இலங்கையில் பல ஆண்டுகளாக இடம் பெற்ற விடுதலை வேண்டிய மக்களின் ஈழப் போரினை- பயங்கரவாதிகளின் போர் என்று உலகமெங்கும் பரப்புரை செய்து உலக நாடுகளின் அரவணைப்புடன் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசாங்கமானது தற்போது தமிழர்களுக்கான தீர்வினைப் பின் தள்ளி வருகின்றது. புலிகளின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பின்னர்; ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று தன்னுடைய மறைமுக ஆயுத பலப் பிரயோகத்தின் மூலம் (துப்பாக்கி முனையில்) மக்களின் உணர்வுகளை அடக்கி; மக்களுக்கு வசந்த வாழ்வை வழங்கி வருவதாக கபட நாடகமாடி வருகின்றது.
|
|

