இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக,தமிழர்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு தக்கதோர் சக்தி ஈழத்தில் இல்லை என்கின்ற துணிவில் இந்தியா, மற்றும் சீனாவின் செல்லப் பிள்ளையாக அவர்கள் மடியில் படுத்துறங்கியவாறு, உலக நாடுகளையும், உலகில் வாழும் மனிதாபிமானம் மிக்க அமைப்புக்களையும் ஏமாற்றி வந்தது இலங்கை அரசு. பிரபாகரனுக்குப் பின்னரான சகாப்தம் எப்போது வருமென இலவு காத்த கிளியாக காத்திருந்த சிங்கள இனவாதிகள்; மே 17ம் திகதி 2009ம் ஆண்டின் பின்னர் ஈழத்தில் இடம் பெற்ற அசாதாரண மாற்றங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
![]() |
| பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இன்று தான் பதில் வந்ததோ! பாவி உன் கண்களும் செய்த பாவத்தை நினைத்து அழுகின்றதோ? |
|
|

