஈழப் போரினை- பயங்கரவாதிகளின் போர் என்று உலகமெங்கும் பரப்புரை செய்து உலக நாடுகளின் அரவணைப்புடன் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசாங்கமானது தற்போது தமிழர்களுக்கான தீர்வினைப் பின் தள்ளி வருகின்றது. புலிகளின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பின்னர்; ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று தன்னுடைய மறைமுக ஆயுத பலப் பிரயோகத்தின் மூலம் (துப்பாக்கி முனையில்) மக்களின் உணர்வுகளை அடக்கி; மக்களுக்கு வசந்த வாழ்வை வழங்கி வருவதாக கபட நாடகமாடி வருகின்றது.

Monday, September 5, 2011

ஈழ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கிறிஸ் மனிதர்கள்- துலங்கும் மர்மங்கள்!

ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றினை உற்று நோக்கினால், காலதி காலமாக அராஜகத்திற்கும், இனவாதக் கொள்கைக்கும் பெயர் போனவர்களாக விளங்கும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீது தமது முழுமையான பலத்தினைப் பிரயோகித்து அவர்களை அடக்கி, அம் மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க